Qurani·قرآني
தமிழ்

வித்ர் தொழுகை

15 ஹதீஸ்கள் · #990–1004

ஹதீஸ் 1000 — Sahih al Bukhari 14:11
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ، يُومِئُ إِيمَاءً، صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ، وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீது அமர்ந்தவாறு வாகனம் செல்லும் திசையில் சைகை செய்து இரவுத் தொழுகையைத் தொழுவார்கள்; ஆனால், கடமையான தொழுகைகளைத் தவிர! மேலும், தமது வாகனத்தின் மீது அமர்ந்தே வித்ர் தொழுவார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 1001 — Sahih al Bukhari 14:12
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ‏.‏ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا‏.‏
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் ‘குனூத்’ ஓதினார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “ருகூஉ வுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூஉவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம் அவர்கள் குனூத் ஓதினார்கள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1002 — Sahih al Bukhari 14:13
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ،‏.‏ فَقَالَ قَدْ كَانَ الْقُنُوتُ‏.‏ قُلْتُ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ‏.‏ قَالَ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ‏.‏ فَقَالَ كَذَبَ، إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا ـ أُرَاهُ ـ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلاً إِلَى قَوْمٍ مِنَ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ‏.‏
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉ விற்கு முன்புதான்” என்று பதிலளித் தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (குர்ரா) என்று அழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க, அந்த எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான், அவர்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குனூத்’ (இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1003 — Sahih al Bukhari 14:14
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் ‘குனூத்’ (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1004 — Sahih al Bukhari 14:15
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) குனூத் (இடர் காலப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.8 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.