Qurani·قرآني
தமிழ்

வேளாண்மை (முஸாக்காத்)

31 ஹதீஸ்கள் · #2320–2350

ஹதீஸ் 2320 — Sahih al Bukhari 41:1
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ ‏"‏‏.‏ وَقَالَ لَنَا مُسْلِمٌ حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2321 — Sahih al Bukhari 41:2
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ،، قَالَ ـ وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الْحَرْثِ، فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلاَّ أُدْخِلَهُ الذُّلُّ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَاسْمُ أَبِي أُمَامَةَ صُدَيُّ بْنُ عَجْلَانَ
முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘ யிஇந்தக் கருவி ஒரு சமுதாயத்தாரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச்செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.2 அபூஉமாமா (ரலி) அவர்களின் இயற் பெயர் ஸுதை பின் அஜ்லான் என்ப தாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 2322 — Sahih al Bukhari 41:3
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ‏"‏‏.‏ قَالَ ابْنُ سِيرِينَ وَأَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ إِلاَّ كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ ‏"‏‏.‏ وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்துபோய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.3 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடு வதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக, அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2323 — Sahih al Bukhari 41:4
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ ـ رَجُلاً مِنْ أَزْدِ شَنُوءَةَ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ ‏"‏‏.‏ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ‏.‏
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ யிவிவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (நன்மை) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?” என்று வினவினேன். சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2324 — Sahih al Bukhari 41:5
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ عَلَى بَقَرَةٍ الْتَفَتَتْ إِلَيْهِ‏.‏ فَقَالَتْ لَمْ أُخْلَقْ لِهَذَا، خُلِقْتُ لِلْحِرَاثَةِ، قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَخَذَ الذِّئْبُ شَاةً فَتَبِعَهَا الرَّاعِي، فَقَالَ الذِّئْبُ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لَهَا غَيْرِي‏.‏ قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ‏"‏‏.‏ قَالَ أَبُو سَلَمَةَ مَا هُمَا يَوْمَئِذٍ فِي الْقَوْمِ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்துகொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, யிநான் இதற்காக (சுமை சுமந்துசெல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒருமுறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, யிகொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டாú” என்று கூறியது. நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2325 — Sahih al Bukhari 41:6
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ‏.‏ قَالَ ‏ "‏ لاَ ‏"‏‏.‏ فَقَالُوا تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ‏.‏ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவாசிகளான) அன்சாரி தோழர் கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எங்களுக் கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்கும் இடையே எங்கள் பேரீச்சமரங்களைப் பங்கிட்டு விடுங்கள்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்ட அன்சாரி தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, ‘‘அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்துவாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், ‘‘செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)” என்று கூறினார்கள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 2326 — Sahih al Bukhari 41:7
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ، وَهْىَ الْبُوَيْرَةُ، وَلَهَا يَقُولُ حَسَّانُ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرٌ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத் தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் ‘அல்புவைரா’ என்று கூறுவர். இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘புவைராவின் நெருப்பு பரவிக்கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக்கொண்டிருப்பது யிபனூ லுஅய்’ குலத்து (குறைஷி)த் தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது” என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2327 — Sahih al Bukhari 41:8
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ الأَنْصَارِيِّ، سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ مُزْدَرَعًا، كُنَّا نُكْرِي الأَرْضَ بِالنَّاحِيَةِ مِنْهَا مُسَمًّى لِسَيِّدِ الأَرْضِ، قَالَ فَمِمَّا يُصَابُ ذَلِكَ وَتَسْلَمُ الأَرْضُ، وَمِمَّا يُصَابُ الأَرْضُ وَيَسْلَمُ ذَلِكَ، فَنُهِينَا، وَأَمَّا الذَّهَبُ وَالْوَرِقُ فَلَمْ يَكُنْ يَوْمَئِذٍ‏.‏
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) யிநிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது’ என்ற நிபந்தனை யுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும் பூச்சிகளாலும்) பாதிக்கப்பட்டுவிடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப் பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக்கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக்கொள்ளும். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டா மென்று தடை செய்யப்பட்டோம். அந் நாட்களில் தங்கமும் வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப் படும் வழக்கம்) இருக்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2328 — Sahih al Bukhari 41:9
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ، فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ، فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ، فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنَ الْمَاءِ وَالأَرْضِ، أَوْ يُمْضِيَ لَهُنَّ، فَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الأَرْضَ وَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الْوَسْقَ، وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتِ الأَرْضَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற் காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி யளித்து) ஒப்பந்தம் செய்துகொண் டார்கள். இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்கு எண்பது யிவஸ்க்’குகள் பேரீச்சம்பழமும் இருபது யிவஸ்க்’குகள் தொலிநீக்கப்படாத கோதுமையும் ஆக, நூறு யிவஸ்க்’குகள் கொடுத்துவந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக வந்தபோது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக்கொள்வது, அல்லது முன்பு நடைபெற்று வந்த வழக்கத்தின்படியே, நூறு யிவஸ்க்’குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக்கொள்வது என்று இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றுக் கொண்டனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) யிவஸ்க்’குகளையே தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2329 — Sahih al Bukhari 41:10
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ عَامَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் ‘அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.7 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.