உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை” (4:128) என்ற குர்ஆனின் வசனத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு மனிதர் தம் மனைவியிடம் அதிக நாட்டம் கொள்ளாமல் அவளைவிட்டுப் பிரிந்துவிட விரும்புகிறார். இந்நிலையில் மனைவி, ‘‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான் விட்டுக்கொடுத்து) நடந்துகொள்கிறேன் (என்னை மணவிலக் குச் செய்துவிட வேண்டாம்)” என்று கேட்டுக்கொள்கிறாள். இது தொடர்பாகவே இந்த இறைவசனம் அருளப்பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 2451 — Sahih al Bukhari 46:12
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ " أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ ". فَقَالَ الْغُلاَمُ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. قَالَ فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்த வர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள். அந்தச் சிறுவர், ‘‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்தப் பானத்தை வைத்தார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 2452 — Sahih al Bukhari 46:13
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாகக் கைப்பற்றுகிறாரோ, அவரது கழுத்தில் (மறுமை நாளில்) அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2453 — Sahih al Bukhari 46:14
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ، فَذَكَرَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ".
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கும் வேறு சிலருக்கும் இடையே (ஒரு நிலம் சம்பந்தமாகத்) தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அப்போது என்னிடம் அவர்கள் சொன்னார்கள்: அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக்கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2454 — Sahih al Bukhari 46:15
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَخَذَ مِنَ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا الْحَدِيثُ لَيْسَ بِخُرَاسَانَ فِي كِتَابِ ابْنِ الْمُبَارَكِ، أَمْلاَهُ عَلَيْهِمْ بِالْبَصْرَةِ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் (அடுத்தவரின்) ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தமக்கு உரிமையின்றி எடுத்துக்கொண்டாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அமிழ்த் தப்படுவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் குராசானில் தொகுத்த நூலில் இந்த ஹதீஸ் இடம்பெறவில்லை. மாறாக, (இராக்கிலுள்ள) யிபஸ்ரா’வில்தான் இந்த ஹதீஸை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2455 — Sahih al Bukhari 46:16
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ الْعِرَاقِ، فَأَصَابَنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، فَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَمُرُّ بِنَا فَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ.
ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்துவந்தார் கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரே தடவையில் எடுத்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தம் சகோதரரிடம் அனுமதி கேட்டுக்கொண்டால் தவிர” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2456 — Sahih al Bukhari 46:17
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ كَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ فَقَالَ لَهُ أَبُو شُعَيْبٍ اصْنَعْ لِي طَعَامَ خَمْسَةٍ لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ. وَأَبْصَرَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُوعَ ـ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ لَمْ يُدْعَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ هَذَا قَدِ اتَّبَعَنَا أَتَأْذَنُ لَهُ ". قَالَ نَعَمْ.
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அபூஷுஐப்’ எனப்படும் அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சி விற்கும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று கூறினார். அவர் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியைக் கண்டார். ஆகவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்; நபி (ஸல்) அவர்களுடன் வந்தவர்களோடு விருந்துக்கு அழைக்கப் படாத ஒரு மனிதரும் சேர்ந்துகொண்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அபூஷுஐப் (ரலி) அவர்களிடம்), ‘‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)” என்று பதில் கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 2457 — Sahih al Bukhari 46:18
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக விதண்டாவாதம் புரிபவன்தான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2458 — Sahih al Bukhari 46:19
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ، فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ " إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَدَقَ، فَأَقْضِيَ لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ فَلْيَتْرُكْهَا ".
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக்கொண்டிருந்ததைச் செவியுற் றார்கள். உடனே அவர்களிடம் சென்று, ‘‘நான் ஒரு மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன். அப்படி ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று (உண்மை தெரியாமல்) நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிவிட வேண்டாம். அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவர் (விரும்பினால்) அதை எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக்கொள்ளாமல்) விட்டு விடட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2459 — Sahih al Bukhari 46:20
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ، حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் யாரிடம் உள்ளனவோ அவர் நயவஞ்சகர் ஆவார். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவரிடம் குடிகொண்டிருந்தாலும் அவர் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் குடியிருக்கும். (அந்த நான்கு குணங்களாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்க ளித்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் நேர்மை தவறி நடந்துகொள்வான் (அவமதிப்பான்). இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :