அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை நாங்கள் தொழாமல் உறங்கிவிட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றி, தான் நாடியபோது அவற்றைத் திருப்பி அனுப்புகின்றான்” என்று சொன்னார்கள். பிறகு மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவு செய்துகொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டார்கள். அதற்குள் சூரியன் உதயமாகி வெளுத்துவிட்டிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து (தவறிப்போன ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன்) தொழுதார்கள்.113 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மை அளித்தவன்மீது சத்தியமாக!” என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், “உலகத்தார் அனைவரைவிடவும் மூசாவுக்கு மேன்மை அளித்தவன்மீது சத்தியமாக!” என்று (பதிலுக்குக்) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி) “மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி)விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூசா (அலை) அவர்கள் (அல்லாஹ்வுடைய) அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சை யாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா? அல்லது அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) அல்லாஹ் விதிவிலக்கு அளித்திருப்பானா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறி னார்கள்.114 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7473 — Sahih al Bukhari 97:99
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي عِيسَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ فَيَجِدُ الْمَلاَئِكَةَ يَحْرُسُونَهَا فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ وَلاَ الطَّاعُونُ إِنْ شَاءَ اللَّهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவிற்கு தஜ்ஜால் வருவான். வானவர்கள் மதீனாவைக் காவல் காத்துக்கொண்டிருப்பதைக் காண்பான். ஆகவே, தஜ்ஜாலும் கொள்ளைநோயும் அல்லாஹ் நாடினால் மதீனாவை நெருங்க முடியாது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்திவைக்க நான் விரும்பு கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை நான் ஒரு கிணற்றின் அருகே கண்டேன். (அதிலிருந்து) நான் இறைக்க வேண்டுமென அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர் (ரலி) அவர்கள்) அதை (வாளியை) எடுத்துக்கொண்டு (அதிலிருந்து) ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் (அவரது சோர்வை) அவருக்கு மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்தார். அப்போது அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டிருந்தது. அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படுகின்ற புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி,) உமர் அவர்களைச் சுற்றிலும் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்).117 அத்தியாயம் :
ஹதீஸ் 7476 — Sahih al Bukhari 97:102
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ السَّائِلُ ـ وَرُبَّمَا قَالَ جَاءَهُ السَّائِلُ ـ أَوْ صَاحِبُ الْحَاجَةِ قَالَ " اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ ".
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் ‘யாசகம் கேட்பவர்’ அல்லது ‘தேவையுடையவர்’ யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறை வேற்றுகின்றான்” என்று கூறுவார்கள்.118 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!” என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.119 அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘மூசா (அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர் ‘களிர்’ அவர்கள்தானா?’ என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு தர்க்கித்துக்கொண்டார்கள். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித் தார்கள்: ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்தபோது ஒரு மனிதர் வந்து “உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், “இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரிய வில்லை)” என்று சொன்னார்கள். உடனே மூசா (அலை) அவர்களுக்கு, “இருக்கிறார். அவர்தான் நம் அடியார் ‘களிர்’ ஆவார்” என்று வஹீ அறிவிக்கப்பட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கினான். அவர்களிடம், “நீங்கள் எந்த இடத்தில் மீனைத் தொலைக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பச் செல்லுங்கள். அங்கு களிர் அவர்களைச் சந்திப்பீர்கள்” என்று கூறப்பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் கடலில் மீனின் சுவட்டைப் பின்பற்றியபடியே சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களுடைய பணியாள் மூசா (அலை) அவர்களிடம், “நாம் அந்தப் பாறையின் பக்கம் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களுக்கு)க் கூறவிடாமல் ஷைத்தான்தான் எனக்கு மறதியைத் தந்துவிட்டான்; அது (அவ்விடத்தில் கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது வழியை அமைத்துக்கொண்டது” என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடி வந்த இடம்” என்று சொல்ல, இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பிறகு அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.120 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப்பின் ஹுனைன் செல்ல திட்டமிட்டபோது) “அல்லாஹ் நாடினால் நாளை நாம் பனூ கினானா பள்ளத்தாக்கின் அருகே தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் ‘நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்” என்று முஹஸ்ஸப் பள்ளத்தாக்கைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்.121 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7480 — Sahih al Bukhari 97:106
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَاصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَفْتَحْهَا فَقَالَ " إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ ". فَقَالَ الْمُسْلِمُونَ نَقْفُلُ وَلَمْ نَفْتَحْ. قَالَ " فَاغْدُوا عَلَى الْقِتَالِ ". فَغَدَوْا فَأَصَابَتْهُمْ جِرَاحَاتٌ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "، فَكَأَنَّ ذَلِكَ أَعْجَبَهُمْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால், அதை அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்” என்று சொன்னார்கள். முஸ்லிம்கள், “நாம் (கோட்டையை) வெற்றி கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங் கள்” என்று சொன்னார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அச்சமயம்) “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.122 அத்தியாயம் :