Qurani·قرآني
தமிழ்

குர்ஆனின் பண்புகள் (ஃபளாயிலுல் குர்ஆன்)

84 ஹதீஸ்கள் · #4979–5062

ஹதீஸ் 4999 — Sahih al Bukhari 66:21
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، ذَكَرَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ لاَ أَزَالُ أُحِبُّهُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَسَالِمٍ وَمُعَاذٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ ‏"‏‏.‏
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறித்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘நான் என்றென்றும் அவர்களை நேசிப்பேன்; (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், சாலிம், முஆத் பின் ஜபல், உபை பின் கஅப் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை (ஓதக்) கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 5000 — Sahih al Bukhari 66:22
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقُ بْنُ سَلَمَةَ، قَالَ خَطَبَنَا عَبْدُ اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَقَدْ أَخَذْتُ مِنْ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِضْعًا وَسَبْعِينَ سُورَةً، وَاللَّهِ لَقَدْ عَلِمَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنِّي مِنْ أَعْلَمِهِمْ بِكِتَابِ اللَّهِ وَمَا أَنَا بِخَيْرِهِمْ‏.‏ قَالَ شَقِيقٌ فَجَلَسْتُ فِي الْحِلَقِ أَسْمَعُ مَا يَقُولُونَ فَمَا سَمِعْتُ رَادًّا يَقُولُ غَيْرَ ذَلِكَ‏.‏
ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரையாற்றி னார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை நன்கறிந்தவன் நானே என்பதை நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லா வகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்” என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவியுற்றவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதை மறுத்து வேறு விதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 5001 — Sahih al Bukhari 66:23
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ كُنَّا بِحِمْصَ فَقَرَأَ ابْنُ مَسْعُودٍ سُورَةَ يُوسُفَ، فَقَالَ رَجُلٌ مَا هَكَذَا أُنْزِلَتْ قَالَ قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحْسَنْتَ‏.‏ وَوَجَدَ مِنْهُ رِيحَ الْخَمْرِ فَقَالَ أَتَجْمَعُ أَنْ تُكَذِّبَ بِكِتَابِ اللَّهِ وَتَشْرَبَ الْخَمْرَ‏.‏ فَضَرَبَهُ الْحَدَّ‏.‏
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்துகொண்டிருந் தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ‘யூசுஃப்’ எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக), ‘‘இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்பெறவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்உத் (ரலி) அவர்கள், ‘‘(இவ்வாறு தான்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘‘மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5002 — Sahih al Bukhari 66:24
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ وَلاَ أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّي بِكِتَابِ اللَّهِ تُبَلِّغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பெற்றால் அது யார் விஷயத்தில் அருளப்பெற்றது என்பதையும் நான் நன்கறிவேன். என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன். இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5003 — Sahih al Bukhari 66:25
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ مَنْ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ‏.‏ تَابَعَهُ الْفَضْلُ عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ‏.‏
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நால்வர்: 1. உபை பின் கஅப் (ரலி) அவர்கள். 2. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள். 3. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள். 4. அபூஸைத் (ரலி) அவர்கள்; அவர்கள் அனைவருமே அன்சாரிகளாவர்” என்று கூறினார்கள்.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5004 — Sahih al Bukhari 66:26
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ، وَثُمَامَةُ، عَنْ أَنَسٍ، قَالَ مَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ يَجْمَعِ الْقُرْآنَ غَيْرُ أَرْبَعَةٍ أَبُو الدَّرْدَاءِ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُو زَيْدٍ‏.‏ قَالَ وَنَحْنُ وَرِثْنَاهُ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் (குர்ஆனைக் கேட்டுத்) திரட்டியிராத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந் தார்கள். (அந்த நால்வர்:) 1. அபுத்தர்தா. 2. முஆத் பின் ஜபல். 3. ஸைத் பின் ஸாபித். 4. அபூஸைத் (ரலி) ஆகியோர் ஆவர். நாங்களே (என் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான) அபூஸைத் (ரலி) அவர்களுக்கு வாரிசானோம். (அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5005 — Sahih al Bukhari 66:27
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ عُمَرُ أُبَىٌّ أَقْرَؤُنَا وَإِنَّا لَنَدَعُ مِنْ لَحَنِ أُبَىٍّ، وَأُبَىٌّ يَقُولُ أَخَذْتُهُ مِنْ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلاَ أَتْرُكُهُ لِشَىْءٍ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نَنْسَأْهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا‏}‏
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். நாங்கள் உபை (ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்” என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, ‘‘எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டுவருகிறோம்” என்று கூறியுள்ளான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 அத்தியாயம் :
ஹதீஸ் 5006 — Sahih al Bukhari 66:28
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ كُنْتُ أُصَلِّي فَدَعَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمْ أُجِبْهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي‏.‏ قَالَ ‏"‏ أَلَمْ يَقُلِ اللَّهُ ‏{‏اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ‏}‏ ثُمَّ قَالَ أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ ‏"‏‏.‏ فَأَخَذَ بِيَدِي فَلَمَّا أَرَدْنَا أَنْ نَخْرُجَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قُلْتَ لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ مِنَ الْقُرْآنِ‏.‏ قَالَ ‏"‏‏{‏الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ‏}‏ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ ‏"‏‏.‏
அபூசயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்தபிறகு), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுதுகொண்டிருந்தேன். (அதனால்தான் உடனடியாகத் தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ், ‘(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுக்கும் உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள்’ என்று (8:24ஆவது வசனத்தில்) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, ‘‘நீங்கள் பள்ளிவாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டாமா?” என்று வினவியபடி எனது கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முற்பட்டபோது நான் (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!” என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அது) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பெற்றுள்ள மேன்மைமிகு குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :
ஹதீஸ் 5007 — Sahih al Bukhari 66:29
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ مَعْبَدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كُنَّا فِي مَسِيرٍ لَنَا فَنَزَلْنَا فَجَاءَتْ جَارِيَةٌ فَقَالَتْ إِنَّ سَيِّدَ الْحَىِّ سَلِيمٌ، وَإِنَّ نَفَرَنَا غُيَّبٌ فَهَلْ مِنْكُمْ رَاقٍ فَقَامَ مَعَهَا رَجُلٌ مَا كُنَّا نَأْبُنُهُ بِرُقْيَةٍ فَرَقَاهُ فَبَرَأَ فَأَمَرَ لَهُ بِثَلاَثِينَ شَاةً وَسَقَانَا لَبَنًا فَلَمَّا رَجَعَ قُلْنَا لَهُ أَكُنْتَ تُحْسِنُ رُقْيَةً أَوْ كُنْتَ تَرْقِي قَالَ لاَ مَا رَقَيْتُ إِلاَّ بِأُمِّ الْكِتَابِ‏.‏ قُلْنَا لاَ تُحْدِثُوا شَيْئًا حَتَّى نَأْتِيَ ـ أَوْ نَسْأَلَ ـ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَكَرْنَاهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ وَمَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ ‏"‏‏.‏ وَقَالَ أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ حَدَّثَنِي مَعْبَدُ بْنُ سِيرِينَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ بِهَذَا
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து ‘‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?” என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒரு மனிதர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். ஆகவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களுடைய தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம், ‘உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?’. அல்லது ‘ஏற்கனவே, நீர் ஓதிப்பார்ப்பவராக இருந்தீரா?’ என்று கேட்டோம். அவர், ‘‘இல்லை; ‘குர்ஆனின் அன்னை’ என்றழைக்கப்படும் (‘அல் ஃபாத்திஹா’) அத்தியாயத்தைத்தான் ஓதிப்பார்த்தேன்” என்று சொன்னார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘செல்லும்வரையில்’ அல்லது ‘சென்று (விளக்கம்) கேட்கும்வரையில்’ ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்று (எங்களுக் கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறினோம். ‘‘இது (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்!” என்று சொன்னார்கள்.32 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 5008 — Sahih al Bukhari 66:30
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَرَأَ بِالآيَتَيْنِ‏.‏ ‏.‏‏.‏ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இரண்டு வசனங்களை ஓதினார்களோ...33 இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.