Qurani·قرآني
தமிழ்

குடும்பச் செலவு (நஃபகா)

22 ஹதீஸ்கள் · #5351–5372

ஹதீஸ் 5371 — Sahih al Bukhari 69:21
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ ‏"‏ هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلاً ‏"‏‏.‏ فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى، وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ ‏"‏ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ‏"‏‏.‏ فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ ‏"‏ أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَىَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ‘‘இவர் தமது கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா?” என்று கேட்பது வழக்கம். ‘‘அவர் (தமது கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச்சென்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம், ‘‘உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்” என்று கூறிவிடுவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், ‘‘நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். ஆகவே, இறை நம்பிக்கையாளர்களில் எவர் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்துவிடுகிறாரோ அவரது கடனை அடைப்பது என் பொறுப்பாகும். எவர் ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்” என்று சொன்னார்கள்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 5372 — Sahih al Bukhari 69:22
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي ابْنَةَ أَبِي سُفْيَانَ‏.‏ قَالَ ‏"‏ وَتُحِبِّينَ ذَلِكَ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي الْخَيْرِ أُخْتِي‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ إِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ ابْنَةَ أَبِي سَلَمَةَ‏.‏ فَقَالَ ‏"‏ ابْنَةَ أُمِّ سَلَمَةَ ‏"‏‏.‏ فَقُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏فَوَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ ‏"‏‏.‏ وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ ثُوَيْبَةُ أَعْتَقَهَا أَبُو لَهَبٍ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யானின் புதல்வியான என் சகோதரியைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூசலமாவின் மகள் ‘துர்ரா’வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என்று கேட்க, நான் ‘‘ஆம்” என்று சொன்னேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டி யிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூலஹப் விடுதலை செய்திருந்தார்.28 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.