ஹதீஸ் 344 — Sahih al Bukhari 7:11
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، قَالَ كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَإِنَّا أَسْرَيْنَا، حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا وَقْعَةً وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ الْمُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا إِلاَّ حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ ثُمَّ فُلاَنٌ ثُمَّ فُلاَنٌ ـ يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ـ ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ الرَّابِعُ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لأَنَّا لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ، وَرَأَى مَا أَصَابَ النَّاسَ، وَكَانَ رَجُلاً جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ لِصَوْتِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ قَالَ " لاَ ضَيْرَ ـ أَوْ لاَ يَضِيرُ ـ ارْتَحِلُوا ". فَارْتَحَلَ فَسَارَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ نَزَلَ، فَدَعَا بِالْوَضُوءِ، فَتَوَضَّأَ وَنُودِيَ بِالصَّلاَةِ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ الْقَوْمِ قَالَ " مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ الْقَوْمِ ". قَالَ أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ. قَالَ " عَلَيْكَ بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ ". ثُمَّ سَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ الْعَطَشِ فَنَزَلَ، فَدَعَا فُلاَنًا ـ كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ ـ وَدَعَا عَلِيًّا فَقَالَ " اذْهَبَا فَابْتَغِيَا الْمَاءَ ". فَانْطَلَقَا فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ ـ أَوْ سَطِيحَتَيْنِ ـ مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا أَيْنَ الْمَاءُ قَالَتْ عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ، وَنَفَرُنَا خُلُوفًا. قَالاَ لَهَا انْطَلِقِي إِذًا. قَالَتْ إِلَى أَيْنَ قَالاَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتِ الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ قَالاَ هُوَ الَّذِي تَعْنِينَ فَانْطَلِقِي. فَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَاهُ الْحَدِيثَ قَالَ فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا وَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ ـ أَوِ السَّطِيحَتَيْنِ ـ وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا، وَأَطْلَقَ الْعَزَالِيَ، وَنُودِيَ فِي النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا. فَسَقَى مَنْ شَاءَ، وَاسْتَقَى مَنْ شَاءَ، وَكَانَ آخِرَ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الْجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ قَالَ " اذْهَبْ، فَأَفْرِغْهُ عَلَيْكَ ". وَهْىَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اجْمَعُوا لَهَا ". فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ، حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ، وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا، وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا قَالَ لَهَا " تَعْلَمِينَ مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا ". فَأَتَتْ أَهْلَهَا، وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ قَالُوا مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ قَالَتِ الْعَجَبُ، لَقِيَنِي رَجُلاَنِ فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ، فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لأَسْحَرُ النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ. وَقَالَتْ بِإِصْبَعَيْهَا الْوُسْطَى وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ ـ تَعْنِي السَّمَاءَ وَالأَرْضَ ـ أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ الْمُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ الْمُشْرِكِينَ، وَلاَ يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ يَوْمًا لِقَوْمِهَا مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ الْقَوْمَ يَدَعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ فَأَطَاعُوهَا فَدَخَلُوا فِي الإِسْلاَمِ.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் இறுதி நேரத்தில் (ஓரிடத்தில் இறங்கி) சிறிது நேரம் உறங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான உறக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த உறக்கத்தி-ருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னவர் ஆவார். அதற்கடுத்து இன்னவர். அதற்கடுத்து இன்னவர். -(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூரஜாஉ (இம்ரான் அல்உதாரிதீ-ரஹ்) அவர்கள் அம்மூவரின் பெயரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அவரிடமிருந்து கேட்டு அறிவிப்பவரான அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார்கள்.- நான்காவதாக உறக்கத்தி-ருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்தி-ருந்து யாரும் எழுப்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச் செய்தி ஏதேனும் வருகிறதா?) என்பது எங்களுக் குத் தெரியாது. (எனவேதான், அவர்களை யாரும் எழுப்பமாட்டார்கள்.) உறக்கத்தி-ருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து, மக்களுக்கு ஏற்பட்டு விட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலையைப் பார்த்தபோது, (எல்லாரையும் எழுப்ப) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொன்னார்கள். - உமர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.- எனவே, தொடர்ந்து உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொல்-க்கொண்டேயிருந்தார்கள். அவர்களது சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் விழித்தெழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிரச்சினையில்லை’ அல்லது ‘பிரச்சினை ஏற்படாது’; இங்கிருந்து புறப்படுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தி-ருந்து) இறங்கினார்கள். அங்கத் தூய்மை செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்- அங்கத் தூய்மை செய்தார்கள். (சுப்ஹு) தொழுகைக்காக (பாங்கு சொல்-) அறிவிப்பு செய்யப்பட்டபின் (தவறிய அந்தத் தொழுகையை) மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது, அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களைவிட்டு ஒதுங்கியிருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அவர், “எனக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு” என்று சொன் னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத் தைத் தொடர்ந்தார்கள். அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டுள்ள தாக முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தி-ருந்து இறங்கி, இன்ன மனிதரை அழைத்தார்கள் - அவருடைய பெயரை அறிவிப்பாளர் அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அடுத்த அறிவிப் பாளர் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அதை மறந்துவிட்டார் - (அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “நீங்கள் இருவரும் சென்று, தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப்பாருங்கள்” என்றார்கள். அவ்வாறே, அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்டபடி) தமது ஒட்டகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கிவிட்டனர்” என்று கூறினாள். “அப்படியானால் நீ நட!” என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் ‘எங்கே?’ என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினர். “மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடமா?” என்று அப்பெண் கேட்டாள். “நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில் தான்; நட” என்று கூறிவிட்டு, அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர். மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத் தி-ருந்து இறங்குமாறு கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்- அவ்விரு தோல் பைகளின் வாய் வழியாகத் தண்ணீரைப் பாத்திரத்தி னுள் நிரப்பினார்கள். பிறகு அந்தத் தோல் பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய் களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே “தண்ணீர் புகட்டுங்கள்; நீங்களும் பருகுங்கள்” என அறிவிக்கப் பட்டது. அவ்வாறே நாடிய சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொண்டனர். நாடிய சிலர் தாமே பருகினர். அதன் இறுதியாக பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி, “(இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள்மீது ஊற்றிக்(குளித்துக்)கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிலிருந்து தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிடக் கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல் பையி-ருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) “இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங் கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (ஏராளமான) உணவுப் பண்டங்களைத் திரட்டி(க் கொண்டுவந்து), அவற்றை ஒரு துணியி-ட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்தில் அமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், “தெரிந்துகொள்: உனது தண்ணீரி-ருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கி யதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் பருகக்கொடுத்தான்” என்று கூறினார்கள். பிறகு அப்பெண் தன் குடும்பத்தாரி டம் தாமதமாக வந்துசேர்ந்தார். அவர்கள், “இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழித்துவருகிறாய்?” என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண், “ஓர் அதிசயம் (என்னை விரைவாக வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது). இரு ஆண்கள் என்னைச் சந்தித்து ‘மதம் மாறியவர்’ என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்” என்று கூறிவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையே உள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார்” அல்லது “உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்” என்று கூறினாள். அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணை வைப்பாளர்களுக்கும் முஸ்-ம்களுக்கும் இடையே போர் நடந்தபோது, அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, ஒரு நாள் அப்பெண் தன் கூட்டத்தாரிடம், “இந்த மக்கள் வேண்டு மென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸாபிஉ’ எனும் சொல்-ன் வினைச் சொல்லான) ‘ஸபஅ’ என்பதற்கு ‘ஒரு மதத்தி-ருந்து வெளியேறி இன்னொரு மதத்திற்குச் சென்றார் (மதம் மாறினார்)’ என்பது பொருளாகும். அபுல்ஆ-யா (ரஃபீஉ பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஸாபியீன்’ என்போர், ‘ஸபூர்’ (வேதத்தை) வாசித்துவந்த வேதக்காரர் களில் ஒரு பிரிவினர் ஆவர். அத்தியாயம் :