மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர் களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்த போது, “உங்களில் யார் (போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களது முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள். உடனே மக்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் அவர்களுடைய சமூகத் தலைவர்கள் பேசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.42 அத்தியாயம் :
முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக்கொள்வோமோ அதற்கு நேர்மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று) பேசுவதை (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7179 — Sahih al Bukhari 93:42
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنْ شَرَّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமான வன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.43 அத்தியாயம் :
ஹதீஸ் 7180 — Sahih al Bukhari 93:43
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ هِنْدَ، قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَأَحْتَاجُ أَنْ آخُذَ مِنْ مَالِهِ. قَالَ " خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(என் கணவர்) அபூசுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒரு மனிதர். நான் (செலவுக்காக) அவருடைய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போது மான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்” என்று சொன்னார்கள்.45 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக் குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.46 அத்தியாயம் :
ஹதீஸ் 7182 — Sahih al Bukhari 93:45
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ، فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ ". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ " احْتَجِبِي مِنْهُ "، لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ تَعَالَى.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக்கொண்டு “(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்போது அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, “(இவன்) என் சகோதரன். என் தந்தை யின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்” என்று கூறினார். ஆகவே, இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர்பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவன்) என் சகோதரர் மகன். அவர் இவன் விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், “(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரது ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு “தாய் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான் உரியது” என்று சொன்னார் கள். பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா (ரலி) அவர்களிடம், “இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டதால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.47 அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது (அறை யின்) வாயிலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். இப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதன் காரணத்தால் அவர் உண்மையே சொல்வதாக எண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (உண்மை தெரியாமல் வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்தால், அது நரக நெருப்பின் துண்டேயாகும். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.51 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் தோழர்களில் ஒருவர், ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலை யாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.53 அத்தியாயம் :