பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது6 நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் மூன்று அம்சங்களின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவையாவன: 1. நபி (ஸல்) அவர்கள், இணைவைப் பாளர்களிடமிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை, அவர்களிடமே திருப்பி யனுப்பிவிட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்பமாட்டார்கள். 2. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாட்கள் (மட்டும்) தங்கலாம். 3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும். இந்தச் சமாதான ஒப்பந்தம் பேசப் பட்டுக்கொண்டிருந்தபோது அபூஜந்தல் (ரலி) அவர்கள், தமது (கால்) சங்கிலி களுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர் களிடமே அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: முஅம்மல் (ரஹ்) அவர்கள் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூஜந்தல் (ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஉம்ரா’ செய்யும் நோக்கத்தில் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களை குறைஷி இறைமறுப்பாளர்கள் இறை யில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் யிஹுதைபியா’ எனும் இடத்தில் தமது குர்பானி பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். மேலும், ‘‘வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக் கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வரமாட்டோம்; குறைஷியர் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப் போம்” என்னும் நிபந்தனையின் பேரில் குறைஷியருடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவர்களிடம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்டபோது, குறைஷியர் நபி (ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளி யேறும்படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.7 அத்தியாயம் :
ஹதீஸ் 2703 — Sahih al Bukhari 53:13
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ الرُّبَيِّعَ ـ وَهْىَ ابْنَةُ النَّضْرِ ـ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا الأَرْشَ وَطَلَبُوا الْعَفْوَ، فَأَبَوْا فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُمْ بِالْقِصَاصِ. فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ يَا رَسُولَ اللَّهِ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا فَقَالَ " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ". فَرَضِيَ الْقَوْمُ وَعَفَوْا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ". زَادَ الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الأَرْشَ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரிலிருபய்யிஉ பின்த் நள்ர்,லிஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப் பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், ‘‘இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்துவிடும்படி சொல்லுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக்கொள்ள) மறுத்துவிட் டார்கள். ஆகவே, எங்கள் குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் (விவரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழிவாங்கும்படி அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவனின் மீது சத்தியமாக! அவளது முன்பல் உடைக்கப்படாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மர்வான் பின் முஆவியா அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப் பில், ‘‘(அந்த இளம்பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல் விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றுக்கொண்டார்கள்” என்று வந்துள்ளது. அத்தியாயம் :
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களின் மகனான ஹசன் (ரலி) அவர்கள்,8 மலைகள் போன்ற (பிரமாண்டமான) படைகளுடன் முஆவியா (ரலி) அவர்களை எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா (ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் பெரும் படைகளைக் காண்கிறேன். அவை தமக்கொத்த படையை வீழ்த்தாமல் திரும்பாது” என்று (போர் புரிவதைத் தூண்டும் வகையில்) கூறினார்கள். அவருக்கு முஆவியா (ரலி) அவர்கள் லிஅல்லாஹ்வின் மீதாணையாக! (அம்ர், முஆவியா ஆகிய) அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்லி ‘‘அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்றுவிடுவார் களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி)மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார்தான் இருப்பார்கள்?” என்று கேட்டார்கள். எனவே, ஹசன் (ரலி) அவர்களிடம் குறைஷியரில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் குரைஸ் (ரலி) அவர்களையும் அனுப்பி, ‘‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் (ஹசனிடம்) சென்று விவரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்” என்று கூறினார்கள். அவ்விருவரும் (அவ்வாறே) ஹசன் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹசன் (ரலி) அவர்களிடம் (முஆவியா (ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹசன் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்தச் செல்வத்தை (எங்கள் தலைமையின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர் களிடையே செலவு செய்துவருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தைச் சிந்துவதில் தீவிரமாகிவிட்டது (பொருளின்றி அதைத் தடுக்க முடியாது)” என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், ‘‘முஆவியா (ரலி) அவர்கள் உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; (சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்” என்று கூறினர். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், ‘‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?” என்று கேட்க, அவ்விருவரும் ‘‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு” என்று கூறினர். ஹசன் (ரலி) அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப் பேற்கிறோம்” என்றே அவ்விருவரும் கூறினார்கள். இறுதியாக, ஹசன் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண் டார்கள். அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டேன்: மேலும், (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத் தில் ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹசன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘‘இந்த என் (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக் கிறான்” என்று கூறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அபூபக்ரா (ரலி) அவர்களிடம் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (நேரடியாகக்) கேட்ட செய்தி இந்த ஹதீஸின் மூலம்தான் நமக்கு உறுதியானது என அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2705 — Sahih al Bukhari 53:15
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الرِّجَالِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أُمَّهُ، عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَوْتَ خُصُومٍ بِالْبَابِ عَالِيَةٍ أَصْوَاتُهُمَا، وَإِذَا أَحَدُهُمَا يَسْتَوْضِعُ الآخَرَ، وَيَسْتَرْفِقُهُ فِي شَىْءٍ وَهْوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَفْعَلُ. فَخَرَجَ عَلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَيْنَ الْمُتَأَلِّي عَلَى اللَّهِ لاَ يَفْعَلُ الْمَعْرُوفَ ". فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ، وَلَهُ أَىُّ ذَلِكَ أَحَبَّ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக்கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக்கொண்டிருந்த வர்களின் குரல்கள் உயர்ந்தன. அவ்விரு வரில் ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்துகொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, ‘‘நன்மை(யான செயலைச்) செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘‘நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்;) அவர் எதை விரும்புகிறாரோ அது அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார். அத்தியாயம் :
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் சிறிது பணம் தர வேண்டியிருந்தது. ஆகவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, யிகஅபே!› என்று கூறி யிபாதி’ (யிபாதி கடனைத் தள்ளுபடி செய்துவிடு’) என்பது போல் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக்கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்துவிட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 2707 — Sahih al Bukhari 53:17
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ النَّاسِ صَدَقَةٌ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள், சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2708 — Sahih al Bukhari 53:18
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ الزُّبَيْرَ، كَانَ يُحَدِّثُ أَنَّهُ خَاصَمَ رَجُلاً مِنَ الأَنْصَارِ قَدْ شَهِدَ بَدْرًا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شِرَاجٍ مِنَ الْحَرَّةِ كَانَا يَسْقِيَانِ بِهِ كِلاَهُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ " اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ ". فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ آنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَبْلُغَ الْجَدْرَ ". فَاسْتَوْعَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ حَقَّهُ لِلزُّبَيْرِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ ذَلِكَ أَشَارَ عَلَى الزُّبَيْرِ بِرَأْىٍ سَعَةٍ لَهُ وَلِلأَنْصَارِيِّ، فَلَمَّا أَحْفَظَ الأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَوْعَى لِلزُّبَيْرِ حَقَّهُ فِي صَرِيحِ الْحُكْمِ. قَالَ عُرْوَةُ قَالَ الزُّبَيْرُ وَاللَّهِ مَا أَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ إِلاَّ فِي ذَلِكَ {فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ} الآيَةَ.
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி ஒருவருடன் எனக்கு (மதீனாவின்) ‘அல்ஹர்ரா’ எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாய் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாயிலிருந்தே எங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிவந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோப மடைந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத் தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளை எட்டும்வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குமுன் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர் (ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோபமூட்டியபோது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். ‘‘ ‘(நபியே!) உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்குள் ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பால் தம் உள்ளங்களில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள் (4:65) எனும் வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2709 — Sahih al Bukhari 53:19
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ تُوُفِّيَ أَبِي وَعَلَيْهِ دَيْنٌ، فَعَرَضْتُ عَلَى غُرَمَائِهِ أَنْ يَأْخُذُوا التَّمْرَ بِمَا عَلَيْهِ، فَأَبَوْا وَلَمْ يَرَوْا أَنَّ فِيهِ وَفَاءً، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ " إِذَا جَدَدْتَهُ فَوَضَعْتَهُ فِي الْمِرْبَدِ آذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ". فَجَاءَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَجَلَسَ عَلَيْهِ، وَدَعَا بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ " ادْعُ غُرَمَاءَكَ، فَأَوْفِهِمْ ". فَمَا تَرَكْتُ أَحَدًا لَهُ عَلَى أَبِي دَيْنٌ إِلاَّ قَضَيْتُهُ، وَفَضَلَ ثَلاَثَةَ عَشَرَ وَسْقًا سَبْعَةٌ عَجْوَةٌ، وَسِتَّةٌ لَوْنٌ أَوْ سِتَّةٌ عَجْوَةٌ وَسَبْعَةٌ لَوْنٌ، فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَغْرِبَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَضَحِكَ فَقَالَ " ائْتِ أَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَخْبِرْهُمَا ". فَقَالاَ لَقَدْ عَلِمْنَا إِذْ صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا صَنَعَ أَنْ سَيَكُونُ ذَلِكَ. وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ صَلاَةَ الْعَصْرِ. وَلَمْ يَذْكُرْ أَبَا بَكْرٍ وَلاَ ضَحِكَ، وَقَالَ وَتَرَكَ أَبِي عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا دَيْنًا. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ صَلاَةَ الظُّهْرِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை தம்மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்குப் பதிலாகப் பேரீச்சங்கனிகளை எடுத்துக்கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக்கொள்வதால் (தமது) உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்னிடம்) தெரிவிப்பீராக!” என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் உமர் (ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, ‘‘உன் (தந்தைக்குக்) கடன் கொடுத்தவர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். என் தந்தை யாருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்ததோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். (அவ்வாறிருந்தும்) பதின்மூன்று யிவஸ்க்’ பேரீச்சங்கனிகள் எஞ்சிவிட்டன. யிஏழு வஸ்க்குகள் ‘அஜ்வா’ (எனும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், ஆறு யிவஸ்க்’குகள் யிலவ்ன்’ எனும் மற்ற வகைப் பேரீச்சம் பழங்களும்’, அல்லது யிஏழு யிவஸ்க்’குகள் லவ்னும் ஆறு வஸ்க்குகள் அஜ்வாவும் மீதமாகிவிட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘‘அபூபக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி” என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வளம் வேண்டி பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்துகொண்டோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அஸ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பற்றியோ நபியவர்கள் சிரித்தது பற்றியோ அதில் குறிப்பு இல்லை. மேலும், என் தந்தை முப்பது யிவஸ்க்’குகள் கடனை விட்டுச்சென்றார் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், யிலுஹ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :