Qurani·قرآني
தமிழ்

நீர் பங்கீடு

33 ஹதீஸ்கள் · #2351–2383

ஹதீஸ் 2361 — Sahih al Bukhari 42:9
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ خَاصَمَ الزُّبَيْرَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ أَرْسِلْ ‏"‏‏.‏ فَقَالَ الأَنْصَارِيُّ إِنَّهُ ابْنُ عَمَّتِكَ‏.‏ فَقَالَ عَلَيْهِ السَّلاَمُ ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ يَبْلُغُ الْمَاءُ الْجَدْرَ، ثُمَّ أَمْسِكْ ‏"‏‏.‏ فَقَالَ الزُّبَيْرُ فَأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ ‏{‏َلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ‏}‏‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ أَحَدٌ يَذْكُرُ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ، إِلاَّ اللَّيْثُ فَقَطْ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரி தோழருடன் (பேரீச் சந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில்) சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்காகச் சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! (மேட்டிலிருக்கும் உங்கள் தோப்புக்குத்) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு (அதை அன்சாரியின் தோப்புக்கு) அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே அன்சாரி தோழர், ‘‘அவர் உங்கள் அத்தை மகன் ஆயிற்றே! (அதனால் தான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறீர்கள்”) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! வரப்பை அடையும்வரை நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு (பின்னர் அன்சாரியின் தோப்புக்கு) அதைத் திறந்து அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘திருக்குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்துத்தான் இறங்கியது என நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2362 — Sahih al Bukhari 42:10
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ فِي شِرَاجٍ مِنَ الْحَرَّةِ يَسْقِي بِهَا النَّخْلَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ ـ فَأَمَرَهُ بِالْمَعْرُوفِ ـ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ ‏"‏‏.‏ فَقَالَ الأَنْصَارِيُّ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ‏.‏ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ الْمَاءُ إِلَى الْجَدْرِ ‏"‏‏.‏ وَاسْتَوْعَى لَهُ حَقَّهُ‏.‏ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنَّ هَذِهِ الآيَةَ أُنْزِلَتْ فِي ذَلِكَ ‏{‏َلاَ وَرَبِّكِ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ‏}‏‏.‏ قَالَ لِي ابْنُ شِهَابٍ فَقَدَّرَتِ الأَنْصَارُ وَالنَّاسُ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ‏"‏‏.‏ وَكَانَ ذَلِكَ إِلَى الْكَعْبَيْنِ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமி டத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம்மிடம் இந்த வழக்கு வந்தபோது), ‘‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டையதோப்பு)க்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?” என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும்வரை தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் (பிறகு விட்டுவிடுங்கள்)” என்று கூறி, ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘ ‘(உங்கள் மரங் களுக்கு) நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்’ எனும் (இந்த) நபிமொழியை அடிப்படை யாகக் கொண்டுதான், யிதண்ணீர் கணுக்கால் கள்வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்ட தாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டுக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2363 — Sahih al Bukhari 42:11
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ‏"‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ ‏"‏ فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ‏"‏‏.‏ تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَالرَّبِيعُ بْنُ مُسْلِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) யிஎனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதை வாயால் கவ்விக்கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்றும் பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமை யில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2364 — Sahih al Bukhari 42:12
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْكُسُوفِ، فَقَالَ ‏ "‏ دَنَتْ مِنِّي النَّارُ حَتَّى قُلْتُ أَىْ رَبِّ، وَأَنَا مَعَهُمْ فَإِذَا امْرَأَةٌ ـ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ تَخْدِشُهَا هِرَّةٌ قَالَ مَا شَأْنُ هَذِهِ قَالُوا حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا ‏"‏‏.‏
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன் னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘‘இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப்போகிறேனோ?› என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக்கொண்டிருந்தது. ‘‘இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனை செய்யப்படு கிறாள்?)” என்று நான் கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), ‘‘இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் சாகும்வரை இந்தப் பெண் கட்டிவைத்திருந்தாள்” என்று பதிலளித்தனர்.8 இந்த அறிவிப்பின் இடையே, ‘ ’ ‘அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்” என அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2365 — Sahih al Bukhari 42:13
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனை செய்யப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்துவைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது லிஅல்லாஹ்வே மிக அறிந்தவன்லி ‘‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட் டும் என்று அதை அவிழ்த்துவிடவு மில்லை” என்று அல்லாஹ் கூறினான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2366 — Sahih al Bukhari 42:14
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فَشَرِبَ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ، هُوَ أَحْدَثُ الْقَوْمِ، وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ قَالَ ‏ "‏ يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ الأَشْيَاخَ ‏"‏‏.‏ فَقَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَأَعْطَاهُ إِيَّاهُ‏.‏
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (பானம் உள்ள) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப் பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக்கூடிய எனது பங்கை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2367 — Sahih al Bukhari 42:15
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَذُودَنَّ رِجَالاً عَنْ حَوْضِي كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الْحَوْضِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன்மீது ஆணையாக! (தனது குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமை யில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்க விருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர் களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2368 — Sahih al Bukhari 42:16
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَكَثِيرِ بْنِ كَثِيرٍ ـ يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الآخَرِ ـ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ، لَوْ تَرَكَتْ زَمْزَمَ ـ أَوْ قَالَ لَوْ لَمْ تَغْرِفْ مِنَ الْمَاءِ ـ لَكَانَتْ عَيْنًا مَعِينًا، وَأَقْبَلَ جُرْهُمُ فَقَالُوا أَتَأْذَنِينَ أَنْ نَنْزِلَ عِنْدَكِ قَالَتْ نَعَمْ وَلاَ حَقَّ لَكُمْ فِي الْمَاءِ‏.‏ قَالُوا نَعَمْ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (நபி) இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாருக்கு (ஹாஜருக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்) விட்டுவிட்டிருந்தால் லி (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) லி தண்ணீரைக் கையால் அள்ளாமல் இருந் திருந்தால் லி அது (நிற்காமல்) ஓடுகின்ற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) யிபனூ ஜுர்ஹும்’ குலத்தார் அங்கு வந்து, ‘‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக்கொள்ள நீங்கள் அனுமதிப் பீர்களா?” என்று (ஹாஜரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘சரி; (தங்கி வசித்துக்கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத்) தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார், ‘‘சரி (அவ்வாறே ஒப்புக்கொள்கிறோம்)” என்று கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2369 — Sahih al Bukhari 42:17
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهْوَ كَاذِبٌ، وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ، وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ، فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي، كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ ‏"‏‏.‏ قَالَ عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ عَنْ عَمْرٍو سَمِعَ أَبَا صَالِحٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்தபோது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப்பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவருடைய செல் வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிக்க விடாமல்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2370 — Sahih al Bukhari 42:18
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ حِمَى إِلاَّ لِلَّهِ وَلِرَسُولِهِ ‏"‏‏.‏ وَقَالَ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَمَى النَّقِيعَ، وَأَنَّ عُمَرَ حَمَى السَّرَفَ وَالرَّبَذَةَ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் கிடையாது” என்று கூறினார்கள். இதை ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) யிநகீஉ’ எனுமிடத் தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக ஆக்கியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘ஷரஃப்’ மற்றும் யிரபதா’ எனுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந் தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள் ளது” என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.10 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.