அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், முஸ்தலிஃபாவில் "அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நாங்கள் "அரஃபா" தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் "தல்பியா"சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அபீசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகிறேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3096 — Sahih Muslim 15:301
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالُوا أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عُمَرَ بْنِ حُسَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَدَاةِ عَرَفَةَ فَمِنَّا الْمُكَبِّرُ وَمِنَّا الْمُهَلِّلُ فَأَمَّا نَحْنُ فَنُكَبِّرُ قَالَ قُلْتُ وَاللَّهِ لَعَجَبًا مِنْكُمْ كَيْفَ لَمْ تَقُولُوا لَهُ مَاذَا رَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