Qurani·قرآني
தமிழ்

கூட்டு வணிகம் (ஷிர்கத்)

25 ஹதீஸ்கள் · #2483–2507

ஹதீஸ் 2483 — Sahih al Bukhari 47:1
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا قِبَلَ السَّاحِلِ، فَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُمْ ثَلاَثُمِائَةٍ وَأَنَا فِيهِمْ، فَخَرَجْنَا حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ، فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ ذَلِكَ الْجَيْشِ فَجُمِعَ ذَلِكَ كُلُّهُ فَكَانَ مِزْوَدَىْ تَمْرٍ، فَكَانَ يُقَوِّتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلاً قَلِيلاً، حَتَّى فَنِيَ فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلاَّ تَمْرَةٌ تَمْرَةٌ‏.‏ فَقُلْتُ وَمَا تُغْنِي تَمْرَةٌ فَقَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ‏.‏ قَالَ ثُمَّ انْتَهَيْنَا إِلَى الْبَحْرِ فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ، فَأَكَلَ مِنْهُ ذَلِكَ الْجَيْشُ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ فَنُصِبَا، ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்;2 அந்தப் படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்தப் படையின் (கைவச மிருந்த) கட்டுச்சாதங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம்பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்துவந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்துபோய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்துவந்தது. லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னபோது, இதைக் கேட்டுக்கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அதுவும் தீர்ந்துபோன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார்கள்லி பிறகு நாங்கள் கடல்வரை வந்துசேர்ந்துவிட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாட்கள் உண்டது. பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளி லிருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப் பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்பு களின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2484 — Sahih al Bukhari 47:2
حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَفَّتْ أَزْوَادُ الْقَوْمِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَحْرِ إِبِلِهِمْ فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ فَقَالَ مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ، فَدَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَادِ فِي النَّاسِ فَيَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ ‏"‏‏.‏ فَبُسِطَ لِذَلِكَ نِطَعٌ، وَجَعَلُوهُ عَلَى النِّطَعِ‏.‏ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏
சலமா பின் அமர் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்துபோய்ப் பஞ்சத்திற்குள் ளானார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் (ஊர்தி) ஒட்டகங்களை அறுக்க அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதியளித் தார்கள். (வழியில்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?” என்று கேட்டார்கள்.3 பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களுடைய ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டுவரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டது.) மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டுவந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்துவைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து, அதில் வளம் வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். பிறகு தங்கள் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி மக்களை அழைத் தார்கள். மக்கள், தங்கள் இரு கைகளையும் குவித்து (உணவில் தங்கள் பங்கைப்) பெற்று (பாத்திரங்களை நிரப்பி)க் கொண் டார்கள். அனைவரும் உணவைப் பெற்றுக் கொண்டுவிட்ட பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுகின்றேன்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2485 — Sahih al Bukhari 47:3
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَصْرَ فَنَنْحَرُ جَزُورًا، فَتُقْسَمُ عَشْرَ قِسَمٍ، فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ‏.‏
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பிரிக்கப்படும். (பிறகு சமைக்கப்படும்.) சூரியன் மறைவதற்குமுன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம். அத்தியாயம் :
ஹதீஸ் 2486 — Sahih al Bukhari 47:4
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறப்போரின்போது அஷ்அரீ குலத்தார் பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி, மக்களின் உணவு (இருப்பு) குறைந்துபோய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர் களைச் சேர்ந்தவன்.4 இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2487 — Sahih al Bukhari 47:5
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ‘ஸகாத்’ தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதிய போது, ‘‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தம் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தாமே செலுத்திவிடுவாராயின், அவர் தம் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.5 அத்தியாயம் :
ஹதீஸ் 2488 — Sahih al Bukhari 47:6
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ جَدِّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ فَأَصَابَ النَّاسَ جُوعٌ فَأَصَابُوا إِبِلاً وَغَنَمًا‏.‏ قَالَ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُخْرَيَاتِ الْقَوْمِ فَعَجِلُوا وَذَبَحُوا وَنَصَبُوا الْقُدُورَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشْرَةً مِنَ الْغَنَمِ بِبَعِيرٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، وَكَانَ فِي الْقَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ فَأَهْوَى رَجُلٌ مِنْهُمْ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا ‏"‏‏.‏ فَقَالَ جَدِّي إِنَّا نَرْجُو ـ أَوْ نَخَافُ ـ الْعَدُوَّ غَدًا، وَلَيْسَتْ مَعَنَا مُدًى أَفَنَذْبَحُ بِالْقَصَبِ‏.‏ قَالَ ‏"‏ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، فَكُلُوهُ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ ‏"‏‏.‏
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி ஏற்பட்டது. அவர்கள் (போரில் கிடைத்த செல்வங்களாகச்) சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப் பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்த வுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி ஆணையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு நபி (ஸல்) அவர்கள், ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். அப்போது அவற்றில் ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்தது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. ஒரு மனிதர் (நபித்தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்று இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறி னார்கள். நான், ‘‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத் தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக் கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல் கிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2489 — Sahih al Bukhari 47:7
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَقْرُنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ جَمِيعًا، حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போது) தம் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2490 — Sahih al Bukhari 47:8
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ كُنَّا بِالْمَدِينَةِ فَأَصَابَتْنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، وَكَانَ ابْنُ عُمَرَ يَمُرُّ بِنَا فَيَقُولُ لاَ تَقْرُنُوا فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ‏.‏
ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்துசெல்வார்கள். அப்போது, ‘‘(இரண்டிரண்டாகச்) சேர்த்து உண்ணாதீர்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ஒருவர் தம் சகோதரரிடம் அனுமதிபெற்றால் தவிர (அவ்வாறு) சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2491 — Sahih al Bukhari 47:9
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَعْتَقَ شِقْصًا لَهُ مِنْ عَبْدٍ ـ أَوْ شِرْكًا أَوْ قَالَ نَصِيبًا ـ وَكَانَ لَهُ مَا يَبْلُغُ ثَمَنَهُ بِقِيمَةِ الْعَدْلِ، فَهْوَ عَتِيقٌ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ ‏"‏‏.‏ قَالَ لاَ أَدْرِي قَوْلُهُ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ‏.‏ قَوْلٌ مِنْ نَافِعٍ أَوْ فِي الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்பவரிடம், அந்த அடிமை யின் நியாயமான (முழு) விலையையும் எட்டுகின்ற (தொகையான)து இருந்தால், அவனை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த (தமது பங்கின்) அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார்.7 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை அறிவித்த அய்யூப் (ரஹ்) அவர்கள், ‘‘இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார் எனும் வாசகம் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் சொல்லா; அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2492 — Sahih al Bukhari 47:10
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَعْتَقَ شَقِيصًا مِنْ مَمْلُوكِهِ فَعَلَيْهِ خَلاَصُهُ فِي مَالِهِ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ قُوِّمَ الْمَمْلُوكُ، قِيمَةَ عَدْلٍ ثُمَّ اسْتُسْعِيَ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கின்றவர், (வசதியுடைய வராயின்) தமது செல்வத்தைக் கொண்டே அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையென்றால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ண யிக்கப்பட்டு, (மீதி பங்கை அடைப்பதற்கு) அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக் கப்பட வேண்டும். அவனால் தாங்க முடியாத சுமையைத் தரலாகாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.