حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الإِيَامِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلُ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ ". فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ وَقَدْ ذَبَحَ فَقَالَ إِنَّ عِنْدِي جَذَعَةً. فَقَالَ " اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ". قَالَ مُطَرِّفٌ عَنْ عَامِرٍ عَنِ الْبَرَاءِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ ".
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானி பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண)இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொôன்னார்கள். உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்துவிட்டிருந்த) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.3 மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் யார் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு நிறைவாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று சொன்னார்கள். இதையும் பராஉ (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 5546 — Sahih al Bukhari 73:2
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம(து சொந்தத் தேவை)க்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கின் றாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம் களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களிடையே குர்பானி பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 5548 — Sahih al Bukhari 73:4
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ، قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهْىَ تَبْكِي فَقَالَ " مَا لَكِ أَنَفِسْتِ ". قَالَتْ نَعَمْ. قَالَ " إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ". فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக் குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும்முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இ(ந்த மாத விடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர” என்று சொன்னார்கள். நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப் பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 5549 — Sahih al Bukhari 73:5
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ " مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ ". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ ـ وَذَكَرَ جِيرَانَهُ ـ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ. فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ، فَلاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لاَ، ثُمَّ انْكَفَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى كَبْشَيْنِ فَذَبَحَهُمَا، وَقَامَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَتَوَزَّعُوهَا أَوْ قَالَ فَتَجَزَّعُوهَا.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.8 அத்தியாயம் :
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), ‘‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதா (அல்ஆகிரா)வுக்கும் ‘அபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று கூறிவிட்டு, ‘‘இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று பதிலளித்தோம். அம்மாதத்திற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்று சொன்னோம். ‘‘இது எந்த நகரம்?” என்றும் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அப்போதும் அவர்கள் இந்நகரத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு ‘‘இது (புனித) நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்றோம். அடுத்து ‘‘இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அந்த நாளுக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது ‘குர்பானி கொடுக்கும்’ (நஹ்ருடைய) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். (பின்னர் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களின் இந்த(ப் புனித) மாதத்தில், உங்களின் இந்த(ப் புனித) நகரத்தில், உங்களின் இந்த நாள் புனிதம் பெற்றிருப்பதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியனவும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் வினைகள் குறித்து விசாரிப்பான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்கின்ற வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தியை (நேரடியாக)க் கேட்டவரைவிட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு காப்பவராயிருக்கலாம். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.- பிறகு ‘‘நான் தெரிவித்துவிட்டேனா? நான் தெரிவித்துவிட்டேனா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.10 அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி (ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தமது குர்பானி பிராணி களை அறுத்துவந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5552 — Sahih al Bukhari 73:8
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْبَحُ وَيَنْحَرُ بِالْمُصَلَّى.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5553 — Sahih al Bukhari 73:9
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُضَحِّي بِكَبْشَيْنِ وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். நானும் இரு செம்மறியாட்டுக் கடாக் களை குர்பானி கொடுத்துவந்தேன். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.11 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :