அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யா விட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.143 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) நின்றது. அல்லாஹ் “சற்று பொறு” என்றான். “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு. உடனே அல்லாஹ் “(உறவே!) உன்னைப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன்; உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்றது உறவு. “இது உனக்காக நடக்கும்” என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?” எனும் (47:22 ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.144 அத்தியாயம் :
ஹதீஸ் 7503 — Sahih al Bukhari 97:128
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، قَالَ مُطِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " قَالَ اللَّهُ أَصْبَحَ مِنْ عِبَادِي كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِي ".
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஒருநாள்) மழை பொழிந்தது. அப்போது அவர்கள், “என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கின்றான்; என்னை நம்புகிறவனும் இருக்கின்றான் என அல்லாஹ் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.145 அத்தியாயம் :
ஹதீஸ் 7504 — Sahih al Bukhari 97:129
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ إِذَا أَحَبَّ عَبْدِي لِقَائِي أَحْبَبْتُ لِقَاءَهُ، وَإِذَا كَرِهَ لِقَائِي كَرِهْتُ لِقَاءَهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பி னால் நானும் அவனைச் சந்திக்க விரும்பு கிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறுக்கிறேன்.146 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7505 — Sahih al Bukhari 97:130
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.147 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒரு மனிதர், “நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைத் தரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என்மீது இறைவனுக்குச் சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாருக்கும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்” என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணை யிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்றுதிரட்டினான். தரைக்கு ஆணை யிட்டு அதிலிருந்தும் அவரது உடலை ஒன்று திரட்டினான். பிறகு, “நீ எதற்காக இப்படிச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவர், “உன் அச்சத்தால்தான். நீ நன்கறிந்தவன்” என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.148 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 7507 — Sahih al Bukhari 97:132
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا ـ وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا ـ فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ـ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ ـ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي. ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا، فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ـ أَوْ أَصَبْتُ ـ آخَرَ فَاغْفِرْهُ. فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي، ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا ـ وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا ـ قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ ـ أَوْ أَذْنَبْتُ ـ آخَرَ فَاغْفِرْهُ لِي. فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ـ ثَلاَثًا ـ فَلْيَعْمَلْ مَا شَاءَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவருடைய இறைவன், “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) “என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம்முறையும்) “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்” என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போலவே) “என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்துவிட்டேன். எனக்காக அதை மன்னித்துவிடுவாயாக” என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் “என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்துவிட்டேன். இனி அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னான். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘முன்சென்ற’ அல்லது ‘உங்களுக்குமுன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள்: அல்லாஹ் அந்த மனிதருக்குச் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் “நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?” என்று கேட்க, அவர்கள் “நல்ல தந்தையாக இருந்தீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால், அவரோ தம(து மறுமை)க்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் ‘தயார் செய்திருக்கவில்லை’. அல்லது ‘சேமித்திருக்கவில்லை’. தம்மீது அல்லாஹ்வுக்குச் சக்தி ஏற்பட்டால் தம்மை அவன் வேதனை செய்வான் என அவர் அஞ்சினார். ஆகவே, (அவர் தம் மக்களிடம்) “நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிய பின் என்னைப் பொடிப்பொடியாக்கி, சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: இவ்வாறு அம்மனிதர் தம் மக்களிடம் அதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டார். என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பிறகு அவரது சாம்பலைச் சூறாவளிக் காற்று வீசிய ஒரு நாளில் தூவிவிட்டார்கள். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “(பழையபடி முழு மனிதராக) ஆகிவிடு” என்று சொல்ல, அந்த மனிதர் (உயிர் பெற்று) எழுந்தார். அல்லாஹ் “என் அடியானே! நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டான். அம்மனிதர் “உன் அச்சத்தின் காரணத்தால்தான்” என்று பதிலளித்தார். அவரை அந்த நேரத்தில் அல்லாஹ்வின் கருணைதான் காப்பாற்றியது. இதே ஹதீஸ் சல்மான் பின் அல்இஸ்லாம் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், “கடலில் தூவிவிடுங்கள்” என அம்மனிதர் கூறினார் என்று கூடுதலாகக் காணப்படுகிறது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (தயார் செய்திருக்கவில்லை) ‘லம் யப்தஇர்’ என்றே காணப்படுகிறது. கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (சேமிக்கவில்லை) ‘லம் யப்தயிஸ்’ என்று கூறப்படுகிறது. இச்சொல்லுக்கு கத்தாதா (ரஹ்) அவர்கள் ‘சேமித்து வைக்கவில்லை’ என்று விளக்கம் தருகிறார்கள்.149 அத்தியாயம் :
ஹதீஸ் 7509 — Sahih al Bukhari 97:134
حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ شُفِّعْتُ، فَقُلْتُ يَا رَبِّ أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ خَرْدَلَةٌ. فَيَدْخُلُونَ، ثُمَّ أَقُولُ أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَى شَىْءٍ ". فَقَالَ أَنَسٌ كَأَنِّي أَنْظُرُ إِلَى أَصَابِعِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் “என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!” என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் “எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக” என்று மீண்டும் பிரார்த்திப்பேன். இதை அறிவித்த அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘சிறிதளவேனும்’ என்று கூறியபோது) விரல்நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று கூறினார்கள்.150 அத்தியாயம் :
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்றுகூடினோம். பிறகு நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ் (ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றோம். அனஸ் (ரலி) அவர்கள் தமது கோட்டையில் ‘ளுஹா’ தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தமது விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், “பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என்று சொன்னோம். உடனே ஸாபித் (ரஹ்) அவர்கள், “அபூஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய்ப்பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய்ப்பாருங்கள்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “நான் அதற்குரிய வன்தான்” என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக் காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் தொலி நீக்கப் படாத கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ் மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்று சொல்வேன். அப்போது “செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் ‘அணுவளவு’ அல்லது ‘கடுகளவு’ இறைநம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.) அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், “(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூகலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹசன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம், “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை” என்று கூறினோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்óக்கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது)வரை வந்தபோது ஹசன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நாங்கள் “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை” என்று சொன்னோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரைமீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக் கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில் லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக் குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்கார னாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:) பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக” என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்” என்று சொல்வான்.151 அத்தியாயம் :