மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (தமக்குப்பின் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்திடும்) பொறுப்பை ஒப்படைத்திருந்த (ஆறு பேர் கொண்ட) குழுவினர் ஒன்றுகூடி தமக்குள் கலந்தாலோசித்தனர்.68 அவர்களிடம் (அக்குழுவில் இடம்பெற்றிருந்த) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நான் இந்த ஆட்சியதிகாரத் திற்காக உங்களுடன் போட்டியிடக் கூடியவன் அல்லன். ஆயினும், நீங்கள் விரும்பினால் உங்களிலிருந்தே ஒருவரை நான் உங்களுக்கு (ஆட்சித் தலைவராக)த் தேர்ந்தெடுக்கின்றேன்” என்று சொன்னார்கள். ஆகவே, குழுவினர் அந்தப் பணியை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இவ்வாறு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வசம் தங்கள் விவகாரத்தை அவர்கள் ஒப்படைத்துவிட்டபோது, மக்கள் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களையே மொய்க்கத் தொடங்கிவிட்டனர். எந்த அளவுக்கென்றால், மக்களில் எவருமே அக்குழுவினரைப் பின்தொடர்ந்ததாகவோ அவர்கள் பின்னே சென்றதாகவோ நான் காணவில்லை. அந்த நாட்களில் அவரிடம் மட்டுமே மக்கள் ஆலோசனை கலந்தபடி அவரையே சுற்றிவரத் தொடங்கி விட்டனர். எந்த நாள் காலையில் நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து அளித்தோமோ அன்றைய இரவு சிறிது நேரம் தூங்கியபிறகு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வந்து திடீரென என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். நான் விழித்துக்கொண்டேன். என்னிடம் அவர்கள், “நீங்களோ உறங்குகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு என்னைப் பெரிய அளவில் தூக்கம் தழுவவில்லை. நீங்கள் போய் ஸுபைர் பின் அல்அவ்வாமையும் சஅத் பின் அபீவக்காஸையும் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, நான் போய் அவர்களை அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அழைத்துவந்தேன். பிறகு அவ்விருவருடன் கலந்தாலோசித்து விட்டு என்னை அழைத்து, “அலீ (ரலி) அவர்களை என்னிடம் அழைத்துவருக” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அலீ (ரலி) அவர்களை அழைத்துவர, அவர்களிடம் நடுநிசிவரை ஆலோசனை செய்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் (ஆட்சிப் பொறுப்பேற்க) ஆவல் கொண்டவர்களாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடமிருந்து எழுந்தார்கள். அலீ (ரலி) அவர்களிடமிருந்து ஏதேனும் பிரச்சினை வருமோ என அப்துர் ரஹ்மான் அஞ்சியிருந்தார்கள். பிறகு, “உஸ்மான் (ரலி) அவர்களை என்னிடம் அழைத்துவருக” என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து வர, அவர்களிடமும் ஆலோசனை செய்தார்கள். இறுதியில், சுப்ஹ் தொழுகைக்கு பாங்கு சொன்னவர் சொல்ல அவ்விருவரும் கலைந்தனர். அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்துவிட்டபின் அந்த ஆலோசனைக் குழுவினர் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே ஒன்றுகூடினார்கள். பின்னர் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் அங்கு வந்திருந்தவர்களிடமும் மாகாணங்களின் ஆளுநர்களிடமும் ஆளனுப்பினார்கள். அந்த ஆளுநர்கள் (மக்கா வந்து) அந்த ஹஜ்ஜில் உமர் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டிருந்(துவிட்டு மதீனா வந்திருந்)தனர்.69 அவர்கள் ஒன்று கூடியபோது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஓரிறை உறுதிமொழியைக் கூறிவிட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: அலீ (ரலி) அவர்களே! நான் மக்களின் கருத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் உஸ்மானுக்குச் சமமாக எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே, உங்கள் உள்ளத்தில் (என்மீது) வருத்தம் ஏதும் கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள். பிறகு (உஸ்மான் (ரலி) அவர்களை நோக்கி), “அல்லாஹ் வகுத்த வழிமுறைப் படியும் அவனுடைய தூதரின் நடைமுறைப்படியும் அவர்களுக்குப் பின்னுள்ள கலீஃபாக்கள் இருவரின் நடைமுறைகளின்படியும் உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறினார்கள். இப்படி அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய முஹாஜிர்கள், அன்சாரிகள், மாகாண ஆளுநர்கள், முஸ்லிம்கள் என்று மக்கள் அனைவரும் (உஸ்மான் (ரலி) அவர்களுக்கு) விசுவாசப் பிரமாணம் செய்தனர்.70 அத்தியாயம் :
ஹதீஸ் 7208 — Sahih al Bukhari 93:68
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ بَايَعْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ فَقَالَ لِي " يَا سَلَمَةُ أَلاَ تُبَايِعُ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ بَايَعْتُ فِي الأَوَّلِ. قَالَ " وَفِي الثَّانِي ".
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த மரத்தின்கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தோம். அப்போது அவர்கள் என்னிடம், “சலமாவே! நீங்கள் உறுதிமொழி அளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! முதல் முறையிலேயே நான் உறுதிமொழி அளித்துவிட்டேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இரண்டாவது முறையும் உறுதிமொழி அளியுங்கள்” என்று சொன்னார்கள்.71 அத்தியாயம் :
ஹதீஸ் 7209 — Sahih al Bukhari 93:69
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَهُ وَعْكٌ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، فَخَرَجَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا ".
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَهُ وَعْكٌ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، فَخَرَجَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا ".
ஹதீஸ் 7210 — Sahih al Bukhari 93:70
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ، وَكَانَ، قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ ابْنَةُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هُوَ صَغِيرٌ " فَمَسَحَ رَأْسَهُ وَدَعَا لَهُ، وَكَانَ يُضَحِّي بِالشَّاةِ الْوَاحِدَةِ عَنْ جَمِيعِ أَهْلِهِ.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத் (ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! இவனிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், “இவன் சிறுவனாயிற்றே” என்று சொல்லிவிட்டு, (அன்போடு) என் தலையை வருடிக்கொடுத்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.73 (அறிவிப்பாளர் ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தம் குடும்பத்தார் அனைவருக்காகவும் குர்பானி கொடுத்துவந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7211 — Sahih al Bukhari 93:71
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،. أَنَّ أَعْرَابِيًّا، بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَصَابَ الأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَأَتَى الأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طِيبُهَا ".
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،. أَنَّ أَعْرَابِيًّا، بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَصَابَ الأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَأَتَى الأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طِيبُهَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்றுபேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக் குத் துன்பமிகு வேதனைதான் கிடைக் கும். ஒருவர், (மக்களின் பயணப்) பாதை யில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவர் ஆவார். இன்னொருவர் (ஆட்சித்) தலைவரி டம் தமது உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவர். தாம் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பார்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசமாக நடக்கமாட்டார். மற்றொருவர் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தமது வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, “இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்)பட்டது” என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையென நம்பவைத்து (தம் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவர் ஆவார்.75 அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஓர் அவையில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபசாரம் செய்யமாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளை (வறுமைக்கு அஞ்சி)க் கொல்லமாட்டீர்கள்; நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள்; நன்மையான காரியத்தில் (தலைவருக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளியுங்கள். உங்களில் எவர் (இந்த உறுதி மொழிக்கேற்ப விசுவாசமாக நடந்து) அதை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு நற்பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து உலகிலேயே அதற்காக அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அந்தத் தண்டனையே அவரது (குற்றத் திற்குப்) பரிகாரமாக ஆகிவிடும். அதில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அதை (உலகில்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகும். அவன் நாடினால் அவரை தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அதன்படி உறுதிமொழி அளித்தோம்.77 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7214 — Sahih al Bukhari 93:74
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلاَمِ بِهَذِهِ الآيَةِ {لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} قَالَتْ وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ، إِلاَّ امْرَأَةً يَمْلِكُهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம், “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார் கள்; நற்செயலில் உங்களுக்கு மாறு செய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” எனும் (60:12ஆவது) இறை வசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.78 அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் (பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்; ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தனது கையைப் பின்வாங்கிக்கொண்டு, “இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவி செய்தாள். ஆகவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகின்றேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள். (ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதி மொழியளித்தவர்களில்) உம்மு சுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் துணைவியாரான ‘பின்த் அபீசப்ராவும்’ அல்லது ‘பின்த் அபீசப்ராவும் முஆத் (ரலி) அவர்களின் துணைவியாரும்’ தவிர வேறெவரும் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.79 அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்” என்று கோரினார். நபி (ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, “(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள். அவர் திரும்பிச் சென்றபோது, “மதீனா நகரம் கொல்லனின் உலை போன்றதாகும்; அது தன்னிலுள்ள தீயவர்களை (சோதனைகள் மூலம்) வெளியேற்றி நல்ல வர்களைத் தூய்மைப்படுத்துகின்றது” என்று சொன்னார்கள்.80 அத்தியாயம் :