Qurani·قرآني
தமிழ்

ஜும்உஆ தொழுகை

66 ஹதீஸ்கள் · #876–941

ஹதீஸ் 876 — Sahih al Bukhari 11:1
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمَّ هَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ، فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்களாக வும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களாகவும் இருப்போம். எனினும், (யூத, கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும், இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக் கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளை வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு இந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும்; மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.2 இதை அபூ.ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 877 — Sahih al Bukhari 11:2
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்கு வரும்போது குளித்துக்கொள்ளட்டும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 878 — Sahih al Bukhari 11:3
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَمَا هُوَ قَائِمٌ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ قَالَ إِنِّي شُغِلْتُ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ التَّأْذِينَ، فَلَمْ أَزِدْ أَنْ تَوَضَّأْتُ‏.‏ فَقَالَ وَالْوُضُوءُ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (சொற் பொழிவு மேடை- மிம்பர்மீது) நின்று உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, (இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர் களில் ஒரு நபித்தோழர் உள்ளே வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “இது எந்த நேரம் (தெரியுமா? ஏன் இவ்வளவு தாமதம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அலுவ-ல் மூழ்கிவிட்டேன். தொழுகை அறிவிப்பைக் கேட்ட பிறகுதான் நான் என் வீட்டிற்கே திரும்பினேன். ஆகவே, அங்கத் தூய்மை (உளூ) மட்டும் செய்துவிட்டு நான் (விரைந்து) வருகிறேன்” என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “(தாமத மாக வந்ததுடன்) உளூ மட்டும்தானா? (குளிக்கவில்லையா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவுக்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 879 — Sahih al Bukhari 11:4
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.3 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 880 — Sahih al Bukhari 11:5
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ الأَنْصَارِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ ‏"‏‏.‏ قَالَ عَمْرٌو أَمَّا الْغُسْلُ فَأَشْهَدُ أَنَّهُ وَاجِبٌ، وَأَمَّا الاِسْتِنَانُ وَالطِّيبُ فَاللَّهُ أَعْلَمُ أَوَاجِبٌ هُوَ أَمْ لاَ، وَلَكِنْ هَكَذَا فِي الْحَدِيثِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هُوَ أَخُو مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَلَمْ يُسَمَّ أَبُو بَكْرٍ هَذَا‏.‏ رَوَاهُ عَنْهُ بُكَيْرُ بْنُ الأَشَجِّ وَسَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ وَعِدَّةٌ‏.‏ وَكَانَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ يُكْنَى بِأَبِي بَكْرٍ وَأَبِي عَبْدِ اللَّهِ‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வெள்ளிக்கிழமை குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமை யாகும்; மேலும் பல் துலக்குவதும், கிடைத்தால் நறுமணம் பூசுவதும் கடமை யாகும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச் சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், பல் துலக்குவதோ நறுமணம் பூசுவதோ கடமையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) அபூபக்ர் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஆவார். அபூபக்ர் பின் அல்முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) உள்ளிட்ட பலர் (இந்த ஹதீஸை) அறிவித் துள்ளனர். முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுக்கும் அபூபக்ர், அபூ அப்தில்லாஹ் ஆகிய குறிப்புப் பெயர்கள் உள்ளன. அத்தியாயம் :
ஹதீஸ் 881 — Sahih al Bukhari 11:6
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்ப வர், ஒரு மாட்டை ‘குர்பானி’ கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 882 — Sahih al Bukhari 11:7
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ لِمَ تَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ إِلاَّ سَمِعْتُ النِّدَاءَ تَوَضَّأْتُ‏.‏ فَقَالَ أَلَمْ تَسْمَعُوا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் உள்ளே வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஏன் தொழுகைக்குத் தாமதமாக வருகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்த மனிதர், “தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத் தூய்மை செய்(துவிட்டு உடனே வந்)தேன்” என்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 883 — Sahih al Bukhari 11:8
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் குளிக்கிறார்; தம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்திக்கொள்கிறார்; தம்மிட முள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தமது வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார்; பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து (சேர்ந்து உட்கார்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு எழுதப்பட்டுள்ளதைத் தொழுகிறார்; பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியுறுகிறார் எனில், அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்படும் பாவங்கள் அவருக்கு மன்னிக் கப்படாமல் இருப்பதில்லை. இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 884 — Sahih al Bukhari 11:9
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ طَاوُسٌ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ذَكَرُوا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ وَاغْسِلُوا رُءُوسَكُمْ وَإِنْ لَمْ تَكُونُوا جُنُبًا، وَأَصِيبُوا مِنَ الطِّيبِ ‏"‏‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ أَمَّا الْغُسْلُ فَنَعَمْ، وَأَمَّا الطِّيبُ فَلاَ أَدْرِي‏.‏
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள், ‘வெள்ளிக் கிழமை நீங்கள் குளித்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளைக் கழுவிக்கொள்ளுங் கள். சிறிது நறுமணம் பூசிக்கொள்ளுங்கள். உங்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டிரா விட்டாலும் சரியே’ எனக் கூறியதாகச் சிலர் கூறுகிறார்களே?” என்று வினவினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குளியலைப் பொறுத்த வரை (நபியவர்கள் கூறினார்கள் என நீங்கள் குறிப்பிட்டது) சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 885 — Sahih al Bukhari 11:10
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ لاَ أَعْلَمُهُ‏.‏
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்தபோது அவர்களிடம் நான், “ஒருவர் தம் வீட்டாரிடம் இருக்கும் எண்ணெய்யையோ நறுமணத்தையோ பூசிக்கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது பற்றி எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.