அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர் கள்” என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவுக்கு மௌனமாக இருந்தார்கள்.) பிறகு “இது நஹ்ர் உடைய (துல்ஹிஜ்ஜா 10ஆம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே” என்று சொன்னோம். நபியவர்கள், “இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே” என்று கூறிவிட்டு, “(நான் வாழ்ந்த இதுகாலம்வரை உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்)” என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இறைவா! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள். பிறகு (மக்களிடம்), “இங்கு வந்திருப் பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர், தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக்கொள்பவரிடம் தெரிவிக்கலாம்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே நடந்தது. (நினைவாற்றல் குறைந்தவர்கள் தம்மைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ளோரிடம் அவற்றைத் தெரிவித்தார்கள்.) மேலும், நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் ஒருவரையொருவர் பிடரியில் வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் நீங்கள் மாறிவிட வேண்டாம்” என்றும் (அன்றைய உரையில்) குறிப்பிட்டார்கள்.19 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஹள்ரமீ (ரஹ்) அவர்கள் ஜாரியா பின் குதாமா என்பவரால் (உயிருடன்) கொளுத்தப்பட்ட நாளில் (ஜாரியா தம் ஆட்களிடம்), “அபூபக்ரா (ரலி) அவர்களை ஏறிப்பாருங்கள் (அவர் நமக்கு ஆதரவாளரா என்பதைக் கண்டுவாருங்கள்)” என்றார். அப்போது மக்கள், “இதோ அபூபக்ரா (ரலி) அவர்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினர். அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள், “மக்கள் என்னிடம் (என்னைத் தாக்க) வந்தால் அப்போது (நான் அவர்களைத் தடுக்க) ஒரு மூங்கில் குச்சியைக்கூட எடுக்கமாட்டேன்” என்று சொன்னார்கள் என என் தாயார் என்னிடம் தெரிவித்தார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 7079 — Sahih al Bukhari 92:30
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَرْتَدُّوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களை மௌனம்காக்கச் சொல்லுங் கள்” என்று சொல்லிவிட்டு (மக்கள் மௌனமான) பின்னர், “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப் பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற் றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனைவிடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். யார் அதில் தம்மை ஈடுபடுத்திக்கொள் கிறாரோ அவரை அவை அழிக்க முற்ப டும். அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக்கொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக்கொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தோன்றிய காலகட்டத்தில் நான் எனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் மகன் (அலீ-ரலி) அவர்களுக்கு உதவிட விரும்புகின்றேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் எதிர் கொண்டால் (சண்டையிட்டு மடிந்தால்) அவர்கள் இருவருமே நரகவாசிகள்” ஆவர் என்று சொன்னார்கள். அப்போது (அவர்களிடம்), “இவர் கொலைகாரர்; (தண்டனை பெறுவது சரிதான்.) ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் எப்படி நரகவாசி யாவார்?)” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “கொல்லப்பட்ட வரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் பதினோரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சி யதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கின்றது)” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளிக்க நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் நீ காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; நரகத்தின் வாயில்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்; நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப்பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே)” என்று பதிலளித்தார்கள்.22 அத்தியாயம் :
அபுல்அஸ்வத் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டனர். அதில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போது நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இது குறித்துத் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகத் தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களது காலத்தில் சில முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ர் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். (முஸ்லிம்கள் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும். அல்லது (வாளால்) அடிவாங்கிப் பலியாவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ், “தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது” எனும் (4:97ஆவது) வசனத்தை அருளினான்.23 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகள் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (‘அமானத்’ எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிóருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள். பிறகு (எனது வழியான) சுன்னாவிóருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திóருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் ‘நம்பகத் தன்மை’ எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரியதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இராது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி, “அவரது அறிவுதான் என்ன! அவரது விவேகம்தான் என்ன! அவரது வீரம்தான் என்ன!” என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவுகூட நம்பிக்கை (ஈமான்) இராது. (அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. ஏனெனில், முஸ்லிமாக இருந்தால் இஸ்லாம் (எனது பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறித்தவராயிருந்தால் அவருக்கான அதிகாரி என்னிடம் (எனது பொருளை) மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார் இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.24 அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடம் சென்றேன். அவர் “இப்னுல் அக்வஉ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தபின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை; ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி ‘ரபதா’ என்னுமிடத் திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்துகொண்டார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாட்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.26 அத்தியாயம் :