حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِقُبَاءٍ كَانَ بَيْنَهُمْ شَىْءٌ، فَخَرَجَ يُصْلِحُ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ بِلاَلٌ إِلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ فَقَالَ يَا أَبَا بَكْرٍ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ حُبِسَ وَقَدْ حَانَتِ الصَّلاَةُ، فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ قَالَ نَعَمْ إِنْ شِئْتَ. فَأَقَامَ بِلاَلٌ الصَّلاَةَ، وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَكَبَّرَ لِلنَّاسِ، وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ يَشُقُّهَا شَقًّا، حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيحِ. قَالَ سَهْلٌ التَّصْفِيحُ هُوَ التَّصْفِيقُ. قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ الْتَفَتَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِ، يَأْمُرُهُ أَنْ يُصَلِّيَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدَهُ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى لِلنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَىْءٌ فِي الصَّلاَةِ أَخَذْتُمْ بِالتَّصْفِيحِ إِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ ". ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ " يَا أَبَا بَكْرٍ، مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ ". قَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ يَنْبَغِي لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘குபா’வில் குடியிருந்த பனூ அம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடையே ஏதோ (தகராறு) இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களி டையே சமரசம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்குத் தாமதமாகிறது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே, மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்கள். “நீர் விரும்பினால் நடத்துகிறேன்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தொழு கைக்கு இகாமத் சொன்னதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னே சென்றார்கள். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தும் முகமாக) கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும் பிப் பார்க்கமாட்டார்கள். ஆயினும், மக்கள் அதிகமாகக் கைதட்டியதால் திரும்பிப் பார்த்தார்கள். (வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, (திரும்பாமல்) அப்படியே பின்னால் நகர்ந்து வரிசையில் நின்றுகொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி “மக்களே! தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண் களுக்குரியதாகும். எனவே, தொழும் போது ஒருவருக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவர் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும்” என்றார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, “அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அபூகுஹா ஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை” எனக் கூறி னார்கள்.13 அத்தியாயம் :
ஹதீஸ் 1219 — Sahih al Bukhari 21:23
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نُهِيَ عَنِ الْخَصْرِ، فِي الصَّلاَةِ. وَقَالَ هِشَامٌ وَأَبُو هِلاَلٍ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. வேறு இரு அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்களே இவ்வாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது தடுக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1221 — Sahih al Bukhari 21:25
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا عُمَرُ ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ " ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ ".
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் துணைவியரில் ஒருவரது இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படை வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று என் நினைவுக்கு வந்தது. அது எங்களி டம் ‘ஒரு மாலைப்பொழுதோ’ அல்லது ‘ஓர் இரவுப் பொழுதோ’ இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளை யிட்டேன்” என விளக்கினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1222 — Sahih al Bukhari 21:26
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُذِّنَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَلاَ يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لاَ يَدْرِي كَمْ صَلَّى ". قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِذَا فَعَلَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ قَاعِدٌ. وَسَمِعَهُ أَبُو سَلَمَةَ مِنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘பாங்கு’ (தொழுகை அறிவிப்பு) சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுதுகொண்டிருக்கும் மனிதரி டம் “நீ இதுவரை நினைத்திராதவற்றை யெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதையே அறியாதவராகிவிடுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இவ்வாறு உங்களில் ஒருவருக்கு (மறதி) ஏற்பட்டால், அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1223 — Sahih al Bukhari 21:27
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، فَلَقِيتُ رَجُلاً فَقُلْتُ بِمَ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لاَ أَدْرِي. فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى. قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي، قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து “நேற்றிரவு இஷாவில் நபி (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்?” என்று கேட்டேன். அவர் ‘தெரியாது’ என்றார். “நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ள வில்லையா?” என்று நான் கேட்டேன். அவர் “கலந்துகொண்டேன்” என்றார். அவரிடம் நான், “அதை நான் அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்” என்றேன்.14 அத்தியாயம் :