ஹதீஸ் 1077 — Sahih al Bukhari 17:11
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ التَّيْمِيِّ ـ قَالَ أَبُو بَكْرٍ وَكَانَ رَبِيعَةُ مِنْ خِيَارِ النَّاسِ عَمَّا حَضَرَ رَبِيعَةُ مِنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَرَأَ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ، حَتَّى إِذَا كَانَتِ الْجُمُعَةُ الْقَابِلَةُ قَرَأَ بِهَا حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ فَمَنْ سَجَدَ فَقَدْ أَصَابَ، وَمَنْ لَمْ يَسْجُدْ فَلاَ إِثْمَ عَلَيْهِ. وَلَمْ يَسْجُدْ عُمَرُ ـ رضى الله عنه. وَزَادَ نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلاَّ أَنْ نَشَاءَ.
ரபீஆ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தாம் உமர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்தது குறித்துக் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று ‘அந்நஹ்ல்’ (எனும் 16ஆவது) அத்தி யாயத்தை ஓதினார்கள். அதில் சஜ்தா வசனம் (16:50) வந்ததும் இறங்கி (ஓதலுக்கான) சஜ்தா செய்தார்கள். மக்களும் சஜ்தா செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை (உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அப்போது சஜ்தா வசனத்தை அடைந்ததும், “மக்களே! நாம் சஜ்தா வசனத்தை ஓதப்போகிறோம். யார் சஜ்தா செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்தவ ராவார். யார் சஜ்தா செய்யவில்லையோ அவர்மீது எந்தக் குற்றமுமில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் சஜ்தா செய்யவில்லை. இது தொடர்பாக நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “(ஓதலுக்காக) சஜ்தா செய்வதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை; நாமாக விரும்பிச் செய்தால் தவிர” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :