Qurani·قرآني
தமிழ்

உம்ரா (சிறு யாத்திரை)

33 ஹதீஸ்கள் · #1773–1805

ஹதீஸ் 1773 — Sahih al Bukhari 26:1
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1774 — Sahih al Bukhari 26:2
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ، سَأَلَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ الْعُمْرَةِ، قَبْلَ الْحَجِّ فَقَالَ لاَ بَأْسَ‏.‏ قَالَ عِكْرِمَةُ قَالَ ابْنُ عُمَرَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يَحُجَّ‏.‏ وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ مِثْلَهُ‏.‏ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِثْلَهُ‏.‏
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்குமுன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார் கள். அதற்கு ‘தவறில்லை’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.3 மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்குமுன் உம்ரா செய்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1775 — Sahih al Bukhari #1775
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ،، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي الْمَسْجِدِ صَلاَةَ الضُّحَى‏.‏ قَالَ فَسَأَلْنَاهُ عَنْ صَلاَتِهِمْ‏.‏ فَقَالَ بِدْعَةٌ‏.‏ ثُمَّ قَالَ لَهُ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعً إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نَرُدَّ عَلَيْهِ‏.‏ قَالَ وَسَمِعْنَا اسْتِنَانَ، عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فِي الْحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ يَا أُمَّاهُ، يَا أُمَّ الْمُؤْمِنِينَ‏.‏ أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ‏.‏ قَالَتْ مَا يَقُولُ قَالَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرَاتٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ‏.‏ قَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا اعْتَمَرَ عُمْرَةً إِلاَّ وَهُوَ شَاهِدُهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ‏.‏
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக் கருகே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் (ளுஹா) தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் “இது, மார்க்க அடிப்படையற்ற புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள்.5 பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்?” என உர்வா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள். நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. இதற்கிடையே, அறையில் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், “அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா?’ எனக் கேட்டார். “அவர் என்ன கூறுகிறார்?” என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று, ரஜப் மாதத்தில் நடந்தது என்று கூறுகிறார்” என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (இப்போது மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை” எனக் கூறினார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 1776 — Sahih al Bukhari 26:3

ஹதீஸ் 1777 — Sahih al Bukhari 26:4
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَجَبٍ‏.‏
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் (நபி (ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1778 — Sahih al Bukhari 26:5
حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ عُمْرَةُ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَدَّهُ الْمُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الْجِعْرَانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ أُرَاهُ حُنَيْنٍ‏.‏ قُلْتُ كَمْ حَجَّ قَالَ وَاحِدَةً‏.‏
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான்கு (உம்ராக் கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதை பியா எனுமிடத்தில் இருந்து துல்கஅதா மாதத்தில் செய்(ய முனைந்)த உம்ரா. ஆனால், இணைவைப்பாளர்கள் நபியவர் களைத் தடுத்துவிட்டனர். இணைவைப் பாளர்களுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா; அடுத்து ‘ஜிஇர்ரானா’ என்ற இடத்திலிருந்து ஒரு போரில் -அது ஹுனைன் போர் என்றே கருதுகிறேன்- கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டபோது செய்த உம்ரா (ஹஜ்ஜுடன் சேர்த்து செய்த உம்ரா). பிறகு “எத்தனை ஹஜ் செய்திருக் கிறார்கள்?” என்று நான் கேட்டதற்கு, “ஒரு ஹஜ்தான்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1779 — Sahih al Bukhari 26:6
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَيْثُ رَدُّوهُ، وَمِنَ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (முதலில்), இணைவைப்பாளர்கள் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காகச் சென்றிருந்தார்கள்; அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து ஹஜ்ஜுடன் ஒரு உம்ரா செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1780 — Sahih al Bukhari 26:7
حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، وَقَالَ، اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلاَّ الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَمِنَ الْعَامِ الْمُقْبِلِ، وَمِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ‏.‏
ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியாவிலிருந்து (அவர்கள் தடுக்கப்பட்டபோது) செய்யச் சென்ற உம்ரா; அதற்கடுத்த ஆண்டின் உம்ரா; ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப் பங்கிட்ட இடமான ‘ஜிஇர்ரானா’ விலிருந்து செய்த உம்ரா; ஹஜ்ஜுடன் செய்த உம்ரா ஆகியவை ஆகும்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 1781 — Sahih al Bukhari 26:8
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ مَسْرُوقًا وَعَطَاءً وَمُجَاهِدًا‏.‏ فَقَالُوا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ‏.‏ وَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ‏.‏
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஸ்ரூக், அதாஉ, முஜாஹித் (ரஹ்) ஆகியோரிடம் (நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்” என்று கூறினர். மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்” என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.8 அத்தியாயம் :
ஹதீஸ் 1782 — Sahih al Bukhari 26:9
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُخْبِرُنَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ، فَنَسِيتُ اسْمَهَا ‏"‏ مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا ‏"‏‏.‏ قَالَتْ كَانَ لَنَا نَاضِحٌ فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ ـ لِزَوْجِهَا وَابْنِهَا ـ وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ قَالَ ‏"‏ فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ ‏"‏‏.‏ أَوْ نَحْوًا مِمَّا قَالَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரிடம், -“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்- “நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் இருந்த நீர் இறைப்பதற்கான (இரு ஒட்டகங்களில்) ஓர் ஒட்டகத்தில் இன்னா ரின் தந்தையும் அவருடைய மகனும் (என் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றோர் ஒட்டகத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கி றோம்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்” என்றோ, அல்லது அதைப் போன்றோ கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.