Qurani·قرآني
தமிழ்

உம்ரா (சிறு யாத்திரை)

33 ஹதீஸ்கள் · #1773–1805

ஹதீஸ் 1803 — Sahih al Bukhari 26:28
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا، كَانَتِ الأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ، وَلَكِنْ مِنْ ظُهُورِهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ، فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ، فَنَزَلَتْ ‏{‏وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا‏}‏‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள். இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இதனால் அவரைப் பற்றி குறைசொல்லப்பட்டது. அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று. மாறாக, (இறைவனுக்கு) அஞ்சி நடப்பவரே புண்ணியவான் ஆவார். ஆகவே, வீடுகளுக்குள் அவற் றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்” (2:189) எனும் வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
ஹதீஸ் 1804 — Sahih al Bukhari 26:29
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பயணம் வேதனையில் ஒரு பகுதி யாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தை யும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1805 — Sahih al Bukhari 26:30
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ فَأَسْرَعَ السَّيْرَ، حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا‏.‏
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நானும் அவர்களுடன் (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். (அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் அவர்களின் உடல்நிலை மோசமான செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே பயணத்தை விரைவுபடுத்தினார்கள். செம்மேகம் மறையும்வரை (மஃக்ரிப் தொழுகையைத்) தாமதப்படுத்தி ஓரிடத்தில் இறங்கினார்கள். அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். “நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (இவ்வாறுதான்) மஃக்ரிபைத் தாமதப்படுத்தி இரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.