حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ، تُضِيءُ أَعْنَاقَ الإِبِلِ بِبُصْرَى ".
அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது.49 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7119 — Sahih al Bukhari 92:66
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَدِّهِ، حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئًا ". قَالَ عُقْبَةُ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " يَحْسِرُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் “தங்கமலை ஒன்றை வெளிப்படுத் தவுள்ளது” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்துசெல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார். இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அறிவிப்பாளர் ஹாரிஸா (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோ டொன்று சண்டையிட்டுக்கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும்.51 மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.52 மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது..53 மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வன் தனது தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லிவிடுவார்..54 மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, ‘அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது..55 சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக் காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறை நம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.56 இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்துவைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவுமாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவுமாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்)கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டுசென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதை உண்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிக மாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், “அவனால் உமக்கென்ன தீங்கு?” என்று கேட்டார்கள். நான், “(அச்சம்தான்.) ஏனெனில், தஜ்ஜாலு டன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இது என்ன (பிரமாதம்)? (அவன்மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கின்றானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7123 — Sahih al Bukhari 92:70
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى، كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ ".
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்” என்று சொன்னார்கள். இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து கேட்டுச் சொன்னதாகவே நான் கருதுகின்றேன்.58 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59 அத்தியாயம் :
ஹதீஸ் 7125 — Sahih al Bukhari 92:72
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ، وَلَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ باب مَلَكَانِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸீஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60 அத்தியாயம் :
ஹதீஸ் 7126 — Sahih al Bukhari 92:73
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ باب مَلَكَانِ ". قَالَ وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْتُ الْبَصْرَةَ فَقَالَ لِي أَبُو بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவிற்குள் மஸீஹுத் தஜ்ஜால் குறித்த அச்சம் புகாது. அந்நாளில் மதீனாவிற்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இராக்கிலுள்ள) பஸ்ரா சென்றேன். (அங்கு) அபூபக்ரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றியபின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, “நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கின்றேன். இறைத்தூதர் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :