இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது இந்தச் சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம். (மகத்துவமிக்கோனும் பொறுமை மிகுந்தோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; மகத்தான அரியணையின் அதிபதி யான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; வானங்களின் அதிபதியும் சிறப்புமிக்க அரியணையின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.)71 அத்தியாயம் :
ஹதீஸ் 7432 — Sahih al Bukhari 97:59
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ ـ أَوْ أَبِي نُعْمٍ شَكَّ قَبِيصَةُ ـ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ بُعِثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةٍ. وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَعَثَ عَلِيٌّ وَهْوَ بِالْيَمَنِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فِي تُرْبَتِهَا، فَقَسَمَهَا بَيْنَ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ أَحَدِ بَنِي مُجَاشِعٍ، وَبَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَبَيْنَ عَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، وَبَيْنَ زَيْدِ الْخَيْلِ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، فَتَغَضَّبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ فَقَالُوا يُعْطِيهِ صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا قَالَ " إِنَّمَا أَتَأَلَّفُهُمْ ". فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، مَحْلُوقُ الرَّأْسِ فَقَالَ يَا مُحَمَّدُ اتَّقِ اللَّهَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَمَنْ يُطِيعُ اللَّهَ إِذَا عَصَيْتُهُ فَيَأْمَنِّي عَلَى أَهْلِ الأَرْضِ، وَلاَ تَأْمَنُونِي ". فَسَأَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ ـ قَتْلَهُ أُرَاهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ ـ فَمَنَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ ".
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ அல்கிலாபீ (ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரி களும் கோபமடைந்து, “நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார்களே” என்று கூறினார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்” என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதர் முன்வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ் வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அம்மனிதரைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் -அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) என்றே நான் கருதுகிறேன்- ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன்மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வழிபாட்டாளர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்” என்று சொன்னார்கள்.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 7433 — Sahih al Bukhari 97:60
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} قَالَ " مُسْتَقَرُّهَا تَحْتَ الْعَرْشِ ".
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் “சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது” எனும் (36:38 ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அது நிலைகொள்ளும் இடம் இறை அரியணைக்குக் கீழே உள்ளது” என்று சொன்னார்கள்.73 அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பௌர்ணமி இரவில் அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்துபார்த்தார்கள். “இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்கள் இறை வனையும் (மறுமையில்) காண்பீர்கள். ஆகவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்கள் இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று சொன்னார்கள்.75 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமை யில்) கண்கூடாகக் காண்பீர்கள். இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் புறப்பட்டு எங்களிடம் வந்து, “நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்கள் இறைவனை மறுமை நாளில் காண்பீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள். “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இவ்வாறுதான் உங்கள் இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்” என்று கூறுவான். எனவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுவந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே ‘பரிந்துரைப்போர்’ அல்லது ‘நயவஞ்சகர்கள்’ இருப்பார்கள். அப்போது அல்லாஹ், அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம் (நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவர். அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் வந்து, “நான்தான் உங்கள் இறைவன்” என்று சொல்வான். அப்போது அவர்கள், “நீதான் எங்கள் இறைவன்” என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். அங்கு நரகத்திற்குமேலே பாலம் அமைக்கப்படும். அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதன்முதலாகக் கடப்போம். அன்றைய தினம் இறைத்தூதர்கள் மட்டுமே பேசுவார் கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை “(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!” என்பதாகவே இருக்கும். கருவேல மரத்தின் முட்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். “கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். அந்தக் கொக்கிகள் கருவேலமர முள்ளைப் போன்றுதானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தமது செயலால் அழிந்துவிடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்துவிடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள். பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். ஆகவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகின்றானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற் றிடுமாறு ஆணையிடுவான்). நரகத்திலிருக் கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தா வின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங்கண்டு கொள்வார்கள். ஆதமின் மகனின் (மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தை தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள் ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெறியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது ஜீவ நீர் (மாஉல் ஹயாத்) ஊற்றப் படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத் தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் எஞ்சியிருப்பார். அவர்தான் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார். அவர், “என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் சுவாலை என்னைக் கரித்துவிட்டது” என்று கூறுவார். பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார். பிறகு அல்லாஹ் (அவரிடம்), “நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?” என்பான். அதற்கு அவர், “இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன்” என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவருடைய முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை அவர் அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! சொர்க்கத் தின் வாயில்வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் அவரிடம், “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் கேட்கமாட்டாய் என உறுதிமொழி களையும் வாக்குறுதிகளையும் நீ வழங்க வில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரை சொர்க்கத் தின் வாயில்வரை கொண்டுசெல்வான். சொர்க்க வாயிலில் அவர் நிற்கும்போது சொர்க்க வாயில் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார். அப்போது அல்லாஹ், “உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு, “மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கூறுவான். அதற்கு அவர், “என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆகிவிடக் கூடாது” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், “சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) அதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் சொல்வான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) “இன்னதை இன்னதை நீ ஆசைப்படு” என்று நினைவுபடுத்துவான். கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். (அப்போது) அல்லாஹ், “(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று சொல்வான்.76 அத்தியாயம் :

