حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الْجَمَلَ فِي نَاحِيَةِ الْبَلاَطِ فَقُلْتُ هَذَا جَمَلُكَ. فَخَرَجَ فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ قَالَ " الثَّمَنُ وَالْجَمَلُ لَكَ ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்கப் பள்ளிவாசலில் நுழைந்தேன். ஒட்டகத்தை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலின் முன்பு, கற்கள் பதிக்கப்பட்டிருந்த நடைபாதையில் கட்டிவைத்தேன். (நபியவர்களிடம் சென்று), ‘‘இதோ, தங்கள் ஒட்டகம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்கள். ‘‘ஒட்டகமும் (அதன்) விலையும் உனக்கே” என்று கூறினார்கள்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 2471 — Sahih al Bukhari 46:32
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، أَوْ قَالَ لَقَدْ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ‘‘அல்லது ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்... சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்’ என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று அறிவிப் பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2472 — Sahih al Bukhari 46:33
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ فَأَخَذَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2473 — Sahih al Bukhari 46:34
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا تَشَاجَرُوا فِي الطَّرِيقِ بِسَبْعَةِ أَذْرُعٍ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பொதுப்பாதை தொடர்பாக மக்களி டையே சர்ச்சை எழுந்தபோது, ஏழு முழங் கள் இடம் (பாதைக்காக) ஒதுக்க வேண்டு மென்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித் தார்கள்.19 அத்தியாயம் :
ஹதீஸ் 2474 — Sahih al Bukhari 46:35
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيّ َ ـ وَهُوَ جَدُّهُ أَبُو أُمِّهِ ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ النُّهْبَى وَالْمُثْلَةِ.
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: கொள்ளையடிப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2475 — Sahih al Bukhari 46:36
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهْوَ مُؤْمِنٌ ". وَعَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ النُّهْبَةَ.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்து பவன் மது அருந்தும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்கமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில் கொள்ளையடிப்பது தொடர்பான குறிப்பு இல்லை. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்: இவற்றைச் செய்யும்போது இறை நம்பிக்கை(யின் ஒளி) அவனிடமிருந்து அகற்றப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2476 — Sahih al Bukhari 46:37
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மர்யமின் குமாரர் (ஈசா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; யிஜிஸ்யா’ (எனும் காப்பு) வரியை (ஏற்க) மறுப்பார்கள்; எவரும் பெற்றுக்கொள்ள முன்வராத அளவுக்குச் செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காத வரை உலக முடிவு (மறுமை) நாள் வராது. அத்தியாயம் :
ஹதீஸ் 2477 — Sahih al Bukhari 46:38
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نِيرَانًا تُوقَدُ يَوْمَ خَيْبَرَ. قَالَ " عَلَى مَا تُوقَدُ هَذِهِ النِّيرَانُ ". قَالُوا عَلَى الْحُمُرِ الإِنْسِيَّةِ. قَالَ " اكْسِرُوهَا، وَأَهْرِقُوهَا ". قَالُوا أَلاَ نُهْرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ " اغْسِلُوا ". قَالَ أَبُو عَبْد اللَّهِ كَانَ ابْنُ أَبِي أُوَيْسٍ يَقُولُ الْحُمُرِ الْأَنْسِيَّةِ بِنَصْبِ الْأَلِفِ وَالنُّونِ
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது ‘‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகின்றது?” என்று கேட்டார்கள். ‘‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்ப தற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றைக் கொட்டிவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள், ‘‘இறைச்சிகளைக் கொட்டி விட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள லாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அவ்வாறே) கழுவிக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (என் ஆசிரியர்) இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள், (யிநாட்டுக் கழுதை’ என்பதைக் குறிக்க ‘அல்ஹுமுருல் இன்சிய்யா’ என்பதற்குப் பதிலாக) ‘அல் ஹுமுருல் அனசிய்யா’ என்று குறிப் பிடுவார்கள். (பொருள் ஒன்றே; யிகாட்டுக் கழுதை’க்கு எதிர்ச்சொல்.) அத்தியாயம் :
ஹதீஸ் 2478 — Sahih al Bukhari 46:39
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعَنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَجَعَلَ يَقُولُ {جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ} الآيَةَ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றை குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். ‘‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (குர்ஆன்லி17: 81) எனும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 2479 — Sahih al Bukhari 46:40
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتِ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ، فَهَتَكَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ، فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (உயிரினங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்து விட்டார்கள். ஆகவே, அதிலிருந்து நான் இரு திண்டுகளைச் செய்துகொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். அத்தியாயம் :