அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உனது உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்” என்று சொன் னார்கள். அந்த மனிதர், “பிறகு எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்” எனும் (25:68ஆவது) வசனத்தை அருளினான்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 6862 — Sahih al Bukhari 87:2
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَنْ يَزَالَ الْمُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப்படுகுழிகளில் ஒன்றாகும். இதை சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6864 — Sahih al Bukhari 87:4
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத்தான் இருக்கும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُقْتَلُ نَفْسٌ إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 6868 — Sahih al Bukhari 87:7
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ وَاقِدُ بْنُ عَبْدِ اللَّهِ أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ".
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 6869 — Sahih al Bukhari 87:8
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، قَالَ سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنَ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ " اسْتَنْصِتِ النَّاسَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ". رَوَاهُ أَبُو بَكْرَةَ وَابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகை யில்) என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)” என்று சொன்னார்கள்.8 இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூபக்ரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித் துள்ளார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும். மற்றோர் அறிவிப்பில், “இறைவ னுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும் ‘பெரும் பாவங்களா கும்” என்று வந்துள்ளது. இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.9 (மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :