Qurani·قرآني
தமிழ்

நேர்மையானவரின் செய்தியை ஏற்றுக்கொள்ளுதல்

22 ஹதீஸ்கள் · #7246–7267

ஹதீஸ் 7246 — Sahih al Bukhari 95:1
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا أَوْ قَدِ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ قَالَ ‏ "‏ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَمُرُوهُمْ ـ وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا ـ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ ‏"‏‏.‏
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது, நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டுவந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்” என்று சொன்னார்கள். மேலும், “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார் கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள் ளேன். சிலவற்றை நினைவில் வைக்க வில்லை.4 அத்தியாயம் :
ஹதீஸ் 7247 — Sahih al Bukhari 95:2
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ ـ أَوْ قَالَ يُنَادِي ـ لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا ـ وَجَمَعَ يَحْيَى كَفَّيْهِ ـ حَتَّى يَقُولَ هَكَذَا ‏"‏‏.‏ وَمَدَّ يَحْيَى إِصْبَعَيْهِ السَّبَّابَتَيْنِ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (நோன்பின்போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் ‘தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும்தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.) அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் தம் இரு கைகளையும் ஒன்றுசேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரு சுட்டுவிரல்களையும் நீட்டிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 7248 — Sahih al Bukhari 95:3
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ بِلاَلاً يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் (முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கின்ற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 7249 — Sahih al Bukhari 95:4
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا فَقِيلَ أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ ‏ "‏ وَمَا ذَاكَ ‏"‏‏.‏ قَالُوا صَلَّيْتَ خَمْسًا‏.‏ فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத் களாகத் தொழுவித்தார்கள். அப்போது அவர்களிடம், “தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், “ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர் களே?” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இருமுறை செய்தார்கள். (இது தொழுகைக்கான) ‘சலாம்’ கொடுத்தபிறகு (நடந்தது).7 அத்தியாயம் :
ஹதீஸ் 7250 — Sahih al Bukhari 95:5
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنِ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقَصُرَتِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهِ، أَمْ نَسِيتَ فَقَالَ ‏ "‏ أَصَدَقَ ذُو الْيَدَيْنِ ‏"‏‏.‏ فَقَالَ النَّاسُ نَعَمْ‏.‏ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ، ثُمَّ رَفَعَ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள்தான் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நீளமாக சஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்திப் பின்னர் “அல்லாஹு அக்பர்” என்று சொன்னார்கள். பின்னர் தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தா செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8 அத்தியாயம் :
ஹதீஸ் 7251 — Sahih al Bukhari 95:6
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا‏.‏ وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் ‘குபா’ எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 7252 — Sahih al Bukhari 95:7
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا‏}‏ فَوُجِّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَصَلَّى مَعَهُ رَجُلٌ الْعَصْرَ، ثُمَّ خَرَجَ فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَّهُ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ‏.‏ فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ فِي صَلاَةِ الْعَصْرِ‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்திஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். ஆகவே, உயர்ந்தோன் அல்லாஹ் “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பிவிடுகிறோம்” எனும் (2:144 ஆவது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர் தொழுகையில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குழுவினரைக் கடந்து சென்றபோது, “நபி (ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்துகொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 7253 — Sahih al Bukhari 95:8
حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ الأَنْصَارِيَّ وَأَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَأُبَىَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ وَهْوَ تَمْرٌ فَجَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ‏.‏ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أَنَسُ قُمْ إِلَى هَذِهِ الْجِرَارِ فَاكْسِرْهَا، قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى انْكَسَرَتْ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி), அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்களை உடைத்தெறியும்” என்று சொன்னார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களது சாடியொன்றை எடுத்து அதன் அடிப் பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11 அத்தியாயம் :
ஹதீஸ் 7254 — Sahih al Bukhari 95:9
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأَهْلِ نَجْرَانَ ‏ "‏ لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ ‏"‏‏.‏ فَاسْتَشْرَفَ لَهَا أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ‏.‏
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளி டம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ் வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 7255 — Sahih al Bukhari 95:10
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (எனது) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா ஆவார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.