நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள், “ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளி யேற்றிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “மூசாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். (இந்தப் பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள் என மூன்றுமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், முஃகீரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின் ஓதிய துஆக்களில் நீங்கள் செவியுற்றதை எனக்கு எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது (பின்வருமாறு பதில்) எழுதுமாறு முஃகீரா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: தொழுகைக்குப்பின் நபி (ஸல்) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வ லா முஉத்திய லிமா மனஉத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவதை நான் கேட்டேன். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: இதை வர்ராத் (ரஹ்) அவர்கள் தமக்குத் தெரிவித்ததாக அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். பின்னர் தாம் முஆவியா (ரலி) அவர்களிடம் சென்றதாகவும், அப்போது முஆவியா (ரலி) அவர்கள் இந்த துஆவை ஓதும்படி மக்களுக்குக் கட்டளையிட்டதைக் கண்டதாகவும் அப்தா கூறினார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 6616 — Sahih al Bukhari 82:22
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.26 அத்தியாயம் :
ஹதீஸ் 6617 — Sahih al Bukhari 82:23
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَثِيرًا مِمَّا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْلِفُ (لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ).
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) “இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!” என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸய்யாதிடம் நபி (ஸல்) அவர்கள், “நான் (உன்னைச் சோதிப்ப தற்காக) ஒன்றை மனத்தில் மறைத்து வைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அத்துகான்’ எனும் 44ஆவது அத்தியாயத்தின் 10ஆவது வசனத்தை மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், “(அது) ‘அத்துக்’ என்றான். உடனே நபி (ஸல்) அவர்கள் “தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று சொன்னார்கள். (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவனைக் கொன்றுவிட எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவனை விட்டுவிடுங்கள். இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால், இவனை நீங்கள் கொல்ல முடியாது. (ஏனெனில், இவனைக் கொல்ல வேறொருவர்-நபி ஈசா-வருவார் என்பது இறைவனின் ஏற்பாடு.) இவன் அவனாக இல்லையாயின், இவனைக் கொல்வதில் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று கூறினார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாக இருந்தது. பிறகு அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். ஆகவே, அந்த நோய் (பரவி) உள்ள ஓர் ஊரில் ஓர் அடியார், தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதிபூண்டவராகப் பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் அந்த ஊரிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தால் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் கிடைக்கும்” என்று பதிலளித்தார்கள்.29 அத்தியாயம் :
ஹதீஸ் 6620 — Sahih al Bukhari 82:26
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، أَخْبَرَنَا جَرِيرٌ ـ هُوَ ابْنُ حَازِمٍ ـ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْخَنْدَقِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ وَهْوَ يَقُولُ " وَاللَّهِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا، وَلاَ صُمْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا، وَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا".
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடியவண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்: இறை ஆணை!இறைவன் (மட்டும்)இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!நோன்பு நோற்றிருக்கமாட்டோம்!தொழுதும் இருக்கமாட்டோம்! எனவே,எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! இணைவைப்பாளர்கள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள்விரும்பினாலும்இடம் தரமாட்டோம்.30 அத்தியாயம் :