حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَيْسَ بِذَاكَ، أَلاَ تَسْمَعُونَ إِلَى قَوْلِ لُقْمَانَ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் “எங்களில் யார்தான் தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைகற்பிப்பதையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைகற்பிப்பதே மிகப்பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை (குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா?3 அத்தியாயம் :
ஹதீஸ் 6919 — Sahih al Bukhari 88:2
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، وَحَدَّثَنِي قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَكْبَرُ الْكَبَائِرِ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَشَهَادَةُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ ـ ثَلاَثًا ـ أَوْ قَوْلُ الزُّورِ ". فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது (மூன்று முறை), பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியவை பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பொய் சாட்சி’ என்பதை நபி (ஸல்) அவர்கள் திரும்பத்திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் “அவர்கள் நிறுத்திக்கொள்ளலாமே!” என்று கூறி னோம்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இறைவனுக்கு இணைகற்பிப்பது” என்றார்கள். அவர், “பிறகு எது?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது” என்றார்கள். அவர், “பிறகு எது?” எனக் கேட்க நபி (ஸல்) அவர்கள், “பொய்ச் சத்தியம்” என்றார்கள். நான், “பொய்ச் சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனித ரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது” என்றார்கள்.5 அத்தியாயம் :
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த (த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்தபிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6922 — Sahih al Bukhari 88:5
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، مُحَمَّدُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ أُتِيَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ بِزَنَادِقَةٍ فَأَحْرَقَهُمْ فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحْرِقْهُمْ لِنَهْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَقَتَلْتُهُمْ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ ".
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள்.7 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். மாறாக, நபி (ஸல்) அவர்கள், ‘எவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.8 அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப் பக்கத்திலும் இன்னொருவர் என் இடப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூமூசாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் பின் கைஸே!’ என்றார்கள். நான், “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், “எவர் பதவியை விரும்புகிறாரோ அவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்கமாட்டோம்’. ஆகவே, ‘அபூமூசாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் பின் கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அபூமூசா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூமூசா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றபோது (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூமூசா (ரலி) அவர்கள் எடுத்துவைத்து, “வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்களின் அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, “இவர் யார்?” என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்” என்றார்கள். (மீண்டும் அபூமூசா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) “அமருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)” என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரணதண்டனையளிக்குமாறு (அபூமூசா -ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வழிபடுவது குறித்துப் பேசிக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்), “நான் (இரவில் சிறிது நேரம்) நின்று வழிபடுகிறேன். (சிறிது நேரம்) உறங்கு கிறேன். நின்று வழிபடுவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.9 அத்தியாயம் :
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مَرَّ يَهُودِيٌّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ السَّامُ عَلَيْكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ ". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَدْرُونَ مَا يَقُولُ قَالَ السَّامُ عَلَيْكَ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ قَالَ " لاَ، إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்” என்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னால் (அதற்குப் பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6927 — Sahih al Bukhari 88:9
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَقُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ " يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ". قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ " قُلْتُ وَعَلَيْكُمْ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் “இல்லை; வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா” (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான்” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.14 அத்தியாயம் :