Qurani·قرآني
தமிழ்

கூட்டு வணிகம் (ஷிர்கத்)

25 ஹதீஸ்கள் · #2483–2507

ஹதீஸ் 2503 — Sahih al Bukhari 47:19
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي مَمْلُوكٍ وَجَبَ عَلَيْهِ أَنْ يُعْتِقَ كُلَّهُ، إِنْ كَانَ لَهُ مَالٌ قَدْرَ ثَمَنِهِ يُقَامُ قِيمَةَ عَدْلٍ وَيُعْطَى شُرَكَاؤُهُ حِصَّتَهُمْ وَيُخَلَّى سَبِيلُ الْمُعْتَقِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை யார் விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அவருடைய பங்குதாரர்களுக்கு உரிய தொகை கொடுக்கப்பட வேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2504 — Sahih al Bukhari 47:20
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَعْتَقَ شِقْصًا لَهُ فِي عَبْدٍ، أُعْتِقَ كُلُّهُ إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلاَّ يُسْتَسْعَ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்துவிடுகிறாரோ அவரிடம் போதிய செல்வம் இருக்குமா யின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடு வித்துக்கொள்வதற்காக) அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமைக்கு (தாங்க முடியாத) சுமையைத் தரக் கூடாது.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2505 — Sahih al Bukhari #2505
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ‏.‏وَعَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم صُبْحَ رَابِعَةٍ مِنْ ذِي الْحَجَّةِ مُهِلِّينَ بِالْحَجِّ، لاَ يَخْلِطُهُمْ شَىْءٌ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا فَجَعَلْنَاهَا عُمْرَةً، وَأَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا، فَفَشَتْ فِي ذَلِكَ الْقَالَةُ‏.‏ قَالَ عَطَاءٌ فَقَالَ جَابِرٌ فَيَرُوحُ أَحَدُنَا إِلَى مِنًى وَذَكَرُهُ يَقْطُرُ مَنِيًّا‏.‏ فَقَالَ جَابِرٌ بِكَفِّهِ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَامَ خَطِيبًا فَقَالَ ‏"‏ بَلَغَنِي أَنَّ أَقْوَامًا يَقُولُونَ كَذَا وَكَذَا، وَاللَّهِ لأَنَا أَبَرُّ وَأَتْقَى لِلَّهِ مِنْهُمْ، وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ ‏"‏‏.‏ فَقَامَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هِيَ لَنَا أَوْ لِلأَبَدِ فَقَالَ ‏"‏ لاَ بَلْ لِلأَبَدِ ‏"‏‏.‏ قَالَ وَجَاءَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ـ فَقَالَ أَحَدُهُمَا يَقُولُ لَبَّيْكَ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ وَقَالَ الآخَرُ لَبَّيْكَ بِحَجَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَأَشْرَكَهُ فِي الْهَدْىِ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹிஜ்ஜா நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தார்கள். (இஹ்ராம் கட்டியபோது உம்ரா) எதுவும் அவர்களி(ன் எண்ணத்தி)ல் கலந்திருக்கவில்லை. நாங்கள் வந்து சேர்ந்தபோது எங்கள் இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளும்படியும் எங்கள் மனைவியருடன் நாங்கள் சேர்ந்துகொள்ளும்படியும் நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். (ஹஜ் மாதங்களில் உம்ரா கூடாது என்று கருதிவந்த) மக்களிடையே இது தொடர்பான பேச்சு (வேகமாகப்) பரவியது. லிஅறிவிப்பாளர் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘எங்களில் ஒருவர் தாம்பத்திய உறவை முடித்த கையோடு மினா செல்வதா?” என்று (மக்கள் பேசிக்கொண்டதை எடுத்துச்) சொன்னார் கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையால் சைகை செய்து காட்டி னார்கள்லி இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அதில், ‘‘மக்கள் சிலர் இப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவனும் ஆவேன். ‘(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்யலாம் என்ற) என் கட்டளை தொடர்பாக நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருக்கமாட்டேன். என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) இருப்பேன்.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டுமா? இல்லை, என்றைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்களுக்கு மட்டும்) இல்லை; மாறாக, என்றைக்கும்தான்” என்று கூறினார்கள். அப்போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள். அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே (ஹஜ்ஜுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் போன்றதற்கே நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர் களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தமது குர்பானி பிராணியில் அலீ (ரலி) அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண் டார்கள்.11 அத்தியாயம் :
ஹதீஸ் 2506 — Sahih al Bukhari 47:21

ஹதீஸ் 2507 — Sahih al Bukhari 47:22
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ، فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلاً، فَعَجِلَ الْقَوْمُ، فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ، ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الْغَنَمِ بِجَزُورٍ، ثُمَّ إِنَّ بَعِيرًا نَدَّ وَلَيْسَ فِي الْقَوْمِ إِلاَّ خَيْلٌ يَسِيرَةٌ فَرَمَاهُ رَجُلٌ فَحَبَسَهُ بِسَهْمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا ‏"‏‏.‏ قَالَ قَالَ جَدِّي يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْجُو ـ أَوْ نَخَافُ ـ أَنْ نَلْقَى الْعَدُوَّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى، فَنَذْبَحُ بِالْقَصَبِ فَقَالَ ‏"‏ اعْجَلْ أَوْ أَرْنِي، مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوا، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ ‏"‏‏.‏
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘திஹாமா’விலுள்ள ‘துல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வங்களாக) ஆடுகளை, அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்கவைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். பிறகு அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. ஆகவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓட விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்கின்றதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே என்று நாங்கள் அஞ்சுகின்றோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?றற என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்பட்சத்தில் அதை உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி இதோ உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர் களின்) கத்திகளாகும்” என்று பதிலளித்தார்கள்.12 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.