Qurani·قرآني
தமிழ்

இஃதிகாஃப் (மஸ்ஜிதில் தனிமையில் இருத்தல்)

22 ஹதீஸ்கள் · #2025–2046

ஹதீஸ் 2045 — Sahih al Bukhari 33:20
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَتْنِي عَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا، وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالأَبْنِيَةِ فَقَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏‏.‏ قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ آلْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ ‏"‏‏.‏ فَرَجَعَ، فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றிக் குறிப்பிட்டார் கள். அவர்களிடம் நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்க) அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளித்தார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார். அவ்வாறே செய்தேன். இதைக் கண்ட ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறே கட்டப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தமது கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு ‘‘இவை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், ‘‘ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோரின் கூடாரங்கள்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். (ரமளான்) நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2046 — Sahih al Bukhari 33:21
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ وَهْىَ فِي حُجْرَتِهَا، يُنَاوِلُهَا رَأْسَهُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை அறை’லிருக்கும் என்னிடம் கொடுப்பார்கள். நான் அவர்களது தலையை வாரிவிடுவேன்; அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.