حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ الْعَلاَءِ ـ امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَخْبَرَتْهُ أَنَّهُمُ اقْتَسَمُوا الْمُهَاجِرِينَ قُرْعَةً. قَالَتْ فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، وَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ غُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ ". فَقُلْتُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا هُوَ فَوَاللَّهِ لَقَدْ جَاءَهُ الْيَقِينُ، وَاللَّهِ إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَوَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَاذَا يُفْعَلُ بِي ". فَقَالَتْ وَاللَّهِ لاَ أُزَكِّي بَعْدَهُ أَحَدًا أَبَدًا.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (புலம்பெயர்ந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்களுக்காக (அவர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதை முடிவு செய்ய) அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அப்போது உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். (அதன் படி) அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும்போனார். அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது நான் (உஸ்மான் அவர்களை நோக்கி), “சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும். அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை.20 அத்தியாயம் :
ஹதீஸ் 7004 — Sahih al Bukhari 91:22
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا وَقَالَ " مَا أَدْرِي مَا يُفْعَلُ بِهِ ". قَالَتْ وَأَحْزَنَنِي فَنِمْتُ، فَرَأَيْتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " ذَلِكَ عَمَلُهُ ".
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்: “மேலும் இவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: (இதைக் கேட்ட) நான் மிகவும் கவலைப்பட்டவாறே உறங்கிவிட்டேன். அப்போது (கனவில்) உஸ்மான் அவர் களுக்காக ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கக் கண்டேன். ஆகவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “அது அவரது நற்செயல்” என்று (விளக்கம்) கூறினார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 7005 — Sahih al Bukhari 91:23
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيّ َ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفُرْسَانِهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمُ الْحُلُمَ يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْهُ، فَلَنْ يَضُرَّهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிட மிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது. இதை நபித்தோழர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களின் குதிரைப் படை வீரர்களில் ஒருவருமான அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில் அது எனது நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.24 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தி னேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள் அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) “நான் தூங்கிக்கொண்டிருந்த போது (கனவில்) மக்கள் (பலவிதமான) மேலங்கிகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவுக்கு (முழுநீளச்) சட்டை யொன்றை அணிந்தவராக என்னைக் கடந்துசென்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், “(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 7009 — Sahih al Bukhari 91:27
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ عُرِضُوا عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ، فَمِنْهَا مَا يَبْلُغُ الثَّدْىَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجْتَرُّهُ ". قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الدِّينَ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்த போது (கனவில்) மக்கள் (பலவிதமான) மேலங்கிகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று சொன்னார்கள். மக்கள், “(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள். அத்தியாயம் :
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மதீனா பள்ளிவாசலில்) ஓர் அவையில் அமர்ந்திருந்தேன். அதில் சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் இருந்தார் கள். அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். (அன்னாரைக் கண்ட) மக்கள், “இவர் சொர்க்கவாசி களில் ஒருவர்” என்று கூறினர். இதைக் கேட்ட நான் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடம், “(தங்களைக் குறித்து) மக்கள் இப்படி இப்படிக் கூறினர்” என்று சொன்னேன். (அதற்கு) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் கூறுவது முறையல்ல. (மக்கள் இவ்வாறு பேசிக்கொள்வதற்குக் காரணம், நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நான் கண்ட கனவுதான். (அதில்) பசுமையான பூங்கா ஒன்றில் தூண் நடப்பட்டு இருந்தது. அத்தூணின் மேற்பகுதியில் பிடியொன்று காணப்பட்டது. அதன் கீழ்பகுதியில் சிறிய பணியாள் ஒருவர் இருந்தார். அப்போது (என்னிடம்) “இதில் ஏறுங்கள்” என்று சொல்லப்பட்டது. உடனே நான் (அதில்) ஏறி அந்தப் பிடியைப் பற்றினேன். பிறகு நான் இக்கனவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் விவரித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்), (இறைநம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இறப்பார்” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :
ஹதீஸ் 7011 — Sahih al Bukhari 91:29
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ، إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ. فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்துகொள்வதற்கு முன் னால்) இரண்டு முறை கனவில் கண்டுள் ளேன். அதில் ஒரு மனிதர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர், “இவர் உங்களின் (வருங்கால) மனைவி” என்றார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்த தாயின், இதை அவன் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்.27 அத்தியாயம் :