அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களி லும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘அவர்களைவிடப் பெரிய வயதுடையவர் களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, ‘‘என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன். அதற்கு அந்த இளவல், ‘‘அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டே இருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘‘இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக்கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் அவனைக் கொன்றவர்?” என்று கேட்டார் கள். அவர்களில் ஒவ்வொருவரும், ‘‘நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, ‘‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) ‘‘அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர். அத்தியாயம் :
ஹதீஸ் 3142 — Sahih al Bukhari 57:50
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ، فَلَمَّا الْتَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ، فَرَأَيْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ عَلاَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَاسْتَدَرْتُ حَتَّى أَتَيْتُهُ مِنْ وَرَائِهِ حَتَّى ضَرَبْتُهُ بِالسَّيْفِ عَلَى حَبْلِ عَاتِقِهِ، فَأَقْبَلَ عَلَىَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ الْمَوْتِ، ثُمَّ أَدْرَكَهُ الْمَوْتُ فَأَرْسَلَنِي، فَلَحِقْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقُلْتُ مَا بَالُ النَّاسِ قَالَ أَمْرُ اللَّهِ، ثُمَّ إِنَّ النَّاسَ رَجَعُوا، وَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ ". فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ " مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ " فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ، ثُمَّ قَالَ الثَّالِثَةَ مِثْلَهُ فَقَالَ رَجُلٌ صَدَقَ يَا رَسُولَ اللَّهِ، وَسَلَبُهُ عِنْدِي فَأَرْضِهِ عَنِّي. فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ رضى الله عنه لاَهَا اللَّهِ إِذًا يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسْدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم يُعْطِيكَ سَلَبَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " صَدَقَ ". فَأَعْطَاهُ فَبِعْتُ الدِّرْعَ، فَابْتَعْتُ بِهِ مَخْرِفًا فِي بَنِي سَلِمَةَ، فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ.
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட் டோம்.60 (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த் தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சுற்றிக் கொண்டு அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக்கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்க லானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான். உடனே நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இது) அல்லாஹ் விதித்த விதி” என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துகொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு மூன்றாவது தடவையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அபூகத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத் துரைத்தேன். ஒரு மனிதர், ‘‘இவர் சொன்னது உண்மையே. அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னி டம் உள்ளன. எனக்காக (அவருக்கு ஏதேனும் வழங்கி) அவரைத் திருப்திப் படுத்திவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூபக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ சலிமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவியபின் நான் சேகரித்த முதல் சொத்தாகும். அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட் டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) கொடையுள்ளத் தோடு பெறுகிறாரோ அவருக்கு இதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கைதான் (வாங்கும்) தாழ்ந்த கையைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! தங்களுக்குப்பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும்வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறினேன். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு (நிதியை) வழங்க அழைப்புக் கொடுத்துவந்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் ஹகீம் (ரலி) அவர்களுக்கு (நிதி வழங்க) அழைப்புக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்தும் (உதவி நிதியை) ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம்களே! (வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும்) இந்தச் செல்வத்திலிருந்து ஹகீம் அவர்களின் பங்காக அல்லாஹ் கொடுத்த அவரது உரிமையை அவர்முன் நான் சமர்ப்பித்து விட்டேன். அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்” என்று கூறினார்கள். இவ்விதம் ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பிறகு மக்களில் எவரிடமிருந்தும் எதையும், தாம் இறக்கும்வரை பெற்றுக் கொள்ளவில்லை.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3144 — Sahih al Bukhari 57:52
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَىَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ، فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ. قَالَ وَأَصَابَ عُمَرُ جَارِيَتَيْنِ مِنْ سَبْىِ حُنَيْنٍ، فَوَضَعَهُمَا فِي بَعْضِ بُيُوتِ مَكَّةَ ـ قَالَ ـ فَمَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَبْىِ حُنَيْنٍ، فَجَعَلُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا هَذَا فَقَالَ مَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّبْىِ. قَالَ اذْهَبْ فَأَرْسِلِ الْجَارِيَتَيْنِ. قَالَ نَافِعٌ وَلَمْ يَعْتَمِرْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ وَلَوِ اعْتَمَرَ لَمْ يَخْفَ عَلَى عَبْدِ اللَّهِ. وَزَادَ جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ مِنَ الْخُمُسِ. وَرَوَاهُ مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ فِي النَّذْرِ وَلَمْ يَقُلْ يَوْمَ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்குக் கருணை காட்டி அவர் களைச் சுதந்திரமாக விட்டுவிட்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்க் கைதிகள் மீது கருணை புரிந்து அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்று சொன்னார்கள். (உடனே) உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நீ சென்று அந்த இரு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டுவிடு” என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிஅரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரு அடிமைப் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வந்துள்ளது. மஅமர் பின் ஸாயித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்து, ‘‘இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று மட்டுமே வந்துள்ளது. ‘‘ஒருநாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று (யிஒருநாள்’ எனும் குறிப்பு) இடம் பெறவில்லை.62 அத்தியாயம் :
ஹதீஸ் 3145 — Sahih al Bukhari 57:53
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ تَغْلِبَ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَكَأَنَّهُمْ عَتَبُوا عَلَيْهِ فَقَالَ " إِنِّي أُعْطِي قَوْمًا أَخَافُ ظَلَعَهُمْ وَجَزَعَهُمْ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْخَيْرِ وَالْغِنَى، مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ ". فَقَالَ عَمْرُو بْنُ تَغْلِبَ مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ. وَزَادَ أَبُو عَاصِمٍ عَنْ جَرِيرٍ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِمَالٍ أَوْ بِسَبْىٍ فَقَسَمَهُ. بِهَذَا.
அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார் கள். அவர்கள் (அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்) நபி (ஸல்) அவர் களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர், நம்பிக்கை பலவீனப்பட்டுப் போய்விடுவார் என்றும் பொறுமையிழந்து நிலைகுலைந்து போய்விடுவார் என்றும் நான் அஞ்சு கிறேனோ அவருக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத் தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மை யையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப் அவர்களும்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டு)ப் புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைத்திருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.63 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஆஸிம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில செல்வம், அல்லது கைதிகள் கொண்டுவரப்பட்டனர். அவர்களை நபியவர்கள் பங்கிட்டார்கள்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 3146 — Sahih al Bukhari 57:54
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي أُعْطِي قُرَيْشًا أَتَأَلَّفُهُمْ، لأَنَّهُمْ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் குறைஷியருடன் நேசத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையை விட்டு விட்டு (இப்போதுதான்) புதிதாக இஸ்லாத் தில் இணைந்துள்ளனர். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3147 — Sahih al Bukhari 57:55
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ نَاسًا، مِنَ الأَنْصَارِ قَالُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِنْ أَمْوَالِ هَوَازِنَ مَا أَفَاءَ، فَطَفِقَ يُعْطِي رِجَالاً مِنْ قُرَيْشٍ الْمِائَةَ مِنَ الإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَدَعُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ قَالَ أَنَسٌ فَحُدِّثَ رَسُولُ اللَّهِ بِمَقَالَتِهِمْ، فَأَرْسَلَ إِلَى الأَنْصَارِ، فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، وَلَمْ يَدْعُ مَعَهُمْ أَحَدًا غَيْرَهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا كَانَ حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ ". قَالَ لَهُ فُقَهَاؤُهُمْ أَمَّا ذَوُو آرَائِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا، وَأَمَّا أُنَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُ الأَنْصَارَ، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَوَاللَّهِ مَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ ". قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا. فَقَالَ لَهُمْ " إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أُثْرَةً شَدِيدَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم عَلَى الْحَوْضِ ". قَالَ أَنَسٌ فَلَمْ نَصْبِرْ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன் தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷியரில் சிலருக்கு நூறு ஒட்டகங் களைக் கொடுக்கலானார்கள்.64 உடனே அன்சாரிகளில் சிலர், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று பேசிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச்சொல்லி, பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் அவர்களை ஒன்றுதிரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுதிரண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘‘உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், ‘‘எங்களில் கருத்துடையோர் எதுவும் சொல்லவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கி றார்கள். ஆனால், நம்மை விட்டுவிடுகிறார் களே!› என்று பேசிக்கொண்டார்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைமறுப்பைக் கைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். மக்களெல்லாரும் செல்வங்களை எடுத்துக் கொண்டுசெல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்)கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்ப வற்றைவிட நீங்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்; (நீங்களே எங்களுக்குப் போதுமென்று) நாங்கள் திருப்தியடைந் தோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப்பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களைவிட மற்றவர் களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் யிஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். இதை அறிவித்துவிட்டு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக்கொள்ளவில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3148 — Sahih al Bukhari 57:56
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، قَالَ أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ بَيْنَا هُوَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ النَّاسُ مُقْبِلاً مِنْ حُنَيْنٍ عَلِقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الأَعْرَابُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَعْطُونِي رِدَائِي، فَلَوْ كَانَ عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلاً وَلاَ كَذُوبًا وَلاَ جَبَانًا ".
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிடித்துக்கொண்டு (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார் கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து கொண்டு நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக்கொண்டு சென்று அவர்களின் மேல்துண்டைப் பறித்துக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு என் மேல் துண்டைக் கொடுத்துவிடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவுக்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்கமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :
ஹதீஸ் 3149 — Sahih al Bukhari 57:57
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَذَبَهُ جَذْبَةً شَدِيدَةً، حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ أَثَّرَتْ بِهِ حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَذْبَتِهِ، ثُمَّ قَالَ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ. فَالْتَفَتَ إِلَيْهِ، فَضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் கரை தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந் தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களது தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத் திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3150 — Sahih al Bukhari 57:58
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُنَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، فَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ. قَالَ رَجُلٌ وَاللَّهِ إِنَّ هَذِهِ الْقِسْمَةَ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَقُلْتُ وَاللَّهِ لأُخْبِرَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم. فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ " فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللَّهُ وَرَسُولُهُ رَحِمَ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தப் பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை; இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூசா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :