حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ " أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ. تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். ‘‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந் தராக விரும்பிய நிலையில் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உமது உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, யிஇன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர். (உமது மரணம் நெருங்கிவிடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உம்முடைய வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகிவிட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2749 — Sahih al Bukhari 55:12
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ، إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எவர் இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. எவர் இதைப் பேராசை யுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை தான், கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.12 நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின் எவரிட மும் எதையும் நான் (இந்த) உலகை விட்டுப் பிரியும்வரை கேட்கமாட்டேன்” என்று கூறினேன். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிட மிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றை)க் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (மக்களிடையே), ‘‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரது உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்” என்று அறிவித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், தாம் மரணிக்கும்வரை (எதுவும்) கேட்கவில்லை. அவர்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!13 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. அவரவர் தத்தமது பொறுப் பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக் கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத் தில் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து விசாரிக் கப்படுவாள். பணியாள் தன் உரிமை யாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்பிலுள்ள செல்வம் குறித்து விசாரிக்கப்படுவான். மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14 அத்தியாயம் :
ஹதீஸ் 2752 — Sahih al Bukhari 55:15
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ " أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا مَعْشَرَ قُرَيْشٍ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்கள். ‘‘ ‘(நபியே!) நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!› (26:214) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிபனூ ஃபிஹ்ர் குடும்பத்தாரே! பனூ அதீ குடும்பத்தாரே!› என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் கிளைக் குடும்பத்தாரை அழைக்க லானார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘இந்த இறைவசனம் (26:214) அருளப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிகுறைஷிக் குலத்தாரே!› என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, யிகுறைஷிக் குலத்தாரே!› என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘‘(ஓரிறையை ஏற்று) உங்களை (நரக நெருப்பிலிருந்து) விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து உங்களை நான் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்(வின் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) உன்னை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.15 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2754 — Sahih al Bukhari 55:17
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ " ارْكَبْهَا ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ " ارْكَبْهَا، وَيْلَكَ، أَوْ وَيْحَكَ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஒட்ட கத்தை ஓட்டிக்கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். (இவ்விதம் திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) மூன்றாவது, அல்லது நான்காவது முறையில், ‘‘உனக்குக் கேடுதான் லிஅல்லது உனக்கு நாசம்தான்லி அதில் நீர் ஏறிக்கொள்வீராக” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2755 — Sahih al Bukhari 55:18
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ " ارْكَبْهَا ". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا، وَيْلَكَ ". فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக்கொண்டு வருவதைக் கண்டார்கள். அப்போது அவரிடம், ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும்போது), ‘‘உமக்குக் கேடுதான்; அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள்.17 அத்தியாயம் :
ஹதீஸ் 2756 — Sahih al Bukhari 55:19
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنه ـ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَىْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ " نَعَمْ ". قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவருடைய தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் ஊரில் இல்லாத போது இறந்துவிட்டார். நான் அவர் சார்பாகத் தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பயனளிக் கும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன். அதற்குத் தங்களை சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின் வாங்கியதற்குப்) பாவமீட்பு பெறும் ஓர் அம்சமாக, என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக்கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாக வழங்க விரும்பு கிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது செல்வத்தில் ஒரு பகுதியை உமக்காக வைத்துக்கொள்வீராக! அது உமக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘‘கைபரில் கிடைத்த எனது பங்கை (எனக் காக) வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினேன். அத்தியாயம் :