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், “(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்: (மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலுவையுடனும், சிலை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டி ருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், “இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), “குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள். பின்னர் கிறித்தவர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்டபின் “நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) “குடியுங்கள்!” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள். இறுதியில் அல்லாஹ்வை வழிபட் டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் “மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வழிபட்டுக்கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், ‘(இறைவனின்) கால் (பாதம்)தான்” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து (தொழுது)கொண்டிருந்த வர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப் பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரவணக்கம் செய்ய முடியாது).78 பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு, நரகத்தின் மேலே வைக்கப்படும். (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன்மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முட்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேலமர முட்கள்’ எனப்படும்” என்று சொன்னார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண் சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்துவிடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச்செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக்கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், “எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)” என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசி களிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். “எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள். இதன் அறிவிப்பாளரான அபூசயீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை) நீங்கள் நம்பாவிட்டால், “நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவுகூட அநீதி இழைக்கமாட் டான். அணுவளவு நன்மை செய்திருந் தாலும் அதை இரட்டிப்பாக்குவான்” எனும் (4:40ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர் கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் “(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது” என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்துபோயிருப்பார்கள். ஆகவே, சொர்க்க வாயிலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள் அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இருமருங்கிலும் முளைத்து (நிறம் மாறி)விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும். ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), “இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச்செய்தான்” என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு” என்று (நற்செய்தி) சொல்லப்படும்.79 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், “(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?” என்று பேசிக்கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான்; தனது சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்” என்று கோருவர். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டிருந்த மரத்திலிருந்து புசித்துவிட்டதால் தாம் புரிந்த தவற்றினை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். “(எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத்தூதர்களில் முதலாமவரான நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தமது தவற்றினை அவர்கள் நினைவு கூர்வார்கள். பிறகு, “நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்றநண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்களை எடுத்துக்கூறுவார்கள். பிறகு, “நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத் (வேதத்)தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அளித்த அடியார் ஆவார் அவர்” என்று சொல்வார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்துவிட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக்கூறுவார்கள். பிறகு “நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனது ஆவியும் வார்த்தையுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று மூசா கூறுவார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனது இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுந்துவிடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு அவன், “எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்” என்று கூறுவான். அப்போது நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் (அவனது இல்லத்திலிருந்து) வெளியேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். -கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் நான் (அவனது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று (நரகத்திலிருந்து) அவர்களை வெளியேற்றி, சொர்க்கத்திற்குள் அனுப்பிவைப்பேன்” என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.- பிறகு மீண்டும் (இரண்டாம் முறையாக) என் இறைவனை அவனது இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பின்னர் “முஹம்மதே! எழுங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; ஏற்கப்படும். கேளுங்கள்; தரப்படும்” என்று கூறுவான். அப்போது நான் எனது தலையைத் தூக்கி, இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் நான் பரிந்துரைப்பேன். (நான் யார்யாருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென) எனக்கு அவன் வரம்பு விதிப்பான். அப்போது நான் (அவனது இல்லத்திலிருந்து) வெளியேறிச் சென்று அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். -”நான் வெளியேறிச் சென்று, அவர் களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன்” என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- பின்னர் மூன்றாம் முறையாக மறுபடி யும் என் இறைவனை அவனது இல்லத் தில் சந்திக்க நான் அனுமதி கேட்பேன். எனக்கு அந்த அனுமதி வழங்கப்படும். இறைவனை நான் காணும்போது சிரவணக்கத்தில் விழுவேன். தான் நாடிய வரை (அப்படியே) என்னை அல்லாஹ் விட்டுவிடுவான். பிறகு “முஹம்மதே! எழுங்கள். சொல்க; செவியேற்கப்படும். பரிந்துரை செய்க; ஏற்கப்படும். கோருக; அது தரப்படும்” என இறைவன் கூறுவான். அப்போது நான் எழுந்து, என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் பரிந்துரைப்பேன். அவன் எனக்கு வரம்பு விதிப்பான். நான் வெளியேறிச் சென்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். -”நான் வெளியேறிச் சென்று அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்” என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- “இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்கமாட்டார்கள்” என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறிவிட்டு, “(நபியே!) உம் இறைவன் உம்மை (‘மகாமும் மஹ்மூத்’ எனும்) உயர் தகுதிக்கு அனுப்பலாம்” எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள். பிறகு இந்த ‘மகாமும் மஹ்மூத்’ எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்” என்று கூறினார்கள்.80 அத்தியாயம் :