حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக் காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2567 — Sahih al Bukhari 51:2
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي، إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ. فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ، إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் உறுதியாகப் பிறை பார்ப்போம்; மீண்டும் (அடுத்த) பிறை பார்ப்போம்; பிறகும் (அடுத்த) பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்திருப்போம்.2 அப்படி யிருந்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப் பட்டிராது” என்று கூறினார்கள். நான், ‘‘என் சிற்றன்னையே! நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இரு கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும்தான் (எங்கள் உணவு). தவிரவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹா) இருந்தன. அவர்கள் (அவற்றி லிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2568 — Sahih al Bukhari 51:3
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆட்டில் (எனக்குப் பிடித்த) கணைக்கால் பகுதி, அல்லது (விலையற்ற) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதி(யைச் சமைத்து விருந்து)க்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் (அதை) நான் ஏற்றுக் கொள்வேன்; ஆட்டின் கணைக்கால் பகுதி, அல்லது கணுக்காலுக்குக் கீழே உள்ள பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் பெற்றுக் கொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2569 — Sahih al Bukhari 51:4
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْسَلَ إِلَى امْرَأَةٍ مِنَ الْمُهَاجِرِينَ، وَكَانَ لَهَا غُلاَمٌ نَجَّارٌ قَالَ لَهَا " مُرِي عَبْدَكِ فَلْيَعْمَلْ لَنَا أَعْوَادَ الْمِنْبَرِ ". فَأَمَرَتْ عَبْدَهَا، فَذَهَبَ فَقَطَعَ مِنَ الطَّرْفَاءِ، فَصَنَعَ لَهُ مِنْبَرًا، فَلَمَّا قَضَاهُ أَرْسَلَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَدْ قَضَاهُ، قَالَ صلى الله عليه وسلم " أَرْسِلِي بِهِ إِلَىَّ ". فَجَاءُوا بِهِ فَاحْتَمَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَهُ حَيْثُ تَرَوْنَ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர் (மக்கா) பெண்மணி ஒருவரி டம் தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவர் இருந்தார். அப்பெண்மணியிடம் நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி, ‘‘சொற்பொழிவு மேடைக்கு வேண்டிய மரச் சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே, அப் பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, சவுக்கு மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு, அவர் அதைச் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைத் தமக்குக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹுதைபியா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் (உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டியிருந்தார் கள். நான் (மட்டும்) யிஇஹ்ராம்’ கட்டாமலி ருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் காலணியைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை. எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக்கொள்ள) நான் மறந்துவிட்டேன். ஆகவே, அவர்களிடம், ‘‘எனக்குச் சாட்டை யையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங் கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்), ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உமக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவமாட்டோம்” என்று கூறிவிட்டனர். எனக்குக் கோபம் வந்தது. உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தி னேன். பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன்மீது பாய்ந்து உண்ணலானார்கள். பிறகு தாங்கள் இஹ்ராம் கட்டியுள்ள நிலையில் அதை உண்டது தொடர்பாகச் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றோம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து(எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்ததும், அவர்களிடம் அது பற்றிக் கேட்டோம். அவர்கள், ‘‘அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொல்லி, அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங்காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டு முடித்தார்கள்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2571 — Sahih al Bukhari 51:6
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبُو طَوَالَةَ ـ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دَارِنَا هَذِهِ، فَاسْتَسْقَى، فَحَلَبْنَا لَهُ شَاةً لَنَا، ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِنَا هَذِهِ، فَأَعْطَيْتُهُ وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ، وَعُمَرُ تُجَاهَهُ وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ قَالَ عُمَرُ هَذَا أَبُو بَكْرٍ. فَأَعْطَى الأَعْرَابِيَّ، ثُمَّ قَالَ " الأَيْمَنُونَ، الأَيْمَنُونَ، أَلاَ فَيَمِّنُوا ". قَالَ أَنَسٌ فَهْىَ سُنَّةٌ فَهْىَ سُنَّةٌ. ثَلاَثَ مَرَّاتٍ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களின் இந்த வீட்டிற்கு வந்தார்கள். (எங்களிடம்) அருந்துவதற்கு ஏதேனும் கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களின் ஓர் ஆட்டிலிருந்து அவர்களுக்காகப் பால் கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந் தனர். நபி (ஸல்) அவர்கள் (பாலைக் குடித்து) முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள், ‘‘இதோ, அபூபக்ர்” என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தாம் அருந்தியதன் மீதியைக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘‘வலப் பக்கத்தி லிருப்பவர்களே முன்னுரிமையுடைவர்கள். ஆகவே, வலப் பக்கத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள்” என்று கூறி னார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், ‘அது நபிவழியாகும், அது நபிவழியாகும்’ என்று மும்முறை கூறினார்கள் என இதை அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2572 — Sahih al Bukhari 51:7
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِوَرِكِهَا ـ أَوْ فَخِذَيْهَا قَالَ فَخِذَيْهَا لاَ شَكَّ فِيهِ ـ فَقَبِلَهُ. قُلْتُ وَأَكَلَ مِنْهُ قَالَ وَأَكَلَ مِنْهُ. ثُمَّ قَالَ بَعْدُ قَبِلَهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார் கள். நான் அதைப் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை லிஅல்லது தொடைகளைலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ‘‘அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா?” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்க, ‘‘(ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள்” என்று ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, அதன் பிறகு, ‘‘அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 2573 — Sahih al Bukhari 51:8
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارًا وَحْشِيًّا وَهْوَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَرَدَّ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ قَالَ " أَمَا إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ ".
ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையைப் பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் லிஅல்லது யிவத்தான்’5 எனும் இடத்தில்லி இருந்தார் கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னி டமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை கண்டபோது, ‘‘நாம் இஹ்ராம் கட்டியிருப்ப தால்தான் உம்மிடம் அதைத் திருப்பித் தந்தோம்” என்று கூறினார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2574 — Sahih al Bukhari 51:9
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, அவர்களுக்கு தம் அன்பளிப்புகளை வழங்க மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள். இதன்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பைப் பெறுவதையே அவர்கள் விரும்பினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2575 — Sahih al Bukhari 51:10
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ إِيَاسٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَهْدَتْ أُمُّ حُفَيْدٍ خَالَةُ ابْنِ عَبَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقِطًا وَسَمْنًا وَأَضُبًّا، فَأَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الأَقِطِ وَالسَّمْنِ، وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا. قَالَ ابْنُ عَبَّاسٍ فَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டி யையும் வெண்ணெயையும் உடும்புகளை யும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலி ருந்தும் வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், பிடிக்காத தால் உடும்புகளை அவர்கள் உண்ணாமல் விட்டுவிட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது தடை செய்யப்பட்டதாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டி ருக்காது. அத்தியாயம் :