حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم تِسْعُ نِسْوَةٍ فَكَانَ إِذَا قَسَمَ بَيْنَهُنَّ لاَ يَنْتَهِي إِلَى الْمَرْأَةِ الأُولَى إِلاَّ فِي تِسْعٍ فَكُنَّ يَجْتَمِعْنَ كُلَّ لَيْلَةٍ فِي بَيْتِ الَّتِي يَأْتِيهَا فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ فَجَاءَتْ زَيْنَبُ فَمَدَّ يَدَهُ إِلَيْهَا فَقَالَتْ هَذِهِ زَيْنَبُ . فَكَفَّ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ . فَتَقَاوَلَتَا حَتَّى اسْتَخَبَتَا وَأُقِيمَتِ الصَّلاَةُ فَمَرَّ أَبُو بَكْرٍ عَلَى ذَلِكَ فَسَمِعَ أَصْوَاتَهُمَا فَقَالَ اخْرُجْ يَا رَسُولَ اللَّهِ إِلَى الصَّلاَةِ وَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ . فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَتْ عَائِشَةُ الآنَ يَقْضِي النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ فَيَجِيءُ أَبُو بَكْرٍ فَيَفْعَلُ بِي وَيَفْعَلُ . فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ أَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ لَهَا قَوْلاً شَدِيدًا وَقَالَ أَتَصْنَعِينَ هَذَا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அவர்களிடையே (இரவுகளைப்) பங்கிட்டு (ஒவ்வொருவரிடமும் ஓர் இரவு வீதம் தங்கிவந்ததால்), முதலாவது மனைவியிடம் ஒன்பது நாட்களுக்குப் பிறகே நபியவர்கள் திரும்பச் செல்வார்கள். எனவே, யாருடைய வீட்டில் நபியவர்கள் தங்குவார்களோ அவரது வீட்டில் எல்லாத் துணைவியரும் ஒவ்வோர் இரவிலும் ஒன்றுகூடுவர். (ஓர் இரவில்) ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் இருந்தபோது, ஸைனப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா என்று நினைத்து) ஸைனபிடம் கையை நீட்டினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் "இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கையை விலக்கிக்கொண்டார்கள். இதனால் ஆயிஷா (ரலி) அவர்களும் ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்டும்கூட அவர்கள் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று, நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அவர்களின் வாயில் மண்ணைத் தூவிவிட்டு, நீங்கள் தொழச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "இப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவார்கள்; என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். (அதைப் போன்றே) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ்சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும், "இப்படியா நீ நடந்து கொள்கிறாய்?" என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3629 — Sahih Muslim 17:62
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ امْرَأَةً أَحَبَّ إِلَىَّ أَنْ أَكُونَ فِي مِسْلاَخِهَا مِنْ سَوْدَةَ بِنْتِ زَمْعَةَ مِنِ امْرَأَةٍ فِيهَا حِدَّةٌ قَالَتْ فَلَمَّا كَبِرَتْ جَعَلَتْ يَوْمَهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِعَائِشَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ قَدْ جَعَلْتُ يَوْمِي مِنْكَ لِعَائِشَةَ . فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْسِمُ لِعَائِشَةَ يَوْمَيْنِ يَوْمَهَا وَيَوْمَ سَوْدَةَ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கூர்மையான அறிவும் திடமான மனமும் கொண்ட சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்களைத் தவிர, வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் "அவராக நான் இருக்க வேண்டும்" என்று நான் விரும்பியதில்லை. சவ்தா (ரலி) அவர்கள் முதுமை அடைந்தபோது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ஒதுக்கப்பட்ட தமக்குரிய முறை நாளை சவ்தா (ரலி) அவர்கள் எனக்கு விட்டுக் கொடுத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஒதுக்கிய (முறை) நாளை நான் ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டேன்" என்று நபி (ஸல்) அவர்களிடம் சவ்தா கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குரிய முறைநாளையும் சவ்தா (ரலி) அவர்களுக்குரிய முறை நாளையும் சேர்த்து இரண்டு நாட்களை எனக்கு ஒதுக்கினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டவர்களில் சவ்தா (ரலி) அவர்களே முதல் பெண்மணி ஆவார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே (மஹ்ரின்றி) கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். நான், "ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) அன்பளிப்பாக வழங்கவும் செய்வாளா?" என்று சொல்லிக் கொண்டேன்."(நபியே! உம் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை" (33:51) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் நபியவர்களிடம் "உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்" என்று சொன்னேன். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், "ஒரு பெண் தன்னைத் தானே ஓர் ஆணுக்குக் கொடையாக வழங்க வெட்கப்பட மாட்டாளா?" என்று கூறிவந்தேன். பின்னர் "(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்" எனும் (33:51ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் நபியவர்களிடம் "உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்கிறான்" என்று சொன்னேன். அத்தியாயம் :
ஹதீஸ் 3633 — Sahih Muslim 17:66
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ حَضَرْنَا مَعَ ابْنِ عَبَّاسٍ جَنَازَةَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِسَرِفَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ هَذِهِ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا رَفَعْتُمْ نَعْشَهَا فَلاَ تُزَعْزِعُوا وَلاَ تُزَلْزِلُوا وَارْفُقُوا فَإِنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تِسْعٌ فَكَانَ يَقْسِمُ لِثَمَانٍ وَلاَ يَقْسِمُ لِوَاحِدَةٍ . قَالَ عَطَاءٌ الَّتِي لاَ يَقْسِمُ لَهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىِّ بْنِ أَخْطَبَ .
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதித் தொழுகையில்) நாங்கள் "சரிஃப்"எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவர் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு அவர்கள் (இரவைப்) பங்கிட்டுவந்தார்கள்; ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை. அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவைப் பங்கிட்டுக் கொடுக்காத அந்தத் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் ஆவார்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மதீனாவில் இறந்த நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்தாம் இறுதியானவர் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்ணை மணந்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் என்னிடம், "ஜாபிரே! நீ மணமுடித்து விட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம், (மணமுடித்துவிட்டேன்)" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(அவள்) கன்னிப் பெண்ணா? அல்லது கன்னி கழிந்த பெண்ணா?"என்று கேட்டார்கள். நான் "(அவள்) கன்னி கழிந்த பெண்" என்று கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு நீ அவளுடன் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர்.எனவே, (வயதில் சிறியவளான அனுபவமில்லாத கன்னிப் பெண்ணை மணப்பதால்) அவள் எனக்கும் என் சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையாக இருந்துவிடுவாள் என்று நான் அஞ்சினேன். (எனவேதான், கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டேன்)" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், இ(வ்வாறு நீ செய்த)து சரிதான்!" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) சொன்னார்கள்: (மூன்று நோக்கங்களுக்காக) ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. 2. அவளது செல்வத்திற்காக. 3. அவளது அழகிற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணமுடித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "கன்னிகழிந்த பெண்ணை மணந்து கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்களைவிட்டும்,அவர்களுடன் (கொஞ்சிக் குலவி) விளையாடுவதைவிட்டும் நீ எங்கே விலகிச் சென்றுவிட்டாய்?" என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்த ஹதீஸை (அறிவிப்பாளர்) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், "நான் இந்த ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள். அத்தியாயம் :