حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ قَالَ " عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ " خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الإِبِلِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوِ احْمَرَّ وَجْهُهُ ـ ثُمَّ قَالَ " مَا لَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ".
ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொள். பிறகு அதைச் செலவழித் துக் கொள். அதன் உரிமையாளர் வந்து (சரியான) அடையாளம் கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்திவிடு” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க் குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங் கள் இரண்டும் சிவந்துவிட்டன; லிஅல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.லி பிறகு ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் உரிமையாளர் அதைச் சந்திக்கும்வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்தி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள) அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கிறதே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை(உறை)யையும் முடிச்சையும் பற்றி (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்துவிடு). இல்லையென் றால் அதைச் செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம் பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கே தாகம் தணித்துக்கொள்கிறது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது. அதை அதன் உரிமையாளர் அடைந்துகொள்ளும்வரை அதை விட்டுவிடு” என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டார். அதற்கு, ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 2439 — Sahih al Bukhari 45:15
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي الْبَرَاءُ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقْتُ، فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ فَقُلْتُ لِمَنْ أَنْتَ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ هَلْ أَنْتَ حَالِبٌ لِي قَالَ نَعَمْ. فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ـ ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى ـ فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ، حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘‘நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், ‘‘குறைஷியரில் இன்ன மனிதருடைய பணியாள்” என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், ‘‘உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், ”ஆம்; (இருக்கிறது)” என்று பதிலளித்தான். எனக்காக நீ பால் கறந்து கொடுப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி என்றான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து அதன் தொடைகளுக்கிடையே காலை வைத்து அழுத்திக்கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளையிட்டேன். பிறகு அவன் தன் இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். ...றறஇப்படி உதறும்படி” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கைமீது அடித்துக் காட்டினார்கள்... (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண் டான்.) பிறகு சிறிதளவு பால் கறந்தான். நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தோல் பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று கூறினேன். நான் திருப்தியடையும்வரை (அதை) அவர்கள் அருந்தி னார்கள்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :