அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளை யடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்க மாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில் ‘கொள்ளையடிப்பது’ பற்றிக் கூறப்படவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 6773 — Sahih al Bukhari 86:2
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ح حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்சமட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6774 — Sahih al Bukhari 86:3
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوْ بِابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ بِالْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ. قَالَ فَضَرَبُوهُ، فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ.
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குடி போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6 அத்தியாயம் :
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள் (மிகவும்) வேதனைப் பட்டார்கள். மேலும், அவரை அடிக்குமாறு வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட் டார்கள். ஆகவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 6776 — Sahih al Bukhari 86:5
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6777 — Sahih al Bukhari 86:6
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَدْ شَرِبَ قَالَ " اضْرِبُوهُ ". قَالَ أَبُو هُرَيْرَةَ فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ أَخْزَاكَ اللَّهُ. قَالَ " لاَ تَقُولُوا هَكَذَا لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள், “இவரை அடியுங்கள்” என்று சொன்னார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப் பட்ட) தமது துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!” என்று கூறி (சாபமிட்ட)னர். நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்குத் துணைபோகாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6778 — Sahih al Bukhari 86:7
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، سَمِعْتُ عُمَيْرَ بْنَ سَعِيدٍ النَّخَعِيَّ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا كُنْتُ لأُقِيمَ حَدًّا عَلَى أَحَدٍ فَيَمُوتَ، فَأَجِدَ فِي نَفْسِي، إِلاَّ صَاحِبَ الْخَمْرِ، فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسُنَّهُ.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண் டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்துபோனால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக் குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை. அத்தியாயம் :
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சியிலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம். உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந் தும் விஷயத்தில்) மக்கள் எல்லைமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது, (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6780 — Sahih al Bukhari 86:9
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ جَلَدَهُ فِي الشَّرَابِ، فَأُتِيَ بِهِ يَوْمًا فَأَمَرَ بِهِ فَجُلِدَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُمَّ الْعَنْهُ مَا أَكْثَرَ مَا يُؤْتَى بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ".
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப் பெயரில் அழைக் கப்பட்டுவந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரை அடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், “இறைவா! இவர்மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டுவரப்பட்டுள்ளார்!” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6781 — Sahih al Bukhari 86:10
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا ابْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَكْرَانَ، فَأَمَرَ بِضَرْبِهِ، فَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِيَدِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِنَعْلِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ رَجُلٌ مَالَهُ أَخْزَاهُ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكُونُوا عَوْنَ الشَّيْطَانِ عَلَى أَخِيكُمْ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: போதையிலிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்கு மாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப் பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒரு மனிதர் (அவரைப் பார்த்து), “அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவியாளர்களாக ஆகி விடாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :