Qurani·قرآني
தமிழ்

அல்லாஹ் நிர்ணயித்த தண்டனை வரம்புகள் (ஹுதூத்)

89 ஹதீஸ்கள் · #6772–6860

ஹதீஸ் 6842 — Sahih al Bukhari #6842
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُهُمَا اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ‏.‏ وَقَالَ الآخَرُ وَهْوَ أَفْقَهُهُمَا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي أَنْ أَتَكَلَّمَ‏.‏ قَالَ ‏"‏ تَكَلَّمْ ‏"‏‏.‏ قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا ـ قَالَ مَالِكٌ وَالْعَسِيفُ الأَجِيرُ ـ فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَبِجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ عَلَيْكَ ‏"‏‏.‏ وَجَلَدَ ابْنَهُ مِائَةً وَغَرَّبَهُ عَامًا، وَأَمَرَ أُنَيْسًا الأَسْلَمِيَّ أَنْ يَأْتِيَ امْرَأَةَ الآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا‏.‏
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகி யோர் கூறியதாவது: இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், “(நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள்” என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். (பின்னர் கிராமவாசியான முதல் நபர்) “என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “பேசு” என்றார்கள். அவர், “என் மகன், இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத்தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்” என்று சொன்னார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு சாட்டையடிகள் வழங்கினார்கள். ஓராண்டு காலத்திற்கு அவருடைய மகனை நாடு கடத்தினார்கள். (அருகிலிருந்த) உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம், “அந்த மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரணை செய்தபோது, அவளும் (தனது குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். ஆகவே அவளுக்கு உனைஸ் (ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.56 அத்தியாயம் :
ஹதீஸ் 6843 — Sahih al Bukhari 86:65

ஹதீஸ் 6844 — Sahih al Bukhari 86:66
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ أَبُو بَكْرِ ـ رضى الله عنه ـ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ‏.‏ فَعَاتَبَنِي، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தமது தலையை என் மடி மீது வைத்துக்கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களை யும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து)விட்டாயே!” எனக் கடிந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தமது கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தால்தான் நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய வசனத்தை அருளினான்.59 அத்தியாயம் :
ஹதீஸ் 6845 — Sahih al Bukhari 86:67
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ‏.‏ فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي‏.‏ نَحْوَهُ‏.‏ لَكَزَ وَوَكَزَ وَاحِدٌ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கழுத்தணியை நான் தொலைத்துவிட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்க நேரிட்டபோது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், “ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்ததால் நான் அசையாதிருந் தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது. (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6846 — Sahih al Bukhari 86:68
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ عَنِ الْمُغِيرَةِ، قَالَ قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ لَوْ رَأَيْتُ رَجُلاً مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ‏.‏ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، لأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي ‏"‏‏.‏
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்” என்று சொன்னார்கள்.60 அத்தியாயம் :
ஹதீஸ் 6847 — Sahih al Bukhari 86:69
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ‏.‏ فَقَالَ ‏"‏ هَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ مَا أَلْوَانُهَا ‏"‏‏.‏ قَالَ حُمْرٌ‏.‏ قَالَ ‏"‏ فِيهَا مِنْ أَوْرَقَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَأَنَّى كَانَ ذَلِكَ ‏"‏‏.‏ قَالَ أُرَاهُ عِرْقٌ نَزَعَهُ‏.‏ قَالَ ‏"‏ فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார். “அவற்றின் நிறம் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “சிவப்பு” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல்நிற ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். அவர், “அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என நான் கருதுகின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.62 அத்தியாயம் :
ஹதீஸ் 6848 — Sahih al Bukhari 86:70
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏"‏‏.‏
அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்ற வியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடி களுக்குமேல் வழங்கப்படலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6849 — Sahih al Bukhari 86:71
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏"‏‏.‏
அப்துர் ரஹ்மான் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவி யுற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்: “அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்ற வியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதாரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6850 — Sahih al Bukhari 86:72
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ قَالَ بَيْنَمَا أَنَا جَالِسٌ، عِنْدَ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ إِذْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ فَحَدَّثَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا بُرْدَةَ الأَنْصَارِيَّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَجْلِدُوا فَوْقَ عَشْرَةِ أَسْوَاطٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏"‏‏.‏
அபூபுர்தா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அப்துர் ரஹ்மான் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் வந்து, சுலைமான் அவர்களுக்கு ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு சுலைமான் (ரஹ்) அவர்கள் எங்களை முன்னோக்கி, அப்துர் ரஹ்மான் தம் தந்தை ஜாபிர் (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அபூபுர்தா (ரலி) அவர்களிடம் செவியுற்றதாகத் தெரிவித்தார்கள் என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6851 — Sahih al Bukhari 86:73
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ فَقَالَ لَهُ رِجَالٌ مِنَ الْمُسْلِمِينَ فَإِنَّكَ يَا رَسُولَ اللَّهِ تُوَاصِلُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ ‏"‏‏.‏ فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ ‏"‏ لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ ‏"‏‏.‏ كَالْمُنَكِّلِ بِهِمْ حِينَ أَبَوْا‏.‏ تَابَعَهُ شُعَيْبٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَيُونُسُ عَنِ الزُّهْرِيِّ‏.‏ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர்நோன்பு நோற்க வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்óம்களில் சிலர், “அவ்வாறாயின், நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்று சொன்னார்கள். தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது ஒருநாள் தொடர்நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர்நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தி யிருப்பேன்” என்று -மக்கள் தொடர் நோன்பிóருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில்- கூறினார்கள்.64 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.