Qurani·قرآني
தமிழ்

தகராறுகள் (குஸூமாத்)

16 ஹதீஸ்கள் · #2410–2425

ஹதீஸ் 2420 — Sahih al Bukhari 44:10
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلاَةِ فَتُقَامَ ثُمَّ أُخَالِفَ إِلَى مَنَازِلِ قَوْمٍ لاَ يَشْهَدُونَ الصَّلاَةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தொழுகையை (நிறைவேற்றுமாறு) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது (கூட்டுத்) தொழு கையில் கலந்துகொள்ளாத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2421 — Sahih al Bukhari 44:11
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ أَنْ أَنْظُرَ ابْنَ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ، فَإِنَّهُ ابْنِي‏.‏ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي‏.‏ فَرَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم شَبَهًا بَيِّنًا فَقَالَ ‏ "‏ هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களி டம் வழக்கொன்றைக் கொண்டுவந்தனர். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (உத்பா பின் அபீவக்காஸ்), ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் அதிகாரத்தில் அவள் இருந்தபோது பிறந்தவர்” என்று கூறினார்.5 அந்த அடிமைப் பெண்ணின் மகனி டம் (சஅதுடைய சகோதரர் உத்பாவின்) சாயலைத் தெளிவாகக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.6 பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக்கொள்.)” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 2422 — Sahih al Bukhari 44:12
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ ‏"‏‏.‏ قَالَ عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ‏"‏ أَطْلِقُوا ثُمَامَةَ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிநஜ்த்’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பிவைத் தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘ஸுமாமா பின் உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைப் பிடித்து வந்தார்கள். அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘‘ஸுமாமாவே, உம்மிடம் என்ன (செய்தி) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுமாமாவை அவிழ்த்து விட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 2423 — Sahih al Bukhari 44:13
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்த் மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்று அழைக்கப் படுபவரைப் பிடித்து வந்தார்கள். (மக்கள்) அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2424 — Sahih al Bukhari 44:14
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ رَبِيعَةَ،‏.‏ وَقَالَ غَيْرُهُ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الأَنْصَارِيِّ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الأَسْلَمِيِّ دَيْنٌ، فَلَقِيَهُ فَلَزِمَهُ، فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَمَرَّ بِهِمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ يَا كَعْبُ ‏"‏‏.‏ وَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ النِّصْفَ، فَأَخَذَ نِصْفَ مَا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا‏.‏
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பள்ளிவாசலில்) சந்தித் தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வற்புறுத்தலானேன்.) நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘‘கஅபே!” என்றழைத்து, ‘‘பாதியை (வாங்கிக்கொள்)” என்று கூறுவது போல் தமது கையால் சைகை செய்தார்கள். எனவே, நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து) விட்டு விட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2425 — Sahih al Bukhari 44:15
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَرَاهِمُ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ، فَقُلْتُ لاَ وَاللَّهِ لاَ أَكْفُرُ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم حَتَّى يُمِيتَكَ اللَّهُ ثُمَّ يَبْعَثَكَ‏.‏ قَالَ فَدَعْنِي حَتَّى أَمُوتَ ثُمَّ أُبْعَثَ فَأُوتَى مَالاً وَوَلَدًا، ثُمَّ أَقْضِيَكَ‏.‏ فَنَزَلَتْ ‏{‏أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا‏}‏ الآيَةَ‏.‏
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். எனக்கு ஆஸ் பின் வாயில் என்பவர் சில திர்ஹங்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அவற்றைக் கொடுத்துவிடும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனது கடனைத் தரமாட்டேன்” என்று கூறினார். நான், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப் படும்வரை என்னை விட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்” என்று கூறினார். அப்போதுதான், ‘‘எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டேயிருக் கும்’ என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்துகொண்டானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக்கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்...” (19:77லி80) எனும் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.10 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.