Qurani·قرآني
தமிழ்

மாதவிடாய் (ஹைள்)

40 ஹதீஸ்கள் · #294–333

ஹதீஸ் 294 — Sahih al Bukhari 6:1
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قَالَ ‏"‏ مَا لَكِ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ‏"‏‏.‏ قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதி யாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தை யும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின்போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 295 — Sahih al Bukhari 6:2
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன். அத்தியாயம் :
ஹதீஸ் 296 — Sahih al Bukhari 6:3
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ سُئِلَ أَتَخْدُمُنِي الْحَائِضُ أَوْ تَدْنُو مِنِّي الْمَرْأَةُ وَهْىَ جُنُبٌ فَقَالَ عُرْوَةُ كُلُّ ذَلِكَ عَلَىَّ هَيِّنٌ، وَكُلُّ ذَلِكَ تَخْدُمُنِي، وَلَيْسَ عَلَى أَحَدٍ فِي ذَلِكَ بَأْسٌ، أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ ـ تَعْنِي ـ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ وَهْىَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهْىَ حَائِضٌ‏.‏
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? அல்லது பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர்மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில்(கூட) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிட்டுள்ளார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ‘இஃதிகாஃப்’ இருந்துகொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையி-ருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையி-ருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர் களுக்குத் தலைவாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 297 — Sahih al Bukhari 6:4
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ مَنْصُورٍ ابْنِ صَفِيَّةَ، أَنَّ أُمَّهُ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 298 — Sahih al Bukhari 6:5
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أُمِّ سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ، بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيصَةٍ إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي قَالَ ‏ "‏ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன், கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற் பட்டுவிட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் (நிஃபாஸ்) ஏற்பட்டுவிட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கறுப்புப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 299 — Sahih al Bukhari #299
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ، كِلاَنَا جُنُبٌ‏.‏ وَكَانَ يَأْمُرُنِي فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ‏.‏ وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَىَّ وَهُوَ مُعْتَكِفٌ، فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ‏.‏

ஹதீஸ் 300 — Sahih al Bukhari #300

ஹதீஸ் 301 — Sahih al Bukhari 6:6

ஹதீஸ் 302 — Sahih al Bukhari 6:7
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، قَالَ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ ـ هُوَ الشَّيْبَانِيُّ ـ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُبَاشِرَهَا، أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا ثُمَّ يُبَاشِرُهَا‏.‏ قَالَتْ وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْلِكُ إِرْبَهُ‏.‏ تَابَعَهُ خَالِدٌ وَجَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள போது, அவரை அணைத்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினால், மாதவிடாய் (இரத்தம் கொட்டும்) ஆரம்ப வேளையில் கீழாடையை அணிந்துகொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். பின்னர் அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 303 — Sahih al Bukhari 6:8
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ مَيْمُونَةَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يُبَاشِرَ امْرَأَةً مِنْ نِسَائِهِ أَمَرَهَا فَاتَّزَرَتْ وَهْىَ حَائِضٌ‏.‏ وَرَوَاهُ سُفْيَانُ عَنِ الشَّيْبَانِيِّ‏.‏
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரை -அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது- அணைத்துக்கொள்ள விரும்பினால், கீழாடையைக் கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.