மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவார்" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரத்த உறவு" என்பதைக் குறிக்க "ரஹிம்" எனும் சொல்லுக்குப் பதிலாக "நசப்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் உங்களது நிலை என்ன?" அல்லது, "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளை நீங்கள் பெண் கேட்கக் கூடாதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஹம்ஸா என் பால்குடிச் சகோதரர் ஆவார். (எனவே, நான் அவருடைய மகளை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) அபூசுஃப்யானின் புதல்வி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நான் அவர்களிடம், "என் சகோதரியான அபூசுஃப்யானின் புதல்வி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் "அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்" என்றேன். அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்! மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்)பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப் பட்டதன்று" என்றார்கள். (சகோதரிகளை ஒரே நேரத்தில் மணப்பது கூடாது என்பதே காரணம்.)நான், "தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வைப் பெண் கேட்பதாகக் கேள்விப் பட்டேனே!"என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அவர்கள், "அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் அவளுடைய தந்தை (அபூசலமாவு)க்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّحَدَّثَهُ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَتْهَا أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي عَزَّةَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتُحِبِّينَ ذَلِكِ " . فَقَالَتْ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِي خَيْرٍ أُخْتِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَإِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ . قَالَ " بِنْتَ أَبِي سَلَمَةَ " . قَالَتْ نَعَمْ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ " .
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (அபூசுஃப்யானின் புதல்வியான) என் சகோதரி "அஸ்ஸா"வைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சகோதரிகளை ஒரே நேரத்தில் மணமுடிப்பது கூடாது என்பதால்) அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார் உம்மு சலமாவின் முந்தைய கணவர்) அபூசலமாவின் மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் (அபூ சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் (உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடைய சகோதரியின் பெயர்) "அஸ்ஸா" என்ற குறிப்பு காணப்படவில்லை. யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அது இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :