وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي - وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ . فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறைவாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2065 — Sahih Muslim 8:20
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، - وَاللَّفْظُ لِهَارُونَ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " دَعْهُمَا " فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ " تَشْتَهِينَ تَنْظُرِينَ " . فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ " دُونَكُمْ يَا بَنِي أَرْفَدَةَ " . حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ " حَسْبُكِ " . قُلْتُ نَعَمْ . قَالَ " فَاذْهَبِي " .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்” போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி "அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். "அர்ஃபிதாவின் மக்களே! (சூடானியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, "போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெருநாள் தினத்தில் அபிசீனியர்கள் (ஆயுதங்களை வைத்து) குதித்து விளையாடிக் கொண்டு பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் (வந்து) எனது தலையை நபி (ஸல்) அவர்களது தோள்மீது வைத்துக்கொண்டு அபிசீனியர்களின் (வீர) விளையாட்டுகளைப் பார்க்கலானேன். இறுதியில் அவர்(களின் வீர விளையாட்டு)களிலிருந்து நானாகத் திரும்பிச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் என்னைப் போகச் சொல்லவில்லை.) - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பள்ளிவாசலுக்குள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அந்த விளையாட்டு வீரர்களிடம் "நான் உங்க(ளின் விளையாட்டு)களைப் பார்க்க விரும்புகிறேன்" எனக் கூறி (அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைப் பார்த்துக்கொண்டு) நிற்க, நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்குமிடையே (எனது முகத்தை வைத்து) அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்கள் ஆவர். "அல்ல; அவர்கள் அபிசீனியர்களே ஆவர்" என என்னிடம் இப்னு அத்தீக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2069 — Sahih Muslim 8:24
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحِرَابِهِمْ إِذْ دَخَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَهْوَى إِلَى الْحَصْبَاءِ يَحْصِبُهُمْ بِهَا . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْهُمْ يَا عُمَرُ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஈட்டியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அங்கு வந்து, அவர்கள்மீது எறிவதற்காகக் குனிந்து சிறு கற்களை எடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களை விட்டுவிடுங்கள், உமரே! (விளையாடட்டும்)" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :