حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْتَقَ نَصِيبًا أَوْ شَقِيصًا فِي مَمْلُوكٍ، فَخَلاَصُهُ عَلَيْهِ فِي مَالِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلاَّ قُوِّمَ عَلَيْهِ، فَاسْتُسْعِيَ بِهِ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ ". تَابَعَهُ حَجَّاجُ بْنُ حَجَّاجٍ وَأَبَانُ وَمُوسَى بْنُ خَلَفٍ عَنْ قَتَادَةَ. اخْتَصَرَهُ شُعْبَةُ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் (தமக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்கு மாயின், தமது செல்வத்திலிருந்தே அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லை யெனில், அவ்வடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். (மீதித் தொகையைக் கட்டுவதற்கு வசதியாக) உழைப்பதற்கு அவ்வடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகமான சிரமத்தைத் தரக் கூடாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2528 — Sahih al Bukhari 49:12
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாத வரை அல்லது (அதை வெளிப்படுத்திப்) பேசாத வரை எனக்காக அல்லாஹ் மன்னிக்கின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2529 — Sahih al Bukhari 49:13
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلاِمْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் (அனைத்தும்) எண்ணங் களைப் பொறுத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந் தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செய்வாராயின் அவரது புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமையும். எவரது புலம்பெயர்தல், அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக் காகவோ அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.5 இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2530 — Sahih al Bukhari 49:14
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ لَمَّا أَقْبَلَ يُرِيدُ الإِسْلاَمَ وَمَعَهُ غُلاَمُهُ، ضَلَّ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ، فَأَقْبَلَ بَعْدَ ذَلِكَ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَبَا هُرَيْرَةَ، هَذَا غُلاَمُكَ قَدْ أَتَاكَ ". فَقَالَ أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ حُرٌّ. قَالَ فَهُوَ حِينَ يَقُولُ يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்தபொழுது என்னுடன் என் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னையும் நான் அவரையும் பிரிந்து வழிமாறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தபொழுது அவ் வடிமை வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைரா! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டார் (பாரும்)” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘(அல்லாஹ் வின் தூதரே!) இந்த அடிமை சுதந்திர மாகிவிட்டார் என்பதற்கு நான் தங்களைச் சாட்சியாக ஆக்குகிறேன்” என்று கூறி னேன்.7 அறிவிப்பாளர் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது) பின்வரும் கவிதையைப் பாடிக்கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது: எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும், காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து! அத்தியாயம் :
ஹதீஸ் 2531 — Sahih al Bukhari 49:15
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ فِي الطَّرِيقِ يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ قَالَ وَأَبَقَ مِنِّي غُلاَمٌ لِي فِي الطَّرِيقِ ـ قَالَ ـ فَلَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بَايَعْتُهُ، فَبَيْنَا أَنَا عِنْدَهُ إِذْ طَلَعَ الْغُلاَمُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا هُرَيْرَةَ، هَذَا غُلاَمُكَ ". فَقُلْتُ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ. فَأَعْتَقْتُهُ. لَمْ يَقُلْ أَبُو كُرَيْبٍ عَنْ أَبِي أُسَامَةَ حُرٌّ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும் காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து! என்று பாடினேன். வழியில் என் அடிமை ஒருவன் என்னை விட்டுத் தப்பி யோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அபூஹுரைரா! இதோ உங்கள் அடிமை!” என்று கூறி னார்கள். நான், ‘‘அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக” என்று கூறி, அவனை விடுதலை செய்துவிட்டேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிசுதந்திரமானவன்’ எனும் சொல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2532 — Sahih al Bukhari 49:16
حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ لَمَّا أَقْبَلَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَمَعَهُ غُلاَمُهُ وَهْوَ يَطْلُبُ الإِسْلاَمَ، فَأَضَلَّ أَحَدُهُمَا صَاحِبَهُ بِهَذَا، وَقَالَ أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ لِلَّهِ.
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தேடி (நபி (ஸல்) அவர்களை நோக்கி மதீனா) வந்தபோது, அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தார். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள்... பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2533 — Sahih al Bukhari 49:17
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ عُتْبَةَ بْنَ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنْ يَقْبِضَ إِلَيْهِ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، قَالَ عُتْبَةُ إِنَّهُ ابْنِي. فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَمَنَ الْفَتْحِ أَخَذَ سَعْدٌ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ. فَأَقْبَلَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَقْبَلَ مَعَهُ بِعَبْدِ بْنِ زَمْعَةَ. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ هَذَا ابْنُ أَخِي عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَخِي ابْنُ وَلِيدَةِ زَمْعَةَ، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ وَلِيدَةِ زَمْعَةَ، فَإِذَا هُوَ أَشْبَهُ النَّاسِ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ ". مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِيهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ ". مِمَّا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ. وَكَانَتْ سَوْدَةُ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களி டம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணு டைய மகனைப் பற்றி, ‘‘அவன் என் மகன்” என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், சஅத் (ரலி) அவர்கள் ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஸம்ஆவின் (சொந்த) மகன் அப்த் (ரலி) அவர்களையும் தம்முடன் அழைத்து வந்தார். பிறகு சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம், இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; என் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண் ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பான வனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆ வின் மகன் அப்த் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் எனும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக்கொள்” என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்ட காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கட்டளையிட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 2534 — Sahih al Bukhari 49:18
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَعْتَقَ رَجُلٌ مِنَّا عَبْدًا لَهُ عَنْ دُبُرٍ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِهِ فَبَاعَهُ. قَالَ جَابِرٌ مَاتَ الْغُلاَمُ عَامَ أَوَّلَ.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவர் தம் அடிமை ஒருவனை பின்தேதியிட்டு விடுதலை செய்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை, (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின்) முதலாம் ஆண்டில் இறந்துவிட்டார்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 2535 — Sahih al Bukhari 49:19
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ، وَعَنْ هِبَتِهِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகின்ற உரிமையை விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2536 — Sahih al Bukhari 49:20
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَيْتُ بَرِيرَةَ فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْطَى الْوَرِقَ ". فَأَعْتَقْتُهَا، فَدَعَاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا فَقَالَتْ لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا ثَبَتُّ عِنْدَهُ. فَاخْتَارَتْ نَفْسَهَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்கினேன். அப்போது அவருடைய உரிமையாளர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அவளை விடுதலை செய்துவிடு! ஏனெனில், விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) வாரிசாகும் உரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். நான் அவரை விடுதலை செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவருடைய கணவர் விஷயத் தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்துவிடுவது ஆகிய இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, ‘‘அவர் எனக்கு எவ்வளவுதான் (கொட்டிக்) கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்கமாட்டேன்” என்று கூறி, (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அத்தியாயம் :