ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடந்தபோது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே இப்லீஸ், ‘‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம் களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.93 அப்போது அங்கு (தமக்கருகேயிருந்த) தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் அடியார் களே! இவர் என் தந்தை! இவர் என் தந்தை!” என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கி)க் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.94 ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.95 அத்தியாயம் :
ஹதீஸ் 3291 — Sahih al Bukhari 59:100
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْتِفَاتِ الرَّجُلِ فِي الصَّلاَةِ. فَقَالَ " هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழு கையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அ(வ்வாறு செய்வ)து உங்களின் தொழு கையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று பதிலளித் தார்கள்.96 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நல்ல கனவு, அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவு, ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாது காப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கி ழைக்காது. இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணை(துணை) கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(ன நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரைவிட்டு (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாது காக்கும்) அரணாக அது அவருக் கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற் செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3294 — Sahih al Bukhari 59:103
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ قَالَ اسْتَأْذَنَ عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَعِنْدَهُ نِسَاءٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ، قُمْنَ يَبْتَدِرْنَ الْحِجَابَ، فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ، فَقَالَ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي، فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابَ ". قَالَ عُمَرُ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ كُنْتَ أَحَقَّ أَنْ يَهَبْنَ. ثُمَّ قَالَ أَىْ عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْنَ نَعَمْ، أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ قَطُّ سَالِكًا فَجًّا إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ ".
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுவதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னி டம் இயல்பாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்பெண்கள் அஞ்சுவதற்குத் தாங்களே அதிகத் தகுதி யுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘‘தமக்குத்தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடைய வராகவும் அதிகமாகக் கடுமை காட்டுப வராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித் தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டி ருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :
ஹதீஸ் 3295 — Sahih al Bukhari 59:104
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَيْقَظَ ـ أُرَاهُ ـ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் இரவில் தங்குகிறான்.98 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள் களும் அதைக் கேட்டு அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சி யம் சொல்கின்ற”’ என்று கூறிவிட்டு, ‘‘இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.100 அத்தியாயம் :
ஹதீஸ் 3297 — Sahih al Bukhari #3297
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ ". قَالَ عَبْدُ اللَّهِ فَبَيْنَا أَنَا أُطَارِدُ، حَيَّةً لأَقْتُلَهَا فَنَادَانِي أَبُو لُبَابَةَ لاَ تَقْتُلْهَا. فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ. قَالَ إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَاتِ الْبُيُوتِ، وَهْىَ الْعَوَامِرُ.

ஹதீஸ் 3298 — Sahih al Bukhari 59:106

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ...அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்றபோது) என்னை அபூலுபாபா (ரலி) அவர்களும் ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் பார்த்தார்கள்.102 இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :