حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُوعَكُ وَعْكًا شَدِيدًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ ". فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَجَلْ ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مَرَضٌ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ لَهُ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘‘ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
ஹதீஸ் 5661 — Sahih al Bukhari 75:21
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ فَمَسِسْتُهُ وَهْوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا، وَذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ. قَالَ " أَجَلْ، وَمَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى إِلاَّ حَاتَّتْ عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحَاتُّ وَرَقُ الشَّجَرِ ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், ‘‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே!” எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய தவறுகள் அவரைவிட்டு உதிராமல் இருப்பதில்லை” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 5662 — Sahih al Bukhari 75:22
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ يَعُودُهُ فَقَالَ " لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ". فَقَالَ كَلاَّ بَلْ حُمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ كَيْمَا تُزِيرَهُ الْقُبُورَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَنَعَمْ إِذًا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘(நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப்போவது) இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சல் ஆகும். இது, அ(ம்முதிய)வரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும்வரை (ஓயாது)” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், ஆம் (நீர் நினைத்ததைப் போன்றே நடக்கும்)” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன்மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதன்மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு (நோய்வாய்ப்பட்டி ருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர் களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார் கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது.- அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர் களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார்.-அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளும் முன் இது நடந்தது.-அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந் தார்கள். (எங்கள்) ஊர்திப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல் துண்டால் தமது மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, ‘‘எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தமது வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ‘‘மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். (அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ‘‘இல்லை; அல்லாஹ்வின் தூதரே! எங்களது (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்று சொன்னார் கள். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத்தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மௌனமாகும்வரை மக்களை அமைதிப் படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘சஅதே! அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் செவியுற வில்லையா? (அவர் இன்னின்னவாறு சொன்னார்)” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (மார்க்கத்)தை வழங்கி விட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகரவாசிகள் அப்துல்லாஹ்வுக் குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து மறுக்கப்பட்டபோது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந் துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
ஹதீஸ் 5664 — Sahih al Bukhari 75:24
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدٍ ـ هُوَ ابْنُ الْمُنْكَدِرِ ـ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلاَ بِرْذَوْنٍ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற் றிருந்தபோது) என்னை உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.) அத்தியாயம் :
ஹதீஸ் 5665 — Sahih al Bukhari 75:25
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، وَأَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه. مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أُوقِدُ تَحْتَ الْقِدْرِ فَقَالَ " أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ ". قُلْتُ نَعَمْ. فَدَعَا الْحَلاَّقَ فَحَلَقَهُ ثُمَّ أَمَرَنِي بِالْفِدَاءِ.
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த சமயம் ஹுதைபியாவில்) நான் (சமையல்) பாத்திரத்தின் கீழிருந்து தீ மூட்டிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். அப்போது, ‘‘(கஅபே!) உங்கள் தலையிலுள்ள பேன்கள் உங்களுக்குத் தொந்தரவு தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நாவிதரை அழைத்தார்கள். நாவிதர் எனது தலைமுடியை மழித்தார். பிறகு என்னை (இஹ்ராமுடைய நிலையில் தலை மழித்துக்கொண்டதற் காக)ப் பரிகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.23 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை கடுமையான தலைவலியால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் தலை(வலி)யே!” என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக்கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால்தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாகச் செயல்படும்படி) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற் காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட் டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்க வில்லை)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5667 — Sahih al Bukhari 75:27
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يُوعَكُ فَمَسِسْتُهُ فَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا. قَالَ " أَجَلْ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ ". قَالَ لَكَ أَجْرَانِ قَالَ " نَعَمْ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مَرَضٌ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், ‘‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படு கிறீர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத் தைப் போன்று (நான் ஒருவனே அடைகி றேன்)” என்றார்கள். நான் ‘‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , ‘‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்றார்கள்.24 அத்தியாயம் :
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், ‘‘(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாகமாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘(எனது செல்வத்தில்) பாதி யை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று சொன்னார்கள். நான் மூன்றில் ஒரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மூன்றில் ஒரு பங்கா?) மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக அவர்களை விட்டுச்செல்வதைவிடச் சிறந்ததாகும். நீங்கள் இறைவனின் அன்பை நாடிச் செய்யும் (தானதர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப்படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு)” என்று சொன்னார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 5669 — Sahih al Bukhari 75:29
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا حُضِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي الْبَيْتِ رِجَالٌ فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَلُمَّ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ ". فَقَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ غَلَبَ عَلَيْهِ الْوَجَعُ وَعِنْدَكُمُ الْقُرْآنُ، حَسْبُنَا كِتَابُ اللَّهِ فَاخْتَلَفَ أَهْلُ الْبَيْتِ فَاخْتَصَمُوا، مِنْهُمْ مَنْ يَقُولُ قَرِّبُوا يَكْتُبْ لَكُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ، وَمِنْهُمْ مَنْ يَقُولُ مَا قَالَ عُمَرُ فَلَمَّا أَكْثَرُوا اللَّغْوَ وَالاِخْتِلاَفَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُومُوا ". قَالَ عُبَيْدُ اللَّهِ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ أَنْ يَكْتُبَ لَهُمْ ذَلِكَ الْكِتَابَ مِنِ اخْتِلاَفِهِمْ وَلَغَطِهِمْ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (ஒருபோதும்) வழி தவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது (அவர்களை எழுதித் தருமாறு தொந்தரவு செய்யாதீர்கள்). உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே. (நபியவர்களுக்கு அருளப்பெற்ற அந்த) இறைவேதமே நமக்குப் போதும்” என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிருந்தோர் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுவந்து கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறி(ச் சென்றி)டமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் கூறியதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அருகில் மக்களின் கூச்சலும் சச்சரவும் மிகுந்தபோது, ‘‘(என்னிடமிருந்து) எழுந்து (சென்று)விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் .ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக் கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுதித் தர நினைத்த) மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறிவந் தார்கள்.26 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :