وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ، جَعْفَرٍ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا .
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ، جَعْفَرٍ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا .
ஹதீஸ் 3395 — Sahih Muslim 15:599
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ ابْنَ، عُمَرَ كَانَ يَأْتِي قُبَاءً كُلَّ سَبْتٍ وَكَانَ يَقُولُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْتِيهِ كُلَّ سَبْتٍ .
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். "நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மினாவில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஓர் இளம் பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? உங்கள் கடந்த கால (இளமை) நிகழ்வுகளை அவள் உங்களுக்கு நினைவு படுத்தக்கூடும்" என்றார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் "மினா"வில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, "அபூஅப்திர் ரஹ்மானே! இங்கே வாருங்கள்" என்று கூறி, தனியான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். (திருமணத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு) தேவை உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்கமா இங்கே வா" என என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். அப்போது அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஒரு கன்னிப்பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? நீங்கள் அனுபவித்த இளமைக் காலத்தை அது உங்களுக்கு மீட்டுத் தரக்கூடும்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக்கொண்டு) அவர்களில் ஒருவர், "நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்" என்று சொன்னார். மற்றொருவர் "நான் புலால் உண்ண மாட்டேன்" என்றார். இன்னொருவர், "நான் படுக்கையில் உறங்கமாட்டேன்" என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டு விடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்றார்கள். அத்தியாயம் :