حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்க நினைத்தால், தமது மர்ம உறுப்பைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.) அத்தியாயம் :
ஹதீஸ் 289 — Sahih al Bukhari 5:41
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ اسْتَفْتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَنَامُ أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ " نَعَمْ، إِذَا تَوَضَّأَ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர், தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும்போது (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அங்கத் தூய்மை செய்துவிட்டு (உறங்கலாம்.)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 290 — Sahih al Bukhari 5:42
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்குகிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டி னாலே குளியல் கடமையாகிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு விந்தை வெளியேற் றாம-ருந்தால் (அவர்மீது குளியல் கடமையாகுமா), கூறுங்கள்?” என்றேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “அவர் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்; தமது பிறப் புறுப்பைக் கழுவிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். மேலும், “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற் றேன்” என்றும் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்னர் நான் இது குறித்து அலீ பின் அபீதா-ப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ் வாம் (ரலி), தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோரி டம் கேட்டபோதும் அவர்கள் அனை வரும் இவ்வாறே செய்யும்படி பணித் தார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் செவியுற்றதாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டார்; ஆனால், விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனைவியின் பிறவி உறுப்பைத் தொட்ட தமது உறுப்பை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை செய்துகொண்டு தொழலாம்” என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: (பாலுறுப்புகள் சந்தித்துவிட்டால்) குளியல்தான் (மார்க்கத்தில்) தார்மிகக் கடமையாகும். இதுதான் இறுதிக் கட்டளையாகும். இதில் கருத்து வேறுபாடு இருப்பதால்தான் இங்கு குறிப்பிட்டோம்.10 அத்தியாயம் :