حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ حَبْرٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يَضَعُ السَّمَاءَ عَلَى إِصْبَعٍ، وَالأَرْضَ عَلَى إِصْبَعٍ، وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ وَالأَنْهَارَ عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الْخَلْقِ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ بِيَدِهِ أَنَا الْمَلِكُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ}"
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதப் பாதிரியார் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! மறுமை நாளில் அல்லாஹ் வானத்தை ஒரு விரலிலும் பூமியை ஒரு விரலிலும் மலைகளை ஒரு விரலிலும் மரம் மற்றும் நதிகளை ஒரு விரலிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரலிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தனது கரத்தால் (சைகை செய்தவாறு) ‘நானே அரசன்’ எனக் கூறுவான்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (6:91ஆவது) வசனத்தைக் கூறினார்கள்.91 அத்தியாயம் :
ஹதீஸ் 7452 — Sahih al Bukhari 97:78
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ لَيْلَةً وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا لأَنْظُرَ كَيْفَ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ، فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ أَوْ بَعْضُهُ قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَرَأَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ} إِلَى قَوْلِهِ {لأُولِي الأَلْبَابِ} ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ، ثُمَّ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ أَذَّنَ بِلاَلٌ بِالصَّلاَةِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى لِلنَّاسِ الصُّبْحَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில், இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒருநாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தூங்கிவிட்டார்கள். ‘இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு- பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190 ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக்கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள்.92 அத்தியாயம் :
ஹதீஸ் 7453 — Sahih al Bukhari 97:79
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَمَّا قَضَى اللَّهُ الْخَلْقَ كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ، إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளை படைத்த போது தன்னிடமுள்ள அரியணையின் (அர்ஷின்) மேலே ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று தன்னிடம் எழுதி வைத்துக் கொண்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.93 அத்தியாயம் :
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படு கின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனது வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) நற்பேறற்றவரா; அல்லது நற்பேறுபெற்றவரா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயல்களை செய்துகொண்டேயிருப்பார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து, அதன் விளைவாக நரகம் புகுந்துவிடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலை செய்து கொண்டேயிருப்பார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்)செயல்களைச் செய்து, அதன் விளைவாக சொர்க்கம் புகுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.94 அத்தியாயம் :
ஹதீஸ் 7455 — Sahih al Bukhari 97:81
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَا جِبْرِيلُ مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا ". فَنَزَلَتْ {وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} إِلَى آخِرِ الآيَةِ. قَالَ هَذَا كَانَ الْجَوَابَ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள். அப்போதுதான், “(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவ தில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமான வையே! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது. இதுவே முஹம்மத் (ஸல்) அவர் களு(டைய கேள்வி)க்குப் பதிலாக அமைந்தது.95 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோப்பில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்)கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) “இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!” என்றார். இன்னொருவர், “இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)” என்றார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், “(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் “அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!” என்றார்கள்.96 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போராடு வதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனது பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப் பேற்றுக்கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.97 அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக்கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.98 அத்தியாயம் :
ஹதீஸ் 7459 — Sahih al Bukhari 97:85
حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَزَالُ مِنْ أُمَّتِي قَوْمٌ ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும்வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்கள்மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.99 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்துகொண்டேயிருப்பர். அவர்களை நம்ப மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்துகொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும். இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூற, முஆவியா (ரலி) அவர்கள், “இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்” என்றார்கள்.100 அத்தியாயம் :