Qurani·قرآني
தமிழ்

ஈதுல் அள்ஹா குர்பானி (உளுஹிய்யா)

30 ஹதீஸ்கள் · #5545–5574

ஹதீஸ் 5565 — Sahih al Bukhari 73:21
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 5566 — Sahih al Bukhari 73:22
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ أَتَى عَائِشَةَ، فَقَالَ لَهَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنَّ رَجُلاً يَبْعَثُ بِالْهَدْىِ إِلَى الْكَعْبَةِ، وَيَجْلِسُ فِي الْمِصْرِ، فَيُوصِي أَنْ تُقَلَّدَ بَدَنَتُهُ، فَلاَ يَزَالُ مِنْ ذَلِكَ الْيَوْمِ مُحْرِمًا حَتَّى يَحِلَّ النَّاسُ‏.‏ قَالَ فَسَمِعْتُ تَصْفِيقَهَا مِنْ وَرَاءِ الْحِجَابِ فَقَالَتْ لَقَدْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَبْعَثُ هَدْيَهُ إِلَى الْكَعْبَةِ، فَمَا يَحْرُمُ عَلَيْهِ مِمَّا حَلَّ لِلرِّجَالِ مِنْ أَهْلِهِ، حَتَّى يَرْجِعَ النَّاسُ‏.‏
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தமது குர்பானி பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தமது) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம்முடைய அந்த ஒட்டகத்திற்கு (அது குர்பானி பிராணி என்பதைக் காட்டும் அடையாள மாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள்வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்துகொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய (இந்தக்) குர்பானி பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களுடைய குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும்வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 5567 — Sahih al Bukhari 73:23
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ، وَقَالَ غَيْرَ مَرَّةٍ لُحُومَ الْهَدْىِ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்பானி பிராணிகளின் இறைச்சியை (குர்பானி கறியை) மதீனாவுக்குச் செல்லும்போது பயண உணவாக எடுத்துச் செல்வோம்.25 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், (தம் அறிவிப்பு களில் ‘குர்பானி பிராணிகளின் இறைச்சி’ என்பதைக் குறிக்க மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘லுஹூமுல் அளாஹீ’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘லுஹூமுல் ஹத்யி’ எனும் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கையாண்டுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5568 — Sahih al Bukhari 73:24
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ ابْنَ خَبَّابٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ، يُحَدِّثُ أَنَّهُ كَانَ غَائِبًا، فَقَدِمَ فَقُدِّمَ إِلَيْهِ لَحْمٌ‏.‏ قَالَ وَهَذَا مِنْ لَحْمِ ضَحَايَانَا‏.‏ فَقَالَ أَخِّرُوهُ لاَ أَذُوقُهُ‏.‏ قَالَ ثُمَّ قُمْتُ فَخَرَجْتُ حَتَّى آتِيَ أَخِي قَتَادَةَ ـ وَكَانَ أَخَاهُ لأُمِّهِ، وَكَانَ بَدْرِيًّا ـ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர், ‘‘இது எங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சி” என்று சொன்னார். நான், ‘‘இதை எடுத்துவிடுங்கள். நான் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூகத்தாதா (ரலி)அவர்களிடம் சென்றேன். -அபூகத்தாதா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராகவும் பத்ர் போரில் கலந்துகொண்டவராகவும் இருந்தார்கள்.- நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் ‘‘நீங்கள் பயணம் சென்றபின் மறுஉத்தரவு பிறந்தது” என்று சொன்னார் கள்.26 அத்தியாயம் :
ஹதீஸ் 5569 — Sahih al Bukhari 73:25
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِي بَيْتِهِ مِنْهُ شَىْءٌ ‏"‏‏.‏ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِي قَالَ ‏"‏ كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا ‏"‏‏.‏
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் குர்பானி பிராணியை அறுக்கிறாரோ அவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப்பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக்கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பி னேன்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5570 — Sahih al Bukhari 73:26
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ الضَّحِيَّةُ كُنَّا نُمَلِّحُ مِنْهُ، فَنَقْدَمُ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَقَالَ ‏ "‏ لاَ تَأْكُلُوا إِلاَّ ثَلاَثَةَ أَيَّامٍ ‏"‏‏.‏ وَلَيْسَتْ بِعَزِيمَةٍ، وَلَكِنْ أَرَادَ أَنْ يُطْعِمَ مِنْهُ وَاللَّهُ أَعْلَمُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘‘மூன்று நாட்களுக்குமேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்து வதற்கல்ல; மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பி னார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 5571 — Sahih al Bukhari 73:27
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ أَنَّهُ شَهِدَ الْعِيدَ يَوْمَ الأَضْحَى مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَهَاكُمْ عَنْ صِيَامِ هَذَيْنِ الْعِيدَيْنِ، أَمَّا أَحَدُهُمَا فَيَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَأَمَّا الآخَرُ فَيَوْمٌ تَأْكُلُونَ نُسُكَكُمْ‏.‏
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே தொழுதுவிட்டுப் பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என உங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று, ‘உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்’ ஆகும். மற்றொன்றோ, ‘நீங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்’ ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5572 — Sahih al Bukhari 73:28
قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَكَانَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ، فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ مِنْ أَهْلِ الْعَوَالِي فَلْيَنْتَظِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ‏.‏
அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது: பின்னர் நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, ‘‘மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரு பெருநாட்கள் ஒன்றுசேர்ந்து (கிடைத்து) உள்ளன. ஆகவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக்கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகின் றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக் குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5573 — Sahih al Bukhari 73:29
قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُهُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَاكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ نُسُكِكُمْ فَوْقَ ثَلاَثٍ‏.‏ وَعَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي عُبَيْدٍ نَحْوَهُ‏.‏
அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது: பிறகு நான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5574 — Sahih al Bukhari 73:30
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كُلُوا مِنَ الأَضَاحِيِّ ثَلاَثًا ‏"‏‏.‏ وَكَانَ عَبْدُ اللَّهِ يَأْكُلُ بِالزَّيْتِ حِينَ يَنْفِرُ مِنْ مِنًى، مِنْ أَجْلِ لُحُومِ الْهَدْىِ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானி பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.