حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَأَشَدُّ مَا تَجِدُونَ فِي الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறை யிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.65 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால்தான் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக்கொள்ளுங்கள் லி(அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறு கிறார்கள்:)லி அல்லது ஸம்ஸம் தண் ணீரைக் கொண்டு தணித்துக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :
ஹதீஸ் 3262 — Sahih al Bukhari 59:72
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، قَالَ أَخْبَرَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " الْحُمَّى مِنْ فَوْرِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا عَنْكُمْ بِالْمَاءِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக்கொள்ளுங்கள். இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :
ஹதீஸ் 3263 — Sahih al Bukhari 59:73
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا بِالْمَاءِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :
ஹதீஸ் 3264 — Sahih al Bukhari 59:74
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3265 — Sahih al Bukhari 59:75
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ ". قِيلَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ كَانَتْ لَكَافِيَةً. قَالَ " فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யிஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமே யாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.67 அத்தியாயம் :
ஹதீஸ் 3266 — Sahih al Bukhari 59:76
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ عَطَاءً، يُخْبِرُ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ }.
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யியா மாலிக்’ (யிமாலிக்கே!›) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் இறைவசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.68 அத்தியாயம் :
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69 அதற்கு அவர்கள், ‘‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்ப வில்லை.70 மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ‘‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3268 — Sahih al Bukhari 59:78
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَىَّ هِشَامٌ أَنَّهُ سَمِعَهُ وَوَعَاهُ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ، حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا، ثُمَّ قَالَ " أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي أَتَانِي رَجُلاَنِ، فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِي مَاذَا قَالَ فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ ". فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ " نَخْلُهَا كَأَنَّهَا رُءُوسُ الشَّيَاطِينِ ". فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ فَقَالَ " لاَ أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ، وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا، ثُمَّ دُفِنَتِ الْبِئْرُ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிரார்த்தனை செய்தவண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: ‘‘என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), ‘‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?” என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘‘லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?” என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, ‘‘சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) யிதர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். (இதைச் சொல்லி முடித்த)பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ள”’ என்று கூறினார்கள். நான், ‘‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய் வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ தூங்கிக்கொண்டேயிரு” என்று போதித்து (அவரை விழிக்க விடாமல் உறங்க வைத்து)விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகின்றது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.73 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :